என் மலர்
ஈரோடு
ஈரோடு ரெயில், பஸ் நிலையம் உள்பட 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு:
சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த டிசம்பர் மாதம் ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் ஈரோட்டில் பஸ் நிலையம், மணிக்கூண்டு, ரெயில் நிலையம் ஆகிய 3 இடங்களில் குண்டு வைத்துள்ளதாகவும், இந்த 3 இடங்களிலும் குண்டு வெடிக்கும் என்று கூறி போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சென்னை போலீசார் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு போலீசாரை உஷார் படுத்தினர். இதையடுத்து போலீசார் பஸ் நிலையம், மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் ஒவ்வொரு இடமும் அங்குலம் அங்குலமாக சோதனையில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார் படுத்தப்பட்டு ஒவ்வொரு நடைமேடை, ரெயிலிலும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நிம்மதி அடைந்தனர்.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர் பேசிய போன் நம்பரை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த போன் நம்பர் வைத்து அந்த நபர் இருக்கும் இடத்தை டவுன் போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோவை மாவட்டம் மேட்டுப் பாளையத்தை சந்தோஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். சந்தோஷ் தனது மனைவியை பிரிந்து சற்று மனநலம் பாதித்தவர் போல் இருந்துள்ளார். ஏற்கனவே இவர் இதேபோல் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும், ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என 2 முறை போன் மூலம் மிரட்டல் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக ஈரோடு சூரம்பட்டி, மற்றும் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது 3-வது முறையாக இதேபோன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சந்தோஷ் கைதாகியுள்ளார்.

ஈரோட்டில் ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த முதியவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு அண்ணாமலை வீதி, மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 50).
இந்நிலையில் வாசுதேவன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அந்த ஏலச்சீட்டில் பலர் இணைந்து பணம் கட்டி வந்தனர்.
இந்நிலையில் இதில் சிலர் பணம் கட்டாமல் வாசுதேவனை ஏமாற்றி வந்தனர். சுமார் ரூ.7 லட்சம் வரை பணம் கட்டாமல் இருந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் வாசுதேவன் பணம் கேட்டுள்ளார். அவர்கள் இன்று தருவதாகவும், நாளை தருவதாகவும் கூறி காலம் தாழ்த்தி வந்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக வாசுதேவன் மனவேதைனயில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென வீட்டைவிட்டு வெளியே கிளம்பி பெரியார் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி அதே பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் வைத்து தனது உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வாசுதேவனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை வாசுதேவன் பரிதாபமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாக்கடையில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலியானார்.
ஈரோடு:
சாக்கடையில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலியானார்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த மகாத்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 60). புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகன் உள்ளார்.
இந்நிலையில் அசோகன் புரோட்டா மாஸ்டர் வேலையை விட்டுவிட்டு பாட்டில்களை பொறுக்கி எடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டிற்கு வாரத்துக்கு ஒரு முறை தான் வந்து செல்வார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கவுந்தப்பாடி &பவானி ரோடு, காளியம்மன் கோவில் அருகே உள்ள சாக்கடையில் 60 வயது முதியவர் இறந்து கிடப்பதாக அசோகன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது குடும்பத்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்தது அசோகன் தான் என்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கவுந்தபாடி போலீசார் அசோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வந்த அசோகன் அங்குள்ள சாக்கடையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெருந்துறை அடுத்துள்ள சரளை இச்சிகாட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவரது மனைவி சரஸ்வதி (53). கணவன், மனைவி இருவரும் விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை 8 மணி அளவில் நாச்சிமுத்து தோட்டத்தில் ஆடு, மாடு மேய்க்க சென்றுவிட்டார். வீட்டில் சரஸ்வதி மற்றும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது அங்கு மோட்டார்சைக்கிளில் வந்த 2 நபர்களில் ஒருவன் பைக்கிலேயே அமர்ந்து கொள்ள, மற்றொருவன் சரஸ்வதியிடம் இந்த பகுதியில் முருகேசன் வீடு எங்கு உள்ளது என கேட்டுள்ளார்.
பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார்.
அதற்குள்ள சரஸ்வதி கதவை சாத்தி விட்டு உள்ளே செல்ல முயன்றபோது கதவை தள்ளிவிட்டு சரஸ்வதியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க நகையை பிடுங்கி கொண்டு மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் ஏறி 2 பேரும் தப்பி விட்டனர்.
உடனே சரஸ்வதி திருடன்... திருடன்.. என சத்தம் போட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
பின்னர் சரஸ்வதி இது குறித்து பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்மநபர்களை வலை வீசி தேடிவருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 113 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. தெரிவித்து உள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 22-ந் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
ஈரோடு மாநகராட்சியில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 191 வாக்காளர்களும், பவானி நகராட்சியில் 30 ஆயிரத்து 282 வாக்காளர்களும், கோபி நகராட்சியில் 47 ஆயிரத்து 545 வாக்காளர்களும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் 16 ஆயிரத்து 933 வாக்காளர்களும், சத்யமங்கலம் நகராட்சியில் 33 ஆயிரத்து 86 வாக்காளர்களும், 42 பேரூராட்சிகளில் 4 லட்சத்து 1, 538 வாக்காளர்கள் என மொத்தம் 9 லட்சத்து 72 ஆயிரத்து 575 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் 113 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவு டி.எஸ்.பி அண்ணாதுரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 1,251 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட 35 இடங்களில் உள்ள 113 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படும்.
கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அமைதியாக தேர்தல் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று இறுதிப் பட்டியல் வெளியானதும், வேட்பாளர்களை பொறுத்து பதட்டமான ஓட்டுச்சாவடிகள் அதிகரிக் கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 14 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை 14 இடங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19&ந் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 14 இடங்களில் வாக்கு எண்ண ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண சித்தோட்டில் உள்ள ஐ.ஆர்.டி.டி. மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பவானி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகளை பவானி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எண்ண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் கோபிசெட்டி பாளையம் வைர விழா உயர்நிலைப்பள்ளியில் உள்ள கே.எம்.ஆர். ஹாலில் எண்ணப்படுகிறது.
சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட பகுதி களில் பதிவாகும் வாக்குகள் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. புஞ்சைபுளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பதிவாகும் வாக்குகள் புஞ்சை புளியம் பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
இதேபோல் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் சித்தோடு வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி யிலும், அவல்பூந்துறை, சிவகிரி, கொல்லன் கோவில், மொடக்குறிச்சி, வடுகப்பட்டி, அரச்சலூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும்,
கொடுமுடி, சென்னசமுத்திரம், வெங்கம்பூர், கிளாம்பாடி, பாசூர், ஊஞ்சலூர், வெள்ளோட்டம்பரப்பு ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் கொடுமுடி ஸ்ரீசங்கரா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப்பள்ளியிலும், பெத்தாம்பாளையம், பெருந்துறை, கருமாண்டி செல்லிபாளையம், நல்லாம்பட்டி, காஞ்சிகோவில், பழைய பாளையம், சென்னிமலை ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியிலும்,
ஆப்பக்கூடல், ஜம்பை, மேட்டுப்பாளையம், சலங்கபாளையம் ஆகிய பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அந்தியூர், அத்தாணி, நெருஞ்சிப்பேட்டை, அம்மாபேட்டை, ஒலகடம் அதிக பேரூராட்சிகளில் பதிவாகும் வாக்குகள் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், லக்கம்பட்டி,கூகலூர், காசி பாளையம், நம்பியூர், எலத்தூர், கொளப்பலூர் ஆகிய பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் கோபிசெட்டிபாளையம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அரியப்பம்பாளையம், பெரியகொடிவேரி, வாணிபுதூர், கெம்பநாயக்கன்பாளையம் ஆகிய பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் சத்தியமங்கலம் காமதேனு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், பவானிசாகர் பேரூராட்சியில் பதிவாகும் வாக்குகள் பவானிசாகர் ஹோலி ரீடி மெர்ஸ் மெட்ரிக்குலேசன் பள்ளி என ஈரோடு மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் வரும் 22&ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முதல் முடிவுகள் வெளியாகும்.
பெருந்துறை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த தோப்புபாளையம் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49). இவரது மனைவி ஜூலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சசிகுமார் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார்.
தொழிலில் ரீதியாக பண வரவு செலவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக சசிகுமார் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சசிகுமார் வீட்டின் பின்னால் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
ஈரோடு:
கொரோனா தொற்று குறைய தொடங்கியதால் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதனால் மாட்டுச்சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இந்த வாரம் மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று நினைத்து நிலையில் மாறாக இன்று கூடிய சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியா பாரிகள் வந்திருந்தனர்.
அவர்களுக்கு வசதியாக மாட்டுச்சந்தை வளாகத் திலேயே கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. அதில் மாட்டு வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டனர்.
இன்று கூடிய சந்தையில் 350 பசு மாடுகள், 250 எருமை மாடுகள், 50 கன்றுகள் என மொத்தம் 650 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 90 சதவீதம் மாடுகள் விற்பனை ஆகின. சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது.
அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்து செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டி அருகே சரக்கு ஆட்டோ-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள முதியானூர் பகுதியை சேர்ந்தவர் சிவகணேசன் (60). விவசாயி.
இவர் தனது தோட்டத்தில் விளைந்த வெங்காயத்தினை விற்பனை செய்ய கோவை மாவட்டம் உக்கடம் காய்கறி மார்க்கெட் கொண்டு செல்வதற்காக அந்தியூர் மறவன்குட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் சரக்கு ஆட்டோ வில் ஏற்றிக்கொண்டு சென்றார். சரக்கு ஆட்டோ வை மணிகண்டன் ஒட்ட அருகில் சிவகணேசன் அமர்ந்து இருந்தார்.
சம்பவத்தன்று இரவு அந்தியூரில் இருந்து புறப்பட்டு கோவை செல்லும் வழியில் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள புங்கம்பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மீது சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விவசாயி சிவகணேசன் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த சிவகணேசன் உடலை அருகில் இருந்த பொதுமக்கள் போராடி மீட்டனர். டிரைவர் மணிகன்டன் காயத்துடன் உயிர் தப்பினார்.
சம்பவ இடத்துக்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி போலீசார் சிவகணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சத்தியமங்கலத்தில் ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தால் நடுவழியில் நிறுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில் ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தால் நடுவழியில் நிறுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது.
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை சிக்கரசம்பாளையம் என்ற பகுதியில் தனியார் நூல் மில் உள்ளது.
இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த கமூருதின் என்பவர் தனது மனைவி நசிமாபேகம் மற்றும் ஒரு குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் நசிமாபேகம் 2-வதாக கர்ப்பம் அடைந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக அங்கு ஆம்புலன்சு விரைந்து சென்று நசிமா பேகத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர்.
அப்போது பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சு நடுவழியில் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் பரத் என்பவர் பிரசவம் பார்த்தார்.
அப்போது நசிமா பேகத்துக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக நம்பியூர் காந்திபுரம் பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை 29 கோழிகளை அடித்து கொன்றது.
நம்பியூர்:
ஈரோடு-திருப்பூர் மாவட்ட எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுத்தை சோளக்காட்டில் பதுங்கி இருந்தது. அப்போது அங்கு வந்த 3 பேரை அடுத்தடுத்து தாக்கியது.
இதையடுத்து அந்த சிறுத்தை திருப்பூர் புறநகர் பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் திருப்பூர் நகருக்குள் நுழைந்து அங்கும் சிலரை தாக்கியது. இதையடுத்து வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நம்பியூர் காந்திபுரம் பகுதியில் இரவில் சிறுத்தை நடமாட்டம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதிக்கு வந்த சிறுத்தை 29 கோழிகளை அடித்து கொன்றது.
நேற்று முன்தினம் இரவு கன்னியம்மாள் என்பவரது ஆட்டு பட்டிக்குள் புகுந்து அங்கு கட்டி வைத்திருந்த 3 ஆடுகளையும் சிறுத்தை கடித்து குதறி கொன்றது. இதில் ஒரு ஆட்டின் உடலை பாதியாக துண்டித்து எடுத்து சென்றது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தபோது அது சிறுத்தையின் கால் தடம் என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து காந்திபுரம் பகுதியில் 5 இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது. மேலும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவும் தண்டோரா மூலம் அறிவித்தனர். மேலும் டி.என்.பாளையம் வனத்துறையினர் சார்பில் இரவு நேரத்தில் கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் சிறுத்தை ஊருக்குள் நுழைந்தது. அப்போது வெங்கிடுசாமி என்பவரது தோட்டத்தில் இருந்த 2 ஆடுகளை அடித்து கொன்று விட்டு தப்பி சென்று விட்டது. தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
விளாமுண்டி வனச்சரகத்தில் இருந்து வெளியேறிய சிறுத்தை அருகில் உள்ள தோட்டத்து பகுதியில் பகல் நேரங்களில் பதுங்கி கொண்டு இரவில் கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. எனவே இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே சிறுத்தை நடமாட்டத்தை தெரிந்து கொண்டு கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் வந்து 3 பிரிவாக சிறுத்தையை தேடி வருகின்றனர். எனவே சிறுத்தையை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் இன்று நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீன்கள் இறந்து கிடந்ததை பார்க்க திரண்டனர்.
தற்போது காவிரி ஆற்றில் குறைவான அளவே தண்ணீர் செல்வதால் கரையோர பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் ஏராளமான சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. அதேபோல் சாயத் தொழிற்சாலை கழிவுகளும் ஆங்காங்கே கலப்பதால் மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் இன்று மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.