இரணியல் அருகே பெயிண்டர் திடீர் சாவு - போலீசார் விசாரணை

மாலை டீ குடித்துவிட்டு இருக்கும்போது திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டாலின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இரணியல் அருகே பெயிண்டர் திடீர் சாவு - போலீசார் விசாரணை
Published on

இரணியல் :

பூவன்கோடு அருகே உள்ள செங்கோடி ஒட்டலிவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 53). பெயிண்டர். இவருக்கு ஜெயா (49) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். ஸ்டாலின் தற்போது குடும்பத்துடன் நெய்யூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஸ்டாலின் தினவிளையில் பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார்.

மாலை டீ குடித்துவிட்டு இருக்கும்போது திடீரென நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை அவருடன் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஸ்டாலின் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து அவரது மகன் லிபின்சாமுவேல் (21) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com