search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை
    X

    குமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழை

    • அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நகர் பகுதிகள் மட்டுமின்றி மலையோர பகுதிகளிலும் மழை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கும் மேலாக விடிய விடிய மழை நீடித்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, பூதப்பாண்டி பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைகளுக்கு தண்ணீர் வரத்தும் அதிகரித்துள்ளது.

    பேச்சிப்பாறை அணை நேற்று 2½ அடி உயர்ந்த நிலையில் மழையின் காரணமாக இன்று மேலும் 3 அடி நீர்மட்டம் அதிகரித்து ள்ளது. இதன்மூலம் 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது. அணைக்கு 3 ஆயிரத்து 117 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணைக்கும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. விநாடிக்கு 2 ஆயிரத்து 677 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் நீர்மட்டம் 52.60 அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 5 அடி அதிகரித்த நிலையில் இன்று மேலும் 5 அடி உயர்ந்துள்ளது. பெருஞ்சாணி அணையில் கடந்த 2 நாட்களில் மட்டும் நீர்மட்டம் 10 அடி உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிற்றாறு-1, சிற்றாறு-2 அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது. இந்த அணைகளின் நீர்மட்டம் 13 அடியை கடந்து விட்டதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக களியல் பகுதியில் 74.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தொட ர்ந்து விடிய விடிய பெய்து வரும் மழையின் காரணமாக நீர்நிலைகளிலும் தண்ணீர் அதிக அளவு உள்ளது.

    குழித்துறை தாமிரபரணி ஆறு, குஸ்தியாறு, கோதை யாறு, மோதிரமலை ஆறு போன்றவற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் கரையோரம் வசிப்பவர்கள், பாதுகா ப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வேர்கிளம்பி பேரூராட்சி க்குட்பட்ட செங்கோடி பகுதியில் சிவன்கோவில் அருகில் உள்ள அரச மரம் நேற்று காற்று பலமாக வீசியதில் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் சாலையை கடந்து செல்ல முடியாத நிலமை ஏற்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரம த்துக்கு ஆளானர்கள். இந்த தகவல் அறிந்ததும் வேர்கி ளம்பி பேரூராட்சி தலைவர் சுஜிர்ஜெபசிங்குமார் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் அந்த அரச மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சரி செய்தனர். மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    களியல் 74.2, பாலமோர் 65.6, பேச்சிப்பாறை 57.6, பெருஞ்சாணி 53.4, புத்தன் அணை 53, திற்பரப்பு 40.4, சுருளோடு 38.6, அடை யாமடை 35.1, சிற்றாறு 1-34.6, கொட்டாரம் 30.6, சிற்றாறு 2-30.4, கன்னிமார் 26.8, குழித்துறை 24, மாம்பழத்துறையாறு 22.5, பூதப்பாண்டி22.2, ஆனை கிடங்கு 20.2, மயிலாடி 19.4, நாகர்கோவில் 16.2, முள்ளங்கி னாவிளை 15.4, கோழிப்போ ர்விளை 12.5, தக்கலை 11.2, குருந்தன்கோடு 8, ஆரல்வா ய்மொழி 7.4, குளச்சல் 6.4, முக்கடல் அணை 6.4, இரணி யல் 3.

    Next Story
    ×