என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
    X

    எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

    • வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி., எஸ்.டி. இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

    இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து எஸ்.சி., எஸ்டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது.

    இந்த முகாமில் கலந்துகொண்டு ஆட்களை தேர்வு செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. 8-வது தேர்ச்சி, 10-வது, 12-வது, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, என்ஜினீயரிங், படித்த வேலை நாடுநர்கள் இந்த முகாமில் கலந்து வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி. வேலைநாடுநர்களுக்கும் அனுமதி இலவசம். மேற்கண்ட கல்வி தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் தங்களுடைய அசல் கல்வி சான்றுகள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுங்கள். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விரும்பும் வேலைநாடுநர்கள் முகாம் காலை 10 மணி முதல் முகாமிடத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×