என் மலர்
கன்னியாகுமரி
- அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.
- காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது
கன்னியாகுமரி :
மகாத்மா காந்தியடி களின் 155-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதேபோல மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரின் 48-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்தில்உள்ள காந்தி அஸ்தி கட்டம் (நினைவிடம்) மற்றும் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜரின் மார்பளவு வெண்கல சிலைக்கு அனைத்து கட்சி தலைவர்கள் மாலை அனைவித்தும் மலர்தூவியும்மரியாதை செலுத்தினார்கள்.
அரசு சார்பில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், குமரி மாவட்ட கலெக்டர்ஸ்ரீதர், ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான்ஜெகத்பிரைட், அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு, தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர் தாமரை பாரதி, கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் ராஜேஷ், மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார், வைகுண்ட பெருமாள், பேரூராட்சி சுகாதார அதிகாரி முருகன், சுகாதாரம் மேற்பார்வையாளர் பிரதீஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்வசந்த்எம்.பி. தலைமையில் அகஸ்தீஸ்வரம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், தெற்கு வட்டார தலைவர் சாம்சுரேஷ்குமார் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பாரதிய ஜனதா சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார்.
- வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.
ராஜாக்கமங்கலம் :
வெள்ளிச்சந்தை அருகே முட்டம் அழிக்கால் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஜான் ரோஸ். மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பிரேமா (வயது 58). இவர்களுக்கு ரஷ்மி, மேரி லதா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் ரஷ்மியை திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொடுத்து ள்ளனர். மேரிலதா அழிக்காலில் உள்ளார்.
நேற்று முன்தினம் பிரேமா திருவனந்தபுரத்தில் உள்ள ரஷ்மி வீட்டிற்கு செல்வதாக சென்று வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். மாலை வெகு நேரமாகியும் அவர் ரஷ்மி வீடு சென்று சேரவில்லை. உடனடியாக அவர்கள் பிரேமாவை திருவனந்தபுரம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை இது குறித்து பதட்டம் அடைந்த ஜான் ரோஸ் குடும்பத்தினர் வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். ஜான் ரோசின் மகள் மேரிலதா கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து பிரேமாவை தேடி வருகிறார்கள்.
- மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
- திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட்ட நிலம் வாங்குவோர் விற்போ ர் நலச்சங்க கூட்டம் அதன் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் பால்குளத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-
கன்னியாகுமரி மாவ ட்டம் நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்ச னைகளில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மாவட்ட பதிவாளரிடம் ஏற்கனவே மனு அளிக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தங்கள் நிலங்களை விற்க முடியாத பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப முடியாமலும், திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் நிலம் தொடர்பா ன தொழில் செய்வோர் அண்டை மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் கவன த்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
இக்கூட்டத்தில் நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கௌரவத் தலைவர் எஸ்.அழகேசன், செயலர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் டி.பாலகிரு ஷ்ணன், சுதர்சன், தீபன் சக்ரவர்த்தி, சம்பூர்ண தேவராஜன், விஸ்வை சந்திரன், சொர்ணப்பன், சில்வஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
- காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
என்.ஜி.ஓ.காலனி :
குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளை தலைவர் சி.டி. ஆர். சுரேஷ் தலைமை தாங்கி நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் குமரி மாவட்ட விக்ரம் பிரபு நற்பணி மன்ற தலைவர் கருத்திருமன், குமரி மாவட்ட பிரபு அறக்கட்டளையின் செயலாளர் வீரசூரபெருமாள், சட்ட ஆலோசகர் வக்கீல் ரெங்கன் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவிச்சந்திரன், தவசிலிங்கம், சத்தியன், சுகுமாரன், பனிஜெஸ்டஸ், நாகராஜபிரபு, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
- பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பவனி
- வருகிற 12-ந்தேதி நடக்கிறது
நாகர்கோவில் :
தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலை நகராக பத்மனாபபுரம் இருந்தபோது அரண்மனை யில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் நவராத்திரி விழா நடந்து வந்தது. பின்னர் தலைநகர் திரு வனந்தபுரத்திற்கு மாற்றப் பட்டது. அப்போது சில ஆண்டுகள் மட்டுமே இங்கு விழா நடந்தது. பின்னர் விழா திருவனந்த புரம் அரண்ம னைக்கு மாற்றப் பட்டது. இதற்காக குமரியில் இருந்து சுசீந்திரம் முன்னு தித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று வருவது ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது.இந்த ஆண்டு நவராத்திரி விழா தொடங்குவதை யொட்டி சாமி விக்ரகங்கள் வருகிற 12-ந்தேதி கேரளாவிற்கு புறப்பட்டு செல்கின்றன. விழாவில் பங்கேற்க 11-ம் தேதி சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைகிறது.
12-ந்தேதி காலையில் வேளிமலை குமாரசாமி, பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் கோவிலை வந்தடையும்.
அங்கிருந்து பவனி கேரள போலீசாரின் அணி வகுப்பு மரியாதையுடன் தொடங்கும். முன்னதாக பவனியின் முன்னே கொண்டு செல்லும் பூஜை யில் வைக்கப்பட்டிருக்கும் மன்னரின் உடைவாள் கைமாறும் நிகழ்ச்சி அரண்ம னையில் உள்ள உப்பரிகை மாளிகையில் 12-ந்தேதி காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறும் என தெரி விக்கட்டுள்ளது. நிகழ்வு களில் இருமாநில அமைச்சர் கள், உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
உடைவாள் கைமாறியதும் அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதியம்மன் ஆலயம் கொண்டு வரப்பட்டு பூஜைகள் செய்யப்படும். அங்கிருந்து அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி யானை மீது அமர, பல்லக்குகளில் சுசீந்திரம் முன்னுதித்தநங்கை, வேளிமலை முருகன் ஆகி யோர் வீற்றிருக்க பெண் களின் தாலப்பொலியுடன் பவனி தொடங்கும். அப்பவ னியானது கேரளபுரம், ராஜபாதை, பழையபள்ளி வழியாக திருவிதாங்கோடு சென்று அழகியமண்டபம் சென்று இரவு குழித்துறை சென்றடைகிறது. 13-ந்தேதி அங்கிருந்து புறப்பட்டு நெய்யாற்றின்கரை சென்றடையும். 14-ந்தேதி திருவனந்தபுரம் சென்றடை கிறது.
அங்கு தொடங்கும் நவ ராத்திரி பூஜையில் சரஸ்வதி தேவி கோட்டைக்ககம் நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரிய சாலை கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை செந்திட்டை பகவதி கோவிலிலும் பங்கேற்கின்ற னர். பின்னர் விஜயதசமிக்கு முடிந்து நல்லிருப்பை அடுத்து புறப்பட்டு 28-ந்தேதி பத்மனாபபுரம் வந்தடைகின்றன.
- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விடிய விடிய மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை அணை நேற்று 2½ அடி உயர்ந்த நிலையில் மழையின் காரணமாக இன்று மேலும் 3 அடி நீர்மட்டம் அதிகரித்து ள்ளது. இதன்மூலம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 117 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. விநாடிக்கு 2 ஆயிரத்து 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 5 அடி அதிகரித்த நிலையில் இன்று மேலும் 5 அடி உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் கடந்த 2 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இந்த அணைகளின் நீர்மட்டம் 13 அடியை கடந்து விட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 74.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொட ர்ந்து விடிய விடிய பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளது.
குழித்துறை தாமிரபரணி ஆறு, குஸ்தியாறு, கோதை யாறு, மோதிரமலை ஆறு போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிப்பவர்கள், பாதுகா ப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேர்கிளம்பி பேரூராட்சி க்குட்பட்ட செங்கோடி பகுதியில் சிவன்கோவில் அருகில் உள்ள அரச மரம் நேற்று காற்று பலமாக வீசியதில் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரம த்துக்கு ஆளானர்கள். இந்த தகவல் அறிந்ததும் வேர்கி ளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அந்த அரச மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
களியல் 74.2, பாலமோர் 65.6, பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 53.4, புத்தன் அணை 53, திற்பரப்பு 40.4, சுருளோடு 38.6, அடை யாமடை 35.1, சிற்றாறு 1-34.6, கொட்டாரம் 30.6, சிற்றாறு 2-30.4, கன்னிமார் 26.8, குழித்துறை 24, மாம்பழத்துறையாறு 22.5, பூதப்பாண்டி22.2, ஆனை கிடங்கு 20.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 16.2, முள்ளங்கி னாவிளை 15.4, கோழிப்போ ர்விளை 12.5, தக்கலை 11.2, குருந்தன்கோடு 8, ஆரல்வா ய்மொழி 7.4, குளச்சல் 6.4, முக்கடல் அணை 6.4, இரணி யல் 3.
- இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார்
- மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
மார்த்தாண்டம் :
கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலை வகித்தனர்.
இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி மனித வாழ்வுக்கு ஓர் இலக்கணமாக திகழ்ந்தார் என்னும் மையச் சிந்தனையின் அடிப்படையில் கவிதை, நோக்கவுரை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
மேலும் மழலையர்கள் காந்தியடிகள் போன்று வேடமணிந்து வந்திருந்தனர். மேல்வகுப்பு மாணாக்கர்களில் சிலர் மகாத்மா காந்தியடிகள் போன்று வேடமணிந்து அவரின் கொள்கைகளை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் சிறப்பாக பங்களித்த மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் வழிகாட்டுதலில் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் இதர பணியாளர்கள் செய்திருந்தனர்.
- சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
- காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை இளைய தலைமுறையினரிடையே தெரிவதற்கு இந்த கண்காட்சி
கன்னியாகுமரி :
மகாத்மா காந்தியடிகளின் 154-வது பிறந்த நாள் விழாவையொட்டி கன்னியா குமரி அரசு அருங்காட்சியகத்தில் "காந்தி ஒரு சகாப்தம்" என்ற தலைப்பில் காந்தியடிகளின் இளமைக்காலம் முதல் இறப்பு வரை சித்தரிக்கும் புகைப்பட தொகுப்பு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனை மாணவர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
இந்த கண்காட்சியை கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்திய வள்ளி திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
அகிம்சை வழியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் உழைத்தவர் மகாத்மா காந்தி. அவரின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், காந்தியடிகளின் எண்ணங்கள் மற்றும் கொள்கைகளை வரும் இளைய தலைமுறையினரிடையே எடுத்து செல்லும் நோக்கில் இந்த கண்காட்சி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கண்காட்சியில் காந்தியடி கள் பங்கேற்ற, உப்பு சத்தியா கிரகம், தண்டி யாத்திரை போன்ற அகிம்சை போராட்டங்கள், முக்கிய வரலாற்று நிகழ்வுகள், காந்தியின் இளமை கால புகைப்படங்கள் மற்றும் அவரின் குடும்பத்தினர் புகைப்படங்கள் என்று பல்வேறு புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்ப ட்டுள்ளன. இந்த கண்காட்சி இந்த மாதம் முழுவதும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கும். மேலும் காந்தியடிகள் என்றாலே கைராட்டை தான் அனைவரின் நினைவுக்கு வரும், அதன் நினைவாக கைராட்டையும் வைக்கப் பட்டுள்ளது. கண்காட்சியினை பொது மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
குளச்சல் :
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், குளச்சல் தொகுதி முன்னாள் செயலாளரும், குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஸ், நகர துணைச்செயலாளர் செர்பா, நகர ஜெ.பேரவை செயலாளர் வினோத், முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார்.
மார்த்தாண்டம் :
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கருங்கலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ரெமோன், பப்புசன், மாவட்டத் துணை செயலாளர்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜு, மாவட்ட பொருளாளர் ததேயு பிறேம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர் மனோன்மணி, ஒன்றிய செயலாளர் டி.பி. ராஜன், கோபால், மாஸ்டர் மோகன், ஜாண்சன், குழித்துறை நகர செயலாளர் வினுக்குமார், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், ரெகு, ஆனந்தராஜன், மணி, அருள்ராஜ், பபின்லால் உட்பட நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகர் மக்களின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது முக்கடல் அணை. இந்த அணையில் இருந்து தான் நாகர் மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை, மழையை நம்பி தான் உள்ளது. ஆனால் கடந்த காலத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் பொய்த்துப்போனதால், முக்கடல் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மைனஸ் அடிக்கு சென்றது.
இதனால் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக புத்தன் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 1 மாதம் மழை கொட்டிய போதும் முக்கடல் அணையின் நீர்மட்டம் உயரவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. முக்கடல் அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் நீர்மட்டம் பிளஸ் நிலைக்கு வந்தது. 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை அணையின் நீர்மட்டம் 2.30 அடியாக உள்ளது. தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து உள்ளதால், நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதன்மூலம் நாகர்கோவில் மாநகர மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கடற்கரையில் வலம் வந்தனர்
- கன்னியாகுமரியில் இன்று காலை மழை
கன்னியாகுமரி :
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சீசன் காலங்கள் மட்டுமின்றி வாரத்தின் கடைசி விடு முறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும், பண்டிகை காலங்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அறிவித்து கொண்டே வருகிறது.
தற்போது கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணி களின் வருகை அதிக அளவு உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் மழை மேகம் காரணமாக காலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர்.
வழக்கம்போல 4-வது நாளாக இன்றும் சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக அதிகாலை யில் கொட்டும் மழையிலும் குடை பிடித்துபடி சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டு இருந்தனர். ஆனால் அவர்க ளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். இன்றும் மழையின் காரணமாக சூரியன் உதய மான காட்சி தெள்ள தெளி வாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றும் சூரியன் உதயமாகும் காட்சியை காணமுடியாமல் ஏமாற்றத் துடன் காத்திருந்து திரும்பிச் சென்றனர். கொட்டு மழை யையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தபடி இருந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில் போன்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மழையின் காரணமாக கடலில் அலை அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க அச்சமடைந்தனர். மழை பெய்து கொண்டே இருந்ததால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களும் வெறிச் சோடி காணப்பட்டன.






