என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானைகள் தண்ணீர் குடித்துவிட்டு குளித்து கும்மாளமிட்டன.
    பவானிசாகர்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது தண்ணீர் குடிப்பதற்காக அணைக்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்வது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 5 யானைகள் வெளியேறி பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதிக்கு வந்தன.

    பின்னர் அந்த யானைகள் அணையில் தேங்கி நின்ற தண்ணீருக்குள் இறங்கின. இதைத்தொடர்ந்து தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி குடித்ததுடன் யானைகள் ஒன்றன் மீது ஒன்று தண்ணீரை பீய்ச்சி அடித்து விளையாடின. அதுமட்டுமின்றி தண்ணீரில் யானைகள் குளித்து கும்மாளமிட்டன. அரை மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் அணையின் மேல் பகுதியில் உள்ள தார் சாலைக்கு வந்த யானைகள், அதை கடந்து காராச்சிக்கொரை வனப்பகுதிக்குள் சென்றன.

    பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    கொடுமுடி காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி இறந்தனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

    ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார். நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.

    முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் 300 அடிஉயர செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சதுமுகை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (45). தச்சு தொழிலாளி. இவரது மனைவி திலகா. இவர்களுக்கு காயத்ரி என்ற மகளும், அரவிந்த் என்ற மகனும் உள்ளனர்.

    சரவணனுக்கும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட சரவணன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அப்போது அவரது தலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் எக்ஸ்ரேவில் ஒரு இடத்தில் கருப்பாக இருந்தது. இதைப்பார்த்த சரவணன் அது கேமரா என்றும், அதை பக்கத்து வீட்டுகாரர் தான் வைத்து விட்டார் என்றும் கூறி வந்தார். இது தொடர்பாகவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது.

    சரவணன் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள 300 அடி உயரம் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் டி.எஸ்.பி., சுப்பையா, தாசில்தார் ரவிசங்கர் மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்தனர். மேலும் 108 ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    செல்போன் டவரில் இருந்த சரவணனை போலீசார் கீழே இறங்கி வர மைக்கில் பேசினார்கள். ஆனால் அவர் பக்கத்து வீட்டுக்காரர் என் மண்டையில் கேமரா வைத்து விட்டார். எனவே அவரை கைது செய்யுங்கள். இல்லாவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.

    அவரது மனைவி மற்றும் மகள், மகனும் அழைத்தனர். ஆனால் அவர் வரமறுத்துவிட்டார். இதையடுத்து போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஒரு கட்டத்தில் சரவணன் அதிர்ச்சி அடைந்து செல்போன் கோபுரத்தில் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பெல்ட் அணிந்து கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறினர். பின்னர் அவரிடம் நைசாக பேசி காலை 9.30 மணியளவில் அவரை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் அவர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    தொழிலாளி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

    கொடுமுடி பகுதியில் காவிரி ஆற்றில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
    கொடுமுடி:

    கொடுமுடி அருகே அஞ்சூர் நல்லசெல்லிபாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. லாரி டிரைவர். இவருடைய மகன்கள் கோகுல் (வயது 23), மனோஜ் (20). கோவையில் உள்ள மென்பொருள் கம்பெனியில் கோகுல் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஈரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் மனோஜ் பி.எஸ்சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று கோகுல், மனோஜ் ஆகியோர் அந்த பகுதியை சேர்ந்தவர்களுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவிலுக்கு வந்தனர். பின்னர் 2 பேரும் கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு குளிப்பதற்காக பகல் 2.30 மணி அளவில் காவிரி ஆற்றில் உள்ள மணல்மேடு பகுதிக்கு சென்றனர்.

    முதலில் மனோஜ் இறங்கி குளிக்க தொடங்கினார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர் நீரில் மூழ்கினார். இதை கண்ட உடனே மனோஜின் கையை பிடித்து இழுக்க கோகுல் முயன்றார். ஆனால் அவரும் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டார். இதில் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். உடனடியாக இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் நிலைய அதிகாரி சிவராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோகுல், மனோஜ் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அண்ணன், தம்பியின் உடல்களை பார்த்து அவருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தொட்டியம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவருடைய மகன் லோகநாதன் (32). இவர் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். லோகநாதன் ஊஞ்சலூர் அருகே பெருமாபாளையம் என்ற ஊரில் உள்ள மாமியார் வீட்டுக்கு தீபாவளிக்காக குடும்பத்துடன் வந்திருந்தார்.

    இந்த நிலையில் லோகநாதன், அவருடைய மனைவி சுமதி (24), 2 பெண் குழந்தைகள் காரணம்பாளையம் காவிரி ஆற்று தடுப்பணைக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். இதில் லோகநாதன் ஆழமான பகுதிக்கு சென்று குளித்துள்ளார். இதனால் தண்ணீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டார். இதுபற்றி அறிந்ததும் மீனவர்கள் அங்கு சென்று அவரை தேடிப்பார்த்தனர். ஆனால் இரவு வரை லோகநாதன் கிடைக்கவில்லை. அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இது குறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோபி அருகே மோட்டார்சைக்கிள், மொபட் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடத்தூர்:

    ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 60). இவர் அளுக்குளியில் உள்ள தனியார் மில்லில் தோட்ட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் அளுக்குளியில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு வீட்டுக்கு தன்னுடன் வேலை செய்த ராஜ்குமார் (25) என்பவருடன் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். மொபட்டை ராஜ்குமார் ஓட்டினார். பின்னால் வெள்ளியங்கிரி உட்கார்ந்திருந்தார்.

    கோபியை அடுத்த கா.கணபதிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த குளவிகரட்டை பகுதியை சேர்ந்த கவின் (25), ரமேஷ் (32) ஆகியோர் வந்த மோட்டார்சைக்கிளும், மொபட்டும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. மேலும் அந்த வழியாக வந்த சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (35) என்பவரின் மோட்டார்சைக்கிளும் இந்த விபத்தில் சிக்கியது. இதனால் மொபட் மற்றும் மோட்டார்சைக்கிளில் இருந்து 5 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே வெள்ளியங்கிரி, ராஜ்குமார், கவின் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    ரமேஷ் மற்றும் கோபிநாத் ஆகியோர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் 2 பேரும் மேல் சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கொடுமுடி அருகே கணவன்-மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவருடைய மனைவி அருக்காணி (45). 2 பேரும் விவசாய கூலித்தொழிலாளர்கள்.

    இவர்களுக்கு மேனகா என்ற மகளும், யுவராஜ், பூபதி என்ற 2 மகன்களும் உள்ளனர். மேனகாவுக்கு திருமணம் ஆகி கொடுமுடியில் உள்ள தனது கணவர் வீட்டுடன் வசித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி இரவு மேனகா, அவருடைய கணவர் பெருமாள் மற்றும் மகன் வைரமூர்த்தி (13) ஆகியோர் சிட்டாபுள்ளாம்பாளையத்தில் உள்ள ராமசாமியின் வீட்டுக்கு வந்தனர்.

    அவர்கள் வரும் வழியில் அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பெருமாள் மற்றும் மேனகாவை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஆனதில் பெருமாள், மேனகா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து காயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் ராமசாமி, மனைவி அருக்காணி, மகன் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகள் மற்றும் மருமகனை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்டு உள்ளனர். மேலும் பெருமாள், மேனகாவை தாக்கியவர்களை சரமாரியாக அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    தகராறு முடிந்ததும் ராமசாமியும் அருக்காணியும் அவர்களுடைய வீட்டுக்கு சென்றனர். யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    இந்தநிலையில் நள்ளிரவில் ராமசாமியும், அருக்காணியும் வீட்டில் படுத்து அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களுடன் மேனகாவின் மகன் வைரமூர்த்தியும் உறங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் ராமசாமி மற்றும் அருக்காணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 2 பேரையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது ராமசாமியும் அருக்காணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வைரமூர்த்தி இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

    இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்து விரைந்து சென்று, கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்த ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சற்று தூரம் ஓடி மர்ம நபர்கள் தப்பித்து சென்ற பாதையில் நின்றது. இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிட்டபுள்ளாம்பாளையம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரை பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், ‘அவர்கள் சிட்டபுள்ளாம்பாளையத்தை சேர்ந்த சுவாமிநாதன் (49), கிருபா சங்கர் (24) என்பதும், அவர்கள் 2 பேர் மற்றும் சுவாமிநாதனின் மகன் சூர்யா (23) ஆகிய 3 பேரும் சேர்ந்து ராமசாமி மற்றும் அருக்காணியை வெட்டி கொலை செய்ததும்,’ தெரியவந்து.

    மேலும் அவர்கள் போலீசாரிடம் கூறுகையில், ‘ராமசாமி மற்றும் அவருடைய குடும்பத்தினர் தங்களை தாக்கியதாகவும், ஆகவே அவர்களை பழிவாங்கவே ராமசாமியையும், அருக்காணியையும் வெட்டி கொலை செய்ததாகவும்,’ தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் கொடுத்த தகவலின் பேரில் திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் பகுதியில் பதுங்கி இருந்த சூர்யாவையும் கைது செய்தனர்.

    அதுமட்டுமின்றி மேனகா மற்றும் பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டதாக தேவகி அம்மாபுரத்தை சேர்ந்த நவீன் (20), சிட்டாபுள்ளாம்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் (21), வெங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த ஜீவானந்தன் (20), அத்திப்பாளையத்தை சேர்ந்த கார்த்தி (23), மங்களப்பட்டியை சேர்ந்த மதுசூதனன் (20) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    ஈரோட்டில் 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு நடைமுறைக்கு வந்தபோது சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வுகள் பல கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பின்னரும், தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இந்தநிலையில் மத்திய அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்திலும் தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    கடந்த 10-ந் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், ஈரோட்டில் தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

    தீபாவளி என்றாலே தியேட்டரில் வெளியாகும் புதுப்படங்களை பார்க்க ரசிகர்கள் பட்டாளம் திரண்டு காணப்படும். அதனால் பிரபல நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களின் சினிமா தியேட்டர்கள் நள்ளிரவில் இருந்தே பரபரப்பாக காணப்படும். திரைஅரங்கம் முழுவதும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் வழக்கமான ஆரவாரத்துடன் ரசிகர்கள் யாரும் திரை அரங்குகளுக்கு வரவில்லை.

    தியேட்டர்களில் அமர்ந்து படம் பார்க்க கட்டுப்பாடுகள் இருப்பதால், ரசிகர்கள் வருகை குறைந்து உள்ளது. அதுமட்டுமின்றி, இந்த தீபாவளிக்கு தியேட்டர்கள் திறப்பதில் பல்வேறு தடைகள் இருந்ததால் மக்களின் அபிமான நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியிடப்படவில்லை. இதுவும் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வராததற்கு காரணமாகும் என்று தியேட்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக திரையரங்குகள் திறந்து திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகும்போது ரசிகர்கள் தியேட்டர்களை தேடி வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 7 மாதங்களுக்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், ரசிகர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது.
    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் மெதுவாக குறைந்து கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 100-க்கும் குறைவானவர்கள் புதிதாக தொற்றுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.

    நேற்று முன்தினம் புதிதாக 63 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டார்கள். மேலும், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த 59 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த நிலையில் நேற்று வெளியிடப்பட்ட மாநில சுகாதாரத்துறையின் பட்டியலின்படி மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 599 ஆக உயர்ந்தது.

    இதில் 10 ஆயிரத்து 838 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 625 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வந்த அந்தியூரை சேர்ந்த 60 வயது நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 136 ஆக உயர்ந்தது.
    ஈரோடு அருகே நள்ளிரவில் கணவன்-மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தீபாவளி தினத்தில் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சிட்டபுள்ளாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(வயது55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி அருக்காணி(45). இவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இவர்களுக்கு மேனகா என்ற மகளும், யுவராஜ், பூபதி என்ற 2 மகன்களும் உள்ளனர். மேனகாவுக்கு திருமணம் ஆகி விட்டது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு மேனகா, தனது கணவர் பெருமாள் மற்றும் மகன் வைரமூர்த்தி(13) ஆகியோருடன் தந்தை ராமசாமியின் வீட்டுக்கு வந்தார்.

    அவர்கள் வரும் வழியில் அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த வாலிபர்கள் சிலர் பெருமாள் மற்றும் மேனகாவை கிண்டல் செய்தனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஆனதில் பெருமாள், மேனகா ஆகியோர் காயம் அடைந்தனர்.

    இந்த தகவல் அறிந்த ராமசாமி, அருக்காணி மற்றும் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தட்டிக்கேட்டனர். மேலும் பெருமாள், மேனகாவை தாக்கியவர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே முதலில் நடந்த தாக்குதலில் காயம் அடைந்த பெருமாள், மேனகா 2 பேரும் கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    தகராறு முடிந்த பின்னர் ராமசாமி, அருக்காணி ஆகியோர் வீட்டுக்கு திரும்பினார்கள். யுவராஜ் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டு சென்றார்.

    நள்ளிரவில் ராமசாமியும், அருக்காணியும் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்தனர். அவர்களுடன் மேனகாவின் மகன் வைர மூர்த்தியும் உறங்கினார். நேற்று அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் ராமசாமி மற்றும் அருக்காணியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது 2 பேரையும் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள். அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது ராமசாமியும் அருக்காணியும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். வைர மூர்த்தி இந்த தாக்குதலில் இருந்து தப்பித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, கொடூரமாக கொலை சைய்யப்பட்டு கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை தொடர்பாக சந்தேகத்துக்கு இடமான சிலரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தீபாவளி தினத்தில் கணவன் -மனைவி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இதுபற்றி கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    பெருந்துறையில் 70 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சென்னிவலசு பகுதியை சேர்ந்தவர் பாலுசாமி (வயது 80). இவரது மனைவி சங்கராம்மாள்(70). இவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனி தனியாக வசித்து வருகிறார்கள்.

    பாலுசாமி அதே பகுதியில் தள்ளுவண்டியில் போண்டா, பஜ்ஜி வியாபாரம் செய்து வருகிறார்.

    இன்று காலை 6 மணியளவில் சங்கராம்மாள் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணறு அருகே சென்றார். 70 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 50 அடிக்கு தண்ணீர் உள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக சங்கராம்மாள் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியும்.

    மேலும் கிணற்றில் தண்ணீர் பிடிப்பதற்காக வைத்திருந்த வாலி கயிற்றை சங்கராம்மாள் பிடித்து கொண்டு காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள் என அலறினார்.

    அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கிணற்றை பார்த்தனர். அப்போது மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் வேலுசாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் இரண்டு தீயணைப்பு வீரர்கன் கிணற்றுக்குள் இறங்கி கயிறு கட்டி மூதாட்டி சங்கராம்மாளை சுமார் 30 நிமிட போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்டனர். பின்னர் சங்கராம்மாள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1,061 கன அடியாக இன்றைய நிலவரப்படி உயர்ந்துள்ளது.
    பவானிசாகர்:

    தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமையை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடியாக கணக்கிடப்படுகிறது. அணையில் இருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.

    இதுதவிர ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. இங்கு பெய்யும் மழைநீர் அணைக்கு வருகிறது.

    இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.59 அடியாக உள்ளது. அணையின் நீர்வத்து 1,061 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 3,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது பவானிசாகர் அணையில் 25.4 டி.எம்.சி. அளவு நீர் இருப்பு உள்ளது.
    கோபிசெட்டிபாளையம் அருகே சாலை விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபி அருகே உள்ள குளவிகரடை சேர்ந்தவர் கவின் (25). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இரவு இவர் காசிபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் குளவிகரடை நோக்கி வந்தார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (60) என்பவரும் வந்தார்.

    இதேபோல் திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் (23), ரமேஷ் (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.

    கணபதிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்- மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளியங்கிரி (60), கவின் (25), ராஜ்குமார் (23) ஆகிய 3பேரும் உயிரிழந்தனர்.

    மேலும் படுகாயமடைந்த ரமேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், கோபிநாத் சத்தியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×