என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.வுடன் குளச்சல் அ.தி.மு.க.வினர் சந்திப்பு
Byமாலை மலர்2 Oct 2023 12:45 PM IST
- மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
குளச்சல் :
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக கன்னியாகுமரி சட்ட மன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து குளச்சல் நகர அ.தி.மு.க.வினர் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ் தலைமையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், குளச்சல் தொகுதி முன்னாள் செயலாளரும், குளச்சல் நகராட்சி கவுன்சிலருமான ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன், ஆனக்குழி சதீஸ், நகர துணைச்செயலாளர் செர்பா, நகர ஜெ.பேரவை செயலாளர் வினோத், முன்னாள் கவுன்சிலர் பெலிக்ஸ் ராஜன் மற்றும் துபாய் மாகீன், ரமேஷ்குமார், ஜோக்கியான், நடேசன், அம்பிலிகலா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X