என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
- கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
- ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும் மாபெரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி துவக்கி வைத்தார்.
படித்த வேலைவாய்ப்பற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கு தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்களுக்கான மாபெரும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை காஞ்சிபுரம், பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமினை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி, துவக்கி வைத்து, முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பிறகு அவர் பேசியதாவது:-
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்துக்காண்டு 8 முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் என்ஜினியரிங் படித்து வேலை நாடுபவர்கள் இம்முகாமில் கலந்துக்கொண்டு பயன்பெறுகிறார்கள்.
மேலும், அரசு வேலை மட்டுமே நம்பி இருக்காமல் தனியார் நிறுவனங்கள் மற்றும் சுயத்தொழில் செய்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என அரசு பல்வேறு வேலை வாய்ப்பு பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
அதில் இளைஞர்கள் கலந்துக்கொண்டு தங்கள் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்.பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், வேலைவாய்ப்புத்துறை துணை இயக்குநர் அருணகிரி, ஆதிதிராவிடர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் கு.பிரகாஷ் வேலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.






