என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரிவேட்டை திருவிழா கடைகள் ரூ.2½ லட்சத்துக்கு ஏலம்

- வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
- மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 24-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது. திருவி ழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷே கம், அலங்கார தீபாராதனை, வாகன பவனி, இன்னிசை கச்சேரி, பரதநாட்டியம், பட்டிமன்றம், சிறப்பு அன்ன தானம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 24-ந்தேதி நடக்கி றது. இதையொட்டி அன்று மதியம் 1 மணிக்கு பகவதி அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் வேட்டை மண்டபத்தை சென்றடைகிறது. இதை யொட்டி மகாதானபுரம் 4 வழிச்சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஏராள மான மிட்டாய் கடைகள், வளையல் கடைகள், ஐஸ் வியாபாரம், விளையாட்டு சாதன பொருட்கள் கடை கள், ராட்சத ராட்டினம், சிறுவர்கள் விளையாடும் சறுக்கு விளையாட்டு மற்றும் சுழலும் ராட்டினம் உள்பட ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்க ளும் இடம்பெறுகின்றன.
இந்த பகுதி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடம் என்பதால் அந்த பகுதியில் திருவிழா காலங்களில் கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு இந்து அறநிலையத்துறை ஏலம் விட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதியில் ஒரு நாள் மட்டும் திருவிழா கடைகள் நடத்துவதற்கான உரிமையை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.
குமரி மாவட்ட கோவில் களின் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராம கிருஷ்ணன், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில் களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த், ஆய்வாளர் சரஸ்வதி, கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில் ஸ்ரீகாரியம் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் சுசீந்திரத்தில் உள்ள குமரி மாவட்ட திருக்கோவில் அலுவலகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டு போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.
திருவிழா கடைகள் ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கு ஏலம் போனது. சுசீந்திரம் அக்கரையை சேர்ந்த குமார் என்பவர் இந்த திருவிழா கடைகளை ஏலம் எடுத்துள் ளார். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பரி வேட்டை திருவிழா நடை பெறும் மகாதானபுரம் 4 வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதி மற்றும் நாகர் கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை பகுதி மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் அமைந்து உள்ள பகுதி, பஞ்சலிங்கபுரம் செல்லும் சாலை உள்பட பல்வேறு பகுதிகளில் மிட்டாய் கடைகள் வைக்க இப்போதே முன்பதிவு செய்ய தொடங்கி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
