என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
    காஞ்சீபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக வைகா சித்திருவிழா நடைபெறாமல் இருந்து வந்தது.

    தற்போது நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதையடுத்து கட்டுப்பா டுகள் தளர்த்தப்பட்டு இருப்பதால் விழாவை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த ஆண்டுக்கான வைகாசி திருவிழா கடந்த 13ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்க கருட வாகன சேவை கடந்த 15ந் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை (வியாழக் கிழமை) நடைபெற உள்ளது. வரதராஜ பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி வீதிகளில் பவனி வருகிறார்.

    காந்திசாலை, காமராஜர் சாலை மற்றும் நான்குராஜ வீதிகள் வழியாக தேர் செல்கிறது. அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து வரும் பஜனைகோஷ்டியினர் தேரின் பின்புறம் பஜனை பாடல்களை பாடியடி செல்வார்கள். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய காஞ்சீபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 2019ம் ஆண்டு 48 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. இதில் சுமார் ஒரு கோடி பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்...பல்வேறு தோஷங்களும்... அதற்கான பரிகாரங்களும்...
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஆடுகளம் செயலி (டி.என்.ஸ்போர்ட்ஸ்)விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டுச் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இந்த செயலியை பதிவேற்றம் செய்து பயன் அடையலாம்.

    இந்த செயலியில் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    விளையாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம்.

    விளையாட்டுத் துறையின் பயன்களை பெறுவதற்கு இச்செயலி மிகவும் இன்றியமையாததாகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும்.
    ஆலந்தூர்:

    தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த அட்டைப்பெட்டி மற்றும் துணி கூடைக்குள் அரிய வகையான வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டி இருந்தது.

    இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, வீட்டில் வளர்ப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வாங்கி வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை.

    வெளிநாட்டில் இருந்து வனவிலங்கு போன்ற உயிரினங்களை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

    ஆனால் அந்த பயணியிடம் முறையான எந்த ஆவணங்களும் இல்லை. இதையடுத்து சுங்கதுறை அதிகாரிகள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் குரங்கு குட்டியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் இதுகுறித்து சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர். அவர்களும் வந்து விலங்குகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதேபோல் வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

    இந்த விலங்குகள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க அவற்றை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விமானத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    இதையடுத்து போதிய பயணிகள் இல்லாததால், இன்று நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 4.15 மணிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘இலங்கைக்கு இரவு நேர விமானங்களில் செல்ல போதிய பயணிகள் இல்லாததால் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் நாளை வழக்கம் போல் இரவிலும் விமானங்கள் இயக்கப்படும்’ என்றனர்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டை சார்ந்த சிறுபான்மையினர்களுக்கு பல்வேறு கடன் திட்டங்கள் வாயிலாக கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான கல்வி கடன், தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 23 ந் தேதியும், வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகத்தில் 24 ந் தேதியும், திருப்பெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 25 ந் தேதியும், குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 26 ந் தேதியும், உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27  ந் தேதியும் நடைபெறவுள்ளது.

    இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான கோ.க. மாதவன் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசூல் செய்யப்பட்ட கூட்டுறவு ஆராய்ச்சி வளர்ச்சி நிதி மற்றும் கூட்டுறவு கல்வி நிதி ரூ. 53 லட்சத்திற்கான காசோலையை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளரும் பணியாளர் அலுவலருமான தயாளன், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் மாதவனிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான முருகன், காஞ்சிபுரம் சரக துணை பதிவாளர் சுவாதி, பேரறிஞர் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய துணை பதிவாளரும் முதல்வருமான உமாபதி, காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் சத்தியநாராயணன், காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் அருண்குமார், காஞ்சிபுரம் கூட்டுறவு ஒன்றிய மேலாளர் முரளி மற்றும் ஒன்றிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×