என் மலர்
காஞ்சிபுரம்
நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது
ஆலந்தூர்:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்குதல் அதிகமாக உள்ளது. தமிழகத்திலும் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உட்பட சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பொருட்களை வெளி நாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படுகிறது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி இந்திய விமானப்படையின் தனி விமானம் நேற்று இரவு டில்லியிலிருந்து சென்னை பழைய விமானநிலையம் வந்தது. அதில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் வெண்டிலேட்டர்கள், மற்றும் மருத்துவ உபகரணங்கள் 35 பார்சல்களில், மொத்தம் 888 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தன.
சென்னை விமானநிலைய அதிகாரிகள் மருத்துவ பார்சல்களை தமிழக அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.

‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு ‘எமர்ஜென்சி’ விளக்கில் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர்.
அப்போது மங்களூருவைச் சேர்ந்த முகமது அரபாத் (வயது 24) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில் ‘எமர்ஜென்சி’ விளக்கு ஒன்று இருந்தது. ஆனால் அது வழக்கத்துக்கு மாறாக அதிக எடையுடன் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், ‘எமர்ஜென்சி’ விளக்கை பிரித்து பார்த் தனர்.
அதில் பேட்டரிக்கு பதிலாக தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 400 கிராம் தங்க கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது அரபாத்தை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த முகமது அஸ்ரப் (வயது 21) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் ஒருவித பதற்றத்துடன் இருந்தார். அதிகாரிகளிடம் முன்னுக்குபின் முரணாகவும் பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.
ஆனால் அவர் நடக்கும்போது ஒரு காலை நொண்டியபடி ஒருவிதமாக நடந்து வந்தார். அதுபற்றி அதிகாரிகள் கேட்டதற்கு, கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக காலில் கட்டுப்போட்டு இருப்பதாகவும் கூறினார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரது காலில் கட்டி இருந்த கட்டை பிரித்து சோதனை செய்தனர். அதில் அந்த கட்டுக்குள் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.89 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக முகமது அஸ்ரப்பை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தினர். அதில், துபாய் விமான நிலையத்தில் விமானத்தில் ஏற வந்தபோது அங்கிருந்த ஒருவர் இதை எனது காலில் கட்டிவிட்டார். சென்னை விமான நிலையத்தில் ஒருவர் வந்து இந்த கட்டை பெற்றுக்கொள்வார் என்று கூறியதாக தெரிவித்தார்.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அவரை விமான நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்திருந்த சென்னையை சேர்ந்த முகமது இப்ராகீம் (39) என்பவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் மேலும் விசாரித்து வருகின்றனர்.

உத்திரமேரூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
உத்திரமேரூர் அடுத்த அரசாணி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் அதே கிராமம் நியூ பாரதி நகரை சேர்ந்த ஹரிதா வயது 20 என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. கர்ப்பிணியான ஹரிதாவுக்கு கரு கலைந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த ஹரிதா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) சாப்பிட்டு விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இவரை உடனடியாக உத்திரமேரூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்பு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தாம்பரம் இந்து மிஷன் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஹரிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. திருமணமாகி 4 மாதங்கள் ஆவதால் இதுகுறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
உத்திரமேரூர் அருகே ஒரே கிராமத்தில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த மடம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தமிழக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள சிலர் புதுச்சேரியில் உள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து மடம் கிராமத்தை சேர்ந்த சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
அப்போது அவர்களில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்தது. இதனால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காஞ்சீபுரத்தில் கொரோனா நோயாளி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் பெருமாள் கோவில் அருகே வசித்து வந்தவர் 54 வயதானவர். இவர் கடந்த 11-ந்தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம் செட்டியார் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் 2 மணியளவில் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த காஞசீபுரம் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா தொற்று காரணமாக அவர் நேற்று மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், இநதநிலையில் இது போன்ற முடிவு எடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மடிப்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக கணவர் மீது பெட்ரோலை ஊற்றி எரித்து கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:
மடிப்பாக்கம் கைவேலி தந்தை பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி.
இஸ்திரி கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும்.
நேற்று மாலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது திடீரென்று பாண்டி உடலில் தீப்பிடித்தபடி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அவரிடம் போலீசார் விசாரித்தபோது, குடும்ப தகராறில் மனைவி தன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டை வெளிப்பக்கமாக பூட்டி விட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை பாண்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆலந்தூர்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெர்மன், பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து 900 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சென்னை வந்தன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை. இதையடுத்து தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், காலி கண்டெய்னர்களை கேட்டது.
அதன்படி சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் உடன், இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது.
மேலும் 128 காலி சிலிண்டர்களுடன் இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை நடத்திய பின் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்பு அதிகாரிகள் அந்த காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதைப்போல் இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவைகள் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குடோனில் வைக்கப்பட்டு,ஆக்சிஜன் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஆக்சிஜன் தயாரிக்க தற்காலிகமாக 3 மாதங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேகரித்து வைக்க போதிய சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் இல்லை. இதையடுத்து தமிழக அரசு சிங்கப்பூர் அரசிடம் காலி சிலிண்டர்கள், காலி கண்டெய்னர்களை கேட்டது.
அதன்படி சிங்கப்பூரிலிருந்து 128 காலி சிலிண்டர்கள் மற்றும் காலி கண்டெய்னர்கள் உடன், இந்திய விமானப்படையின் முதல் விமானம் நேற்று இரவு 10 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தது.
மேலும் 128 காலி சிலிண்டர்களுடன் இந்திய விமானப்படை விமானம் சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தது.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் சோதனை நடத்திய பின் தமிழக அரசு அதிகாரிகளிடம் 256 காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்கள் ஒப்படைக்கப்பட்டது.
அதன்பின்பு அதிகாரிகள் அந்த காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்களை லாரிகள் மூலம் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதைப்போல் இன்று இரவும் மேலும் 2 இந்திய விமானப்படை விமானங்களில் சிங்கப்பூரிலிருந்து காலி சிலிண்டர்கள் சென்னைக்கு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரம் அருகே கடன் தொல்லையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த வெள்ளை கேட் பாலாஜி நகரை சேர்ந்தவர் தயாளன் இவரது மனைவி லதா (வயது 38). தயாளன் ஏற்கனவே இறந்துவிட்டார். லதா வட்டிக்கு விடும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாததால் லதா கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த லதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த லதாவுக்கு 2 மகன்கள் உள்ளனர். லதா தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
துபாயில் இருந்து சென்னைக்கு தங்கத்தை குளிர்பான பவுடரில் கலந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககத்துக்கு வரும் விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சரக்கக பிரிவுக்கு துபாயில் இருந்து வந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையில் உள்ள ஒரு முகவரிக்கு 4 குளிர்பான பவுடர் பெட்டிகள், உடல் ஆரோக்கிய பொருட்கள் கொண்ட பார்சல் வந்து இருந்தது. அவற்றின் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சல்களை பிரித்து பார்த்தனர்.
அப்போது தங்க கட்டிகளை சிறு சிறு துண்டுகளாக மாற்றி அதை குளிர்பான பவுடர்களுக்குள் மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அந்த குளிர்பான பவுடர்களில் இருந்து தங்கத்தை தனியாக பிரித்தனர். அதில் மொத்தம் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள 2½ கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.
மேலும் பார்சலில் இருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. வெளிநாடுகளில் இருந்து பல வகைகளில் தங்கம் கடத்தி வருவதை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவதால் கடத்தல்காரர்கள் நூதன முறையில் இதுபோல் குளிர்பான பவுடருக்குள் தங்கத்தை சிறு சிறு துண்டுகளாக்கி மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
சென்னை விமான நிலையத்தில் இதுபோல் நூதன முறையில் தங்கம் கடத்தி வந்தது இதுவே முதல் முறையாகும். ஆனாலும் சுங்க இலாகா அதிகாரிகள், அதை கண்டுபிடித்து கடத்தல் திட்டத்தை முறியடித்து உள்ளனர்.

வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத்:
வாலாஜாபாத் சேர்க்காடு அருகே உள்ள மெக்ளின்புரத்தை சேர்ந்தவர் மோகன் குமார். வாலாஜாபாத் ராஜ வீதியில் துணிகடை வைத்துள்ளார். மோகன் குமார் தனது தந்தையின் ஈமக்கிரியை காரியத்துக்காக வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரிக்கு குடும்பத்தினருடன் சென்றார். தனது வீட்டை பார்த்து கொள்ளுமாறு வாலாஜாபாத்தில் வசிக்கும் தனது மாமனார் ராமச்சந்திரனிடம் கூறி விட்டு சென்றார்.
இந்த நிலையில் ராமச்சந்திரன், மோகன் குமாரின் வீட்டுக்கு சென்ற போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 21 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.
இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
இதையடுத்து மோகன்குமாரின் மாமனார் ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது திருச்சியைச் சேர்ந்த மதிவல்லபன் கருணாமூர்த்தி (வயது 23) என்பவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.
அதில், வீடுகளை சுத்தம் செய்யும் (‘வேக்கம் கிளீனர்’) கருவி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அதை பிரித்து சோதனை செய்தபோது அதன் உள்ளே தங்க கட்டியை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மதிவல்லபன் கருணாமூர்த்தியிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.