குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கு பரிசு

மேயர் மகேஷ் பாராட்டி பொன்னாடை அணிவித்தார்கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார்.
குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டவருக்கு பரிசு
Published on

கன்னியாகுமரி :

கொட்டாரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கொட்டாரத்தில்உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம்தெற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் பாபு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.கூட்டத்தில் குமரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களைஅதிகப்படியாக நியமித்து சிறப்பாக பணியாற்றியதில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள் முதல் பரிசு பெற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு மேயர் மகேஷ் பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. வர்த்தகர் அணி மாநில இணை செயலாளர்தாமரை பாரதி உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரின்வெற்றிக்காக அயராது பாடுபடுவது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com