என் மலர்
காஞ்சிபுரம்
- வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி., எஸ்டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. 8-வது தேர்ச்சி, 10-வது, 12-வது, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங், படித்த வேலை நாடுநர்கள் இந்த முகாமில் கலந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. வேலைநாடுநர்களுக்கும் அனுமதி இலவசம். மேற்கண்ட கல்வி தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
- நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன்.
காஞ்சிபுரம்:
உத்திரமேரூர் அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'கலைஞரின் 99' என்ற தலைப்பில் அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பொற்கிழிகள் வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
நமது முதல்- அமைச்சரின் உடல் நலன் குறித்து என்னிடம் கேட்டறிந்தது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. தளபதியாருக்கு உங்கள் அன்பு உள்ளவரை எதுவும் ஆகாது. அவர் விரைவில் பூரண குணம் அடைந்து தமிழக மக்களுக்கு பணியாற்றுவார்.
பல்வேறு இடங்களில் கழக ஆட்சியில் நல்லது நடக்கிறது என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் என்னிடம் பல்வேறு மனுக்கள் அளித்துள்ளனர். மனுக்களை முதல்-அமைச்சரிடம் நான் கொண்டு சேர்த்து அதற்கான உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நமது கட்சியில் இளைஞர் அணி, மாணவர் அணி மருத்துவர் என பல்வேறு அணிகள் தனித் தனியாக இயங்கினாலும் நாம் அனைவரும் ஒரே அணி. தந்தை பெரியார் அணி, பேரறிஞர் அண்ணா அணி, முத்தமிழறிஞர் கலைஞரின் அணி, நம்முடைய தலைவரின் அணி என அப்படித்தான் நமது பயணம் இருக்க வேண்டும்.
ஏழை மக்களுக்கு உதவும் வகையில் நமது தலைவரின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்ட செயலாளர்களிடம் நிதி உதவி கேட்டு பெற்று வருகிறோம். பெறப்படும் நிதிகள் அனைத்தும் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
வரவு வைக்கப்பட்டுள்ள நிதிக்கு மாதம் வங்கி மூலம் வழங்கப்படும் வட்டியினை ஏழை மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவசரத் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.
எனவே எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அதனை மனுவாக அளியுங்கள். அதனை பரிசீலனை செய்து அவர்களுக்கான உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் கலந்து கொள்ளும் விழாவில் அனைவரும் என்னை சின்னவர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். தயவு செய்து என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்.
ஏனென்றால் சின்னவர், என்று அழைப்பதால் சிலருக்கு வயிற்றெரிச்சல் ஏற்படுகிறது. சின்னவன் என்று அழையுங்கள்' அது போதும்.
நான் தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் நேரில் பார்த்ததில்லை, ஆனால் விழாவில் கலந்து கொண்ட மூத்த முன்னோடிகள் அனைவரும் பெரியார், அண்ணாவை பார்த்திருப்பீர்கள்.
இதனால் நீங்கள் அனைவரும் எனக்கு பெரியார், அண்ணா, கலைஞரின் மறு உருவமாக தான் பார்க்கிறேன். ஏனென்றால் 2019 நாடாளுமன்ற தேர்தல் அதன்பின் சட்டமன்றத் தேர்தலில் அதன் பின் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியினை தமிழக மக்கள் நமது தலைவருக்கு வழங்கியுள்ளனர்.
இனி அ.தி.மு.க.வினரை நாம் திட்டப்போவதில்லை. ஏனென்றால் அக்கட்சிக்குள்ளேயே அடித்து கொள்கின்றனர். மேலும் அந்த இயக்கத்திற்கு வரலாறு ஏதும் கிடையாது. ஆனால் நமது இயக்கத்திற்கு வரலாறு உண்டு. எனவே தமிழக மக்கள் நீங்கள் இல்லை என்றால் நாங்கள் இல்லை".
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக 2083 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியும் 422 ஏழை, எளிய பெண்களுக்கு தையல் எந்திரம், 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 188 மாணவ-மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது
- மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 188 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.
இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வெளிநாடு வீரர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளதால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 35 கி.மீ., தூரத்தில் உள்ள பனையூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சின்னாடி, கோவளம், பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடத்தை, முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமத்தில் உள்ளவர் களுக்கு கடற்கரையை சுத்தமாக வைப்பது எப்படி என்பது குறித்து மாமல்ல புரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
- இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.
- சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.
ஆலந்தூர்:
இலங்கையில் தற்போது அரசியல் நெருக்கடி உச்சகட்டத்தை எட்டி உள்ளது. இதனால் பொதுமக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் தவித்து வருகிறார்கள்.
இலங்கையில் விமானங்கள் செயல்படவும், எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கொழும்புவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை விமானங்கள் சென்னை, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய விமான நிலையங்களில் எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்கின்றன.
சென்னையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்ப வரும் இலங்கை விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
சென்னையில் இருக்கும் விமானங்களுடன் சேர்த்து இலங்கை விமானங்களும் வரிசையில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பி செல்கிறது.
கடந்த 15 நாட்களில் பாரத் பெட்ரோலியத்தில் மட்டும் சென்னை,கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களில் சுமார் 100-க்கும் மேற்பட்ட இலங்கை விமானங்கள் எரிபொருள் நிரப்பி சென்றுள்ளன.
இதுகுறித்து விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் காரணமாக, இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல் கின்றன. அதேபோல் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திலும் எரிபொருள் நிரப்பி கொண்டு செல்கிறது.
நம்மை பொறுத்தவரை சென்னை விமான நிலையத்திற்கு இது பொருளாதார லாபம்தான். ஏனென்றால் மற்ற நாட்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும்போது அதற்கான வாடகை தொகையை தர வேண்டும். அதுமட்டுமின்றி விமான எரிபொருள் நிரப்பி செல்வதும் வருமானம்தான் என்றார்.
- தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது,
- முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தினை காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் திருவிழா வரும் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது, இதில் 186 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இதனை ஒட்டி கல்லூரி, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
இதில் பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து பேருந்து நிலையம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், மேட்டு தெரு, காவலான் தெரு வழியாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை இப்போட்டி நடைபெற்றது.
ஆண்கள் பிரிவில் முதலிடத்தை சவீதா கல்லூரி மாணவர் கோகுல் சீனிவாசன் இரண்டாவது , மூன்றாவது இடத்தை அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில் பெரிய காஞ்சிபுரம் மகளிர் மேல்நிலைப்பள்ளி சேர்ந்த செல்வி காவியா, இரண்டாம் இடத்தை எஸ்.எஸ்.கே.வி பள்ளி மாணவி செல்வி அர்ச்சனா, மூன்றாம் இடத்தை ராணி அண்ணாதுரை மேல்நிலைப்பள்ளி மாணவி செல்வி.சரண்யா ஆகியோர் பிடித்தனர்.
இதில் முதல் ஐந்து இடங்களை பிடித்த மாணவ- மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, நீச்சல் பயிற்சியாளர் ஆனந்த் மற்றும் பள்ளி கல்லூரி விளையாட்டு துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார்.
போரூர்:
சாலிகிராமம்,மஜித் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் காதர் ஏ.சி சர்வீஸ் சென்டர் கடை நடத்தி வருகிறார் இவரது மனைவி ஷர்மிளா பானு(வயது38).
இவர் கடந்த 8 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டில் இருந்த ஷர்மிளா பானு, திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை திட்டத்தின்கீழ் 10-ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.600), 12-ம் வகுப்பு தேர்ச்சி, பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.750) மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.600 (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ரூ.1000) வீதம் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டு மைய அலுவலகத்தில் மேற்காணும் கல்வித் தகுதிகளை பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். (மாற்றுத்திறனாளிகளை பொருத்தவரை ஓராண்டு நிறைவு பெற்றிருந்தாலே போதும்).
பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்.பி.சி., எம்.சி.எம்., ஒ.பி.சி., ஒ.சி. பிரிவினர் 40 வயத்திற்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.சி.ஏ, எஸ்.டி. பிரிவினர் 45 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக் கூடாது. தினசரி மாணவராக பயின்று வருவோருக்கு உதவித் தொகை பெற தகுதியில்லை.
அனைத்து தகுதிகளும், விருப்பமும் உள்ள பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வருகை புரிந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tnvelaivaaippu.gov.in//empower என்ற இணையதள முகவரியிலும் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
மேலும் தகவலுக்கு அலுவலக தொலைப்பேசி எண்- 044-27237124யை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
போரூர்:
நெசப்பாக்கம் காணு நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா, பிசியோதெரபிஸ்ட்.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகே சாலையில் நடந்தபடியே செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென கார்த்திக் ராஜாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டான்.
இதுகுறித்து எம்.ஜி.ஆர் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
- உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 10 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. வாக்குப்பதிவு முடிந்து ஓட்டுப்பெட்டிகள் பாதுகாப்பாக அந்தந்த இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் குவிந்து இருந்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டு இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் சுப்பராயன் உள்பட 6 பேர் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 4,510 வாக்காளர்களில் 2,597 பேர் வாக்களித்து இருந்தனர். 57.58 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள அறிஞர் அண்ணா அரங்கத்தில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஆரம்பம் முதலே தி.மு.க. வேட்பாளர் சுப்பராயன் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். அவர் மொத்தம் 1759 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் வேணுகோபால் 568 வாக்குகள் பெற்று இருந்தார். தி.மு.க.வேட்பாளர் சுப்பராயன் 1191 அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.
இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 உறுப்பினர்களில் தி.மு.க. கவுன்சிலர்களின் பலம் 34 ஆக அதிகரித்து உள்ளது. அ.தி.மு.க.-8, பா.ம.க.-2, பா.ஜனதா-1, சுயேட்சைகள்-6 உறுப்பினர்கள் உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 15-வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சுதா உள்பட 6 பேர் களத்தில் இருந்தனர். ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் சுதா முதல் சுற்றில் 478 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். சுயேட்சையாக போட்டியிட்ட அ.தி.மு.க. பிரமுகர் யோகசுந்தரி 311 வாக்குகளும் பெற்று உள்ளனர்.
இதேபோல் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் கிராம ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக வேணி கண்ணன் வெற்றி பெற்றார். பதிவான 603 ஓட்டுகளில் அவர் 368 வாக்குகள் பெற்று இருந்தார். 4 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தி.மு.க.சார்பில் சேகா் உள்பட 7 பேர் போட்டியிட்டனர். இதில் அதிக வாக்குகள் பெற்று தி.மு.க.வேட்பாளர் சேகர் வெற்றி பெற்றார்.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் மெதூர் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக சீத்தாராமன் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் உள்ள 259 வாக்குகளில் 152 வாக்குகள் பெற்று இருந்தார். 3 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் 8-வது வார்டு உறுப்பினராக செல்வன் வெற்றி பெற்றார். பதிவான 509 வாக்குகளில் 187 ஓட்டுகள் பெற்று இருந்தார்.
பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம் அகரமேல் ஊராட்சியில் 3-வது வார்டு உறுப்பினராக தி.மு.க.வை சேர்ந்த ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். மொத்தம் பதிவான 329 ஓட்டுகளில் அவர் 161 வாக்குகள் பெற்று இருந்தார். 7 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.
உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் பரந்தூர் மண்டல சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 பேருக்கும், பென்னலூர் கிராமத்தில் 7 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது.
- ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம், பகுதிகள் காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர்,
தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, ஐயம்பேட்டை, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலிமேடு, பாலாறு தலைமை நீரேற்றம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
- பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 261 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் வட்டம், பரந்தூர் மண்டலம் சிங்காடிவாக்கம் கிராமத்தில் 26 நபர்களுக்கும், ஸ்ரீபெருமந்தூர் வட்டம் பென்னலூர் கிராமத்தில் 7 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவ ருத்ரய்யா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) இரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






