என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    இலங்கை பயணிகள் குறைந்ததால் சென்னையில் 4 விமானங்கள் ரத்து

    சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் அரசியல் நெருக்கடி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் விமானத்தில் இலங்கைக்கு பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து இரவு நேரங்களில் இலங்கைக்கு செல்லும் விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

    இதையடுத்து போதிய பயணிகள் இல்லாததால், இன்று நள்ளிரவு 12.20 மணிக்கு சென்னையில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம், அதிகாலை 4.15 மணிக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இதேபோல இலங்கையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 2.25 மணிக்கு வரவேண்டிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம், சென்னையில் இருந்து அதிகாலை 3.25 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானமும் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘இலங்கைக்கு இரவு நேர விமானங்களில் செல்ல போதிய பயணிகள் இல்லாததால் 4 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் நாளை வழக்கம் போல் இரவிலும் விமானங்கள் இயக்கப்படும்’ என்றனர்.

    Next Story
    ×