ஞாறான்விளை அகதிகள் முகாம் தலைவர் தூக்குபோட்டு தற்கொலை

அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
ஞாறான்விளை அகதிகள் முகாம் தலைவர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

குழித்துறை :

மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ஞாறான்விளை இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் பிறேமராஜ் ரவிஷாந்தர் (வயது 54). இவர் இலங்கை அகதிகள் முகாமில் தலைவராக இருந்து வருவதோடு, அகதிகள் முகாமில் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு முன்னின்று தீர்வு கண்டு வந்தார்.

இந்நிலையில் அவரது மனைவி மற்றும் பிள்ளை கள்அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com