என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூரியன் உதயமாகும் காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    X

    சூரியன் உதயமாகும் காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

    • கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி கடற்கரையில் வலம் வந்தனர்
    • கன்னியாகுமரியில் இன்று காலை மழை

    கன்னியாகுமரி :

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். சீசன் காலங்கள் மட்டுமின்றி வாரத்தின் கடைசி விடு முறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற நாட்களிலும், பண்டிகை காலங்களிலும், சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அறிவித்து கொண்டே வருகிறது.

    தற்போது கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணி களின் வருகை அதிக அளவு உயர்ந்துள்ளது. ஆனால் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரியில் மழை மேகம் காரணமாக காலை யில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர்.

    வழக்கம்போல 4-வது நாளாக இன்றும் சூரியன் உதயமாகும் காட்சியை காண்பதற்காக அதிகாலை யில் கொட்டும் மழையிலும் குடை பிடித்துபடி சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் திரண்டு இருந்தனர். ஆனால் அவர்க ளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம். இன்றும் மழையின் காரணமாக சூரியன் உதய மான காட்சி தெள்ள தெளி வாக தெரியவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றும் சூரியன் உதயமாகும் காட்சியை காணமுடியாமல் ஏமாற்றத் துடன் காத்திருந்து திரும்பிச் சென்றனர். கொட்டு மழை யையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் குடை பிடித்த படி சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்தபடி இருந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடா ஜலபதி கோவில் போன்ற கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மழையின் காரணமாக கடலில் அலை அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி குளிக்க அச்சமடைந்தனர். மழை பெய்து கொண்டே இருந்ததால் கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் சுற்றுலா தலங்களும் வெறிச் சோடி காணப்பட்டன.

    Next Story
    ×