என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியை வீரர்கள் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும்- கலெக்டர் வேண்டுகோள்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக ஆடுகளம் செயலி (டி.என்.ஸ்போர்ட்ஸ்)விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாட்டுச் செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இந்த செயலியை பதிவேற்றம் செய்து பயன் அடையலாம்.

    இந்த செயலியில் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    விளையாட்டுத் துறை சார்ந்த அறிவிப்புகள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம்.

    விளையாட்டுத் துறையின் பயன்களை பெறுவதற்கு இச்செயலி மிகவும் இன்றியமையாததாகும்.

    எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் டி.என்.ஸ்போர்ட்ஸ் ஆடுகளம் எனும் செயலியை கைப்பேசியில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×