என் மலர்
செய்திகள்

கோபிசெட்டிபாளையம் அருகே விபத்தில் 3 பேர் பலி
கோபி:
கோபி அருகே உள்ள குளவிகரடை சேர்ந்தவர் கவின் (25). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இரவு இவர் காசிபாளையத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் குளவிகரடை நோக்கி வந்தார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த வெள்ளியங்கிரி (60) என்பவரும் வந்தார்.
இதேபோல் திருச்சியை சேர்ந்த ராஜ்குமார் (23), ரமேஷ் (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், சத்தியமங்கலத்தை சேர்ந்த கோபிநாத் (35) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் வந்தனர்.
கணபதிபாளையம் பஸ்நிறுத்தம் அருகே வந்தபோது மொபட்- மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்தானது. இதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி வெள்ளியங்கிரி (60), கவின் (25), ராஜ்குமார் (23) ஆகிய 3பேரும் உயிரிழந்தனர்.
மேலும் படுகாயமடைந்த ரமேஷ் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கும், கோபிநாத் சத்தியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






