என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி- கடற்கரையை சுத்தமாக வைக்க மீனவ கிராம மக்களுக்கு பயிற்சி
    X

    மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி- கடற்கரையை சுத்தமாக வைக்க மீனவ கிராம மக்களுக்கு பயிற்சி

    • மாமல்லபுரத்தில் “செஸ் ஒலிம்பியாட்” போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது
    • மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் "செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்க 188 நாடுகளில் இருந்து வீரர்கள் வருகிறார்கள்.

    இதையொட்டி மாமல்லபுரம் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும், முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    வெளிநாடு வீரர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளதால் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை உள்ள கடலோர பகுதியை தூய்மையாக வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் முதல் மாமல்லபுரம் வரையிலான 35 கி.மீ., தூரத்தில் உள்ள பனையூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், சின்னாடி, கோவளம், பட்டிபுலம், நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடத்தை, முட்டுக்காடு, கானத்தூர், தேவநேரி, வெண்புருஷம் ஆகிய 13 மீனவ கிராமத்தில் உள்ளவர் களுக்கு கடற்கரையை சுத்தமாக வைப்பது எப்படி என்பது குறித்து மாமல்ல புரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×