என் மலர்
நீங்கள் தேடியது "கஜபூஜை"
- கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடக்கிறது
- கஜபூஜையுடன் இன்று காலை தொடங்கியது
கன்னியாகுமரி :
உலக நன்மைக்காக கன்னியாகுமரி விவேகா னந்தர்பாறை நினைவா லயம் மற்றும் கன்னியா குமரி, தூத்துக்குடி கிளை விவேகானந்த கேந்திரம் ஆகியவை இணைந்து ஸ்ரீ மகா ருத்ர சத சண்டி பெருவேள்வி யாகத்தை கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ஏகாட்சர மகா கணபதி கோவிலில் இன்று நடத்தின.
முதலில் நெத்தி பட்டம் அணிவித்து அலங்க ரிக்கப்பட்ட யானையை வைத்து கஜ பூஜை நடந்தது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தது. தமிழ்நாடு மற்றும் மும்பையை சேர்ந்த 64 சிவாச்சாரியார்கள் வழிபாட்டை நடத்தினார்கள்.
இன்று காலை தொடங்கிய வேள்வி பூஜை வருகிற 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி விவேகா னந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதா கிருஷ்ணன், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வெள்ளி மலை ஆசிரம தலைவர் சுவாமி சைதன்யானந்தஜி மகராஜ், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வின் தூத்துக்குடி கிளை பொறுப்பாளர் முத்துக் குமார், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாபன்.
கிருஷ்ணன் கோவில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட தலைவர் சின்னத்தம்பி, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக் குமார், கன்னியாகுமரி காந்திஜி கடை வியாபாரிகள் சங்க செயலாளர் தம்பித் தங்கம், பார்க்வியூபஜார் வியாபாரிகள் சங்க செய லாளர் பகவதியப்பன், விவேகானந்த கேந்திர ஒப்பந்ததாரர் தினேஷ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறையில் இயற்கையாக வே அம்மனின் கால் பாதம் பதிந்திருந்த ஸ்ரீபாத மண்டபத்தில் இன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை சண்டி பாராயணம் நிகழ்ச்சி நடக்கிறது.நாளையும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.






