என் மலர்
கன்னியாகுமரி
- 6-ந்தேதி நடக்கிறது
- கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி குகநாதீ ஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்தி ரத்தன்று 1008 சங்காபி ஷேகம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு புரட்டாசி மாத திருவாதிரை நட்சத்திர தினமான வருகிற 6-ந்தேதி காலை 10.30 மணிக்கு குகநாதீஸ்வர பெருமானுக்கு 1008 சங்காபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாரதனையும், 12.30 மணிக்கு வாகன பவனியும் நடக்கிறது. பலவண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட சப்பர வாகனத்தில் நடராஜ பெருமானும், சிவகாமி அம்பாளும் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை மேளதாளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு 1 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுளை கன்னியாகுமரி குக நாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.
- கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
- செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
என்.ஜி.ஓ.காலனி :
கன்னியாகுமரி மாவட் டம் சுசீந்திரம் அருகே உள்ள கோழிக்கோட்டு பொத்தை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37), கட்டிட தொழிலாளி. இவ ருக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த சீதா (29) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன், ஓரு மகள் உள்ளனர்.
முதுகலை பட்டப்படிப்பு படித்து விட்டு ஆசரியர் படிப்பும் படித்துள்ள சீதா, குலசேகரன் புதூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இதனால் தனது 2 குழந்தைகளையும் செங்கோட்டையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.
கணவருடன் வசித்த சீதா தினமும் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார். கடந்த 29-ந் தேதி அவர் வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் மாலையில் சீதா வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கணவர் கிருஷ்ணன் தேடி னார். ஆனால் எந்த தகவ லும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து சுசீந்திரம் போலீசில், கிருஷ்ணன் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பையா, சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து மாயமான சீதாவை தேடி வருகின்றனர். அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்பது குறித்து செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.
இதற்காக 2 தனிப்படை களும் அமைக்கப்பட்டன. அவர்கள் சொந்த ஊரான செங்கோட்டைக்கு சீதா சென்றிருக்கலாமா? என விசாரணை நடத்தினர். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை என்ற தகவல் கிடைத்தது. சீதா கடத்தப்பட்டு இருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடக்கிறது.
- நாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (5-ந்தேதி) நடக்கிறது. எனவே அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, சுசீந்திரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, அழகப்பபுரம், கொட்டாரம், சாமித்ேதாப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுப்பொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், காக்கமூர், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம், ஊட்டுவாழ்மடம், மேலகருப்புகோட்டை, புதுகிராமம், பொற்றையடி, தோப்பூர், தென்தாமரைகுளம், பால்குளம், ராமனாதிச்சன்புதூர், அஞ்சுகிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலைநாகர்கோவில் மின்வினியோக செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- மின் ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்கு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
என்.ஜி.ஓ.காலனி :
சுசீந்திரம் அருகே உள்ள பரப்புவிளையை சேர்ந்தவர் ஜெயசிங், கட்டிட தொழிலாளி. இவரது மகன் விஷ்வா (வயது 15). இவன் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று இவன், தனது நண்பர்களுடன் பழை யாற்றில் பெருக்கெ டுத்து ஓடும் வெள்ளத்தை பார்க்க சென்றான். வேகமாக சென்றபோது எதிர்பாராத விதமாக சறுக்கி விழுந்த விஷ்வா, அருகில் உள்ள மின் கம்பத்தை பிடித்துள் ளான். அப்போது மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தான்.
அவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மின் ஊழியர்களின் கவனக் குறைவே, மாணவன் விஷ்வா மின்சார தாக்குத லுக்கு ஆளானதற்கு கார ணம் என அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் அவர்கள் நாகர் கோவில்-கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் ஆசிராமம் சந்திப்பு பகுதி யில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்ட னர். அப்போது அங்கு வந்த சுசீந்திரம் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டிடத்திற்கு மின் இணைப்பு கொடுத்த போது, ஒரு வயர் கீழே விழுந் துள்ளது. அதனை முறையாக சரி செய்யாமல், மின் கம்பத்தில் மின் ஊழியர்கள் சுற்றி வைத்துச்சென்றனர். இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அந்த மின்கம் பத்தை மாணவன் விஷ்வா தொட்டதால் தான் மின்சா ரம் தாக்கி உள்ளது. எனவே மின் ஊழியர்களின் கவ னக்குறைவே இந்த விபத் துக்கு காரணம் என்றனர்.
இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி விசாரணை நடத்தி மின் ஊழியர்கள் ஆண்டாள்புரம் கெர்வின் (26), குலசேகரன்புதூர் சதீஷ் (40) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
- தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
- வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவில் தொழி லாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ. மணிகண்டபிரபு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ந்தேதி தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் எனது (ஜெ. மணிகண்டபிரபு) தலைமையில், தொழிலாளர் துணை ஆய்வாளர் குமரே சன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மன்னன் பெருமாள், ஸ்ரீதர், பால சுப்பிரமணியன் ஆகியோரால் நாகர்கோவில் வடசேரி, தக்கலை, குளச்சல், கருங்கல், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு மேற்ெகாள்ளப்பட்டது.
மேற்படி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களுக்கு அக்டோபர் 2-ந்தேதி விடுமுறை அளிக்கப் பட வேண்டும். அதற்கு மாறாக விருப்பத்தின் பேரில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது ஊதியத்து டன் கூடிய மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும். இதற்கு கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலை அளிப்பவர் படிவம் வி.ஏ.யிலும், உணவு நிறுவ னங்களின் வேலை அளிப்ப வர் படிவம் ஐ.வி.இ.இ.யிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் தொழிலா ளர்களிடம் கையொப்பம் பெற்று ஒரு நகலை நிறுவ னத்தின் அறிவிப்பு பலகை யிலும், மற்றொரு நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை உதவி ஆய்வாளர்க ளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்பே அனுப்பி வைக்க வேண்டும். இதனை கடைப் பிடிக்க தவறிய மற்றும் விடுமுறை அளிக்காத 33 கடைகள், 20 உணவு நிறுவனங்களின் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காணாமல் போன ஆரோக்கியம், ஆன்றோ 2 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.
- குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற மீனவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
நாகர்கோவில்:
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு பகுதியில் தமிழகத்தை சோ்ந்த 16 மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் படகு கடல் சீற்றத்தினால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 13 மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். மீதி 3 பேர் கடலில் காணாமல் போய் விட்டனர். அதில் மீனவர் பயசின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் விஜய்வசந்த் எம்.பி. விபத்தில் உயிரிழந்த குளச்சல் கொட்டில்பாடு ஊரை சேர்ந்த பயஸ் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். மேலும் காணாமல் போன ஆரோக்கியம், ஆன்றோ ஆகிய 2 மீனவர்களின் வீடுகளுக்கும் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மற்ற மீனவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார். காணாமல் போன மீனவர்களை தேடும் பணியை தீவிரப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும், மேலும் கடலில் கவிழ்ந்த படகு மற்றும் அதில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.
- பஸ் உடைக்கப்பட்டதால் பரபரப்பு
- ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட 14-வது வார்டு அருந்ததியர் தெருவில் சுமார் 250-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கையை நீண்ட நாட்களாக முன்வைத்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் அளித்து உள்ளனர். மேலும் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அருந்த தியர் தெருவை சேர்ந்த மக்கள் பட்டா கேட்டு அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை பற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு பட்டா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த னர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெருவில் இருந்து பேரணியாக சாலையை நோக்கி வந்தனர். அவர்கள் சாலையோரம் நின்ற படி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.
திடீரென ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியல் செய்ய அனுமதி இல்லை என கூறினர்.
ஆனாலும் மக்கள் போலீசாரின் பேச்சை பொருட்ப டுத்தாமல் தொடர்ந்து சாலை மறியல் நடத்தினர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தாசில்தார் ராஜேஷ், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராமர், திருமுருகன், அருண் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனாலும் மறியலை பொதுமக்கள் கைவிடவில்லை.
அப்போது மறியிலில் ஈடுபட்ட 30 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென கையில் வைத்திருந்த மண்எண்ணெய் கேனை எடுத்து தற்கொலைக்கு முயன்றார். அவர் மண் எண்ணெய்யை தனது உடல் முழுவதும் ஊற்றினார். இதனை கண்ட போலீசார் அந்த வாலிபரிடம் இருந்து கேனை பிடுங்கினர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றி னர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதனைதொடர்நது மறியிலில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கினர். பின்னர் மறியலில் ஈடுபட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் கைது செய்து அரசு பஸ்சில் ஏற்றினர். மேலும் மறியல் செய்த ஆண்களை ஒரு மினிபஸ்சில் ஏற்றினர்.
அப்போது மினிபஸ்சில் மறியல்காரர்கள் ஏற மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், மறியலில் ஈடுபட்ட ஆண்களுக்கும் இடையே தகராறுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த மறியல்காரர்கள் சாலையில் கிடந்த கற்களை எடுத்து மினி பஸ் மீதும், போலீசார் மீதும் வீசத் தொடங்கினர். இதில் மினிபஸ்சின் முன் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும் கல் வீச்சில் கோட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் மற்றும் போலீஸ்காரர் ஜோஸ் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சூழ்நிலை கட்டுக் கடங்காமல் சென்றதால், மறியல்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். போலீசாரின் தடியடிக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மறியலில் ஈடுபட்ட ஆண்கள் நாலாபுற மும் சிதறி ஓட தொடங்கினர்.
போலீசாரின் தடியடியில் குமார், கிருஷ்ணன் உள்பட 3 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் அருகில் உள்ள நகர்புற சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனர். இதில் போலீஸ் ஏட்டு ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீ சாரின் தடியடியால் கிருஷ்ணன்கோவில் சாலை பகுதி போர்களமாக கட்சி அளித்தது.
இதனைதொடர்ந்து தப்பி ஓடிய மறியல்காரர்களை போலீசாா் வீடு, வீடாக சென்று விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
- தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில்மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மலையோர கிராமங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது.
தடிக்காரன்கோணத்தை அடுத்துள்ள கீரிப்பாறையில் அரசு லேபர் காலனிக்கு செல்வததற்கு தரைப்பாலம் உள்ளது. கடந்த 2 தினங்களாக பெய்து வந்த மழையின் காரணமாகஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த தரைப்பாலத்தில் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக கோதையாறு, மோதிரமலை, குற்றியார் போன்ற மலையோர பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள தரை பாலங்களும் தண்ணீ ரில் மூழ்கின. இதனால் 10 கிராமங்களுக்கு 3-வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதி மக்கள் வேலைகளுக்கு வெளியூர் செல்ல முடியாமல் அவதி படுகிறார்கள்.
கடந்த 4 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதியில் மழை பெய்து வரும் நிலையில் இன்று காலையிலும் மழை பெய்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் வள்ளம், கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.ஒரு சில கட்டுமரங்களே மீன் பிடிக்க சென்றன.இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.
இதற்கிடையே ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்ற 7 விசைப்படகுகள் இன்று காலை கரை திரும்பின. அவற்றில் குறைவான கணவாய் மீன்களே கிடைத்தன.
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி
- குமரி மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது
நாகர்கோவில் :
நாகர்கோயிலில் காதி கிராப்ட் தீபாவளி தள்ளுபடி துணி விற்பனை தொடக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்று முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 வழி சாலைகள் இல்லாததாலும் குறுகலான சாலைகள் காணப்படுவதாலும் அதிகனரக வாகனங்களுக்கு வரையறை செய்யப்பட்டு உள்ளது.
அதி கனரக வாகனங்களில் கற்களை கேரளா வுக்கு ஏற்றி செல்வது தொடர்பாக பலமுறை லாரி உரிமையாளர்கள் மற்றும் கல்குவாரி உரிமையாளர்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைத்து பேசிய நிலையில் உரிய தீர்வு எடுக்கப்படாத நிலை ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களது பேராசைக்காக மாவட்ட மக்களின் உயிரை அடகு வைக்க முடியாது என்பதால் தற்போது அதி கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் இந்த வரையறைக்கு ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உள்ளது. இதனை எதிர்த்து அரசின் சார்பில் மேல் முறையீடு செய்ய ஆலோசித்து வருகிறோம்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கற்களை கொண்டு செல்வதை மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாது. மத்திய அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை 10 கிலோமீட்டர் சுற்றளவு என்பதை பூஜ்யம் முதல் மூன்று கிலோ மீட்டர் சுற்றளவு என குறைத்ததும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கனிம வளங்களை கொண்டு செல்வதை மாநில அரசால் தடுக்க முடியாது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் தீர்மானித்ததும் தான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவிற்கு கொண்டு செல்வதை தடுப்பதற்கு சவாலாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறி னார்.
- விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து 3 மணி நேரம் தாமதம்
- கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக அமாவாசை, பவு ர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் பவுர்ண மியையொட்டி கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட கடல் நீர்மட்டம் தாழ்வு காரண மாக கன்னியாகுமரி கடல்நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலையில் 2 மணி நேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்க ப்பட்டது.
மழை காரணமாக இன்று காலை 4-வது நாளாக கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து காணப்ப ட்டது. அதேபோல இன்னொ ரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்த ளிப்பா கவும் காணப்படுகிறது.
கடல் நடுவில் அமை ந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமை ந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்ப ட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அர பிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும், சீற்ற மாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்க ப்படவில்லை. இதனால் இன்று காலை விவே கானந்தர் நினைவு மண்ட பத்தை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறை நுழைவு வாயிலில் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் காத்து இருந்தனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலை க்கு திரும்பியது. இதைத்தொ டர்ந்து 3 மணி நேரம் தாமதமாக 11 மணிக்கு விவே கானந்தர் மண்டப த்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். திருவ ள்ளுவர் சிலைக்கும். விவேகானந்தர் மண்டப த்துக்கும் இடையே பாலம் அமைக்கும் பணி நடை பெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடை பெறவில்லை.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்ப ட்டது. கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் மீன்பிடித் தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இன்று காலை கன்னியா குமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்த ப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
- பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது
- உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நா ட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்ம னை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இங்கு வரும் பக்தர்ளுக்கு தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக அரசு இந்த கோவிலில் அன்னதான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான திட்டத்தை பக்தர்களின் நன்கொடை மூலமும், கோவிலில் உள்ள வாடா விளக்கு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னதான உண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலமும் திருக்கோவில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. இந்த அன்னதான உண்டியல் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த மாதத்துக்கான அன்னதான உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாள ருமான ஆனந்த், நாகர்கோ வில் இந்து சமய அறநிலை யத் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பொருளாளர் கண்ணதா சன், கணக்கர் முருகையா ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் காணிக்கையாக ரூ.74 ஆயிரத்து 573 வசூல் ஆகி இருந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டியல்களும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் எண்ணப்ப ட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
- மேயர் மகேஷ் பாராட்டி பொன்னாடை அணிவித்தார்
- கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார்.
கன்னியாகுமரி :
கொட்டாரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில்உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களைஅதிகப்படியாக நியமித்து சிறப்பாக பணியாற்றியதில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மேயர் மகேஷ் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர்தாமரை பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின்வெற்றிக்காக அயராது பாடுபடுவது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.






