என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொற்று குறைந்து வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன்படி தினமும் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 25 சதவீதம் பேருக்கு தொற்று உறுதியானது. 

    பெரும்பாலானோருக்கு லேசான அறிகுறி என்பதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப் படுத்தி கொண்டனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அந்தந்த பகுதியில் உள்ள சுகாதாரத்துறையினர் செய்து வந்தனர்.


    இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங் கியுள்ளது. தற்போது தினசரி பரிசோதனை செய்வதில் கொரோனா தொற்று 16 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 576 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 871 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 915 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 21 ஆயிரத்து 488 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்புடன் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 74 வயது மூதாட்டி பரிதாபமாக இறந்தார். 

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 726 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 7,657 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இந்த மனுக்களை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கா ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இந்த மனுக்களை  ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கா ஆகியோர் பரிசீலனை செய்தனர். 

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற் கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக மைய கட்டிடம், வீரப்பன்சத்திரம் பழைய அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதேபோல் 4 நகராட்சி அலுவலகம்,  42 பேரூராட்சி அலுவலகங்களில் வேட் பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் 3 நாட்கள் வேட்பு மனு தாக்கல் களை கட்டவில்லை. ஆனால் கடைசி 2 நாட்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    நேற்று முன்தினம் வரை மாநகராட்சியில் 126  பேர், நகராட்சியில், 246 பேர், பேரூராட்சிகளில் 1,161 பேர் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று மாநகராட்சியில் 364 மனுக்கள், நகராட்சியில் 271 மனுக்கள், பேரூராட்சியில், 1,133 மனுக்கள் என ஒரே நாளில் 1,768 வேட்பு மனு தாக்கலானது.

    இதன்படி மாநகராட்சி யில் 490 பேர், 4 நகராட்சிகளில் 517 பேர்,  42 பேரூராட்சியில் 2,294 பேர் என 3,301 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னி லையில் பரிசீலனை செய் யப்பட்டது.

    இதில் வேட்பு மனுக்கள் முறையாக தாக்கல் செய்யப் பட்டுள்ளதா? விண்ணப் பங்களை வேட்பாளர்கள் முறையாக பூர்த்தி செய்து உள்ளார்களா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வரும் 7-ந் தேதி (திங்கட் கிழமை) வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிடப் படுகிறது. வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 22-ந் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
    இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் வடக்குவீதி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 28 கோழிகளை மர்ம விலங்கு கடித்து கொன்றது.

    தொடர்ந்து அதே பகுதியில் கன்னியம்மாள் என்பவருக்கு சொந்தமான பட்டியில் புகுந்து 3 ஆடுகளையும், அடுத்த நாள் செட்டியம்பதி என்ற பகுதியில் 2 ஆடுகளையும் மர்ம விலங்கு அடித்து கொன்றது.

    தொடர்ந்து கால்நடைகளை மர்மவிலங்கு தாக்கி வந்ததால் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் டி.என்.பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கால்தடங்கைள ஆய்வு செய்தனர்.

    அப்போது ஆடு, கோழிகளை அடித்து கொன்றது சிறுத்தை என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் 5 இடங்களில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டது.

    பகல் நேரங்களில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி கொள்ளும் சிறுத்தை இரவு நேரங்களில் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடுவது தெரிய வந்தது. இதையடுத்து காட்டு பகுதிக்கு பொதுமக்கள் தனியாக செல்ல கூடாது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் நம்பியூர் அருகே உள்ள இருகாலூர் என்ற கிராமத்தில் பொன்காத்த அய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் நேற்று மாலை 5 மணி அளவில் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தை அந்த பகுதியில் உலாவிக் கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன், வனத்துறை மருத்துவர் சதாசிவம் மற்றும் வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுத்தை பதுங்கி இருந்த பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அங்கு 6 தானியங்கி கேமராக்களை பொருத்தினர்.

    மேலும் இரவு நேரம் ஆகிவிட்டதால் வனத்துறையினருடன் கிராம மக்களும் சேர்ந்து கொண்டு செல்போன் டார்ச்லைட் மற்றும் மின்விளக்குகள் மூலம் விடிய விடிய சிறுத்தையை தேடினர்.

    மேலும் இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி கிராமமே வெறிச்சோடியது.

    வனத்துறையினர், தன்னார்வலர்கள் பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் 2 பிரிவாக பிரிந்து இன்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ட்ரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இதேபோல் பொன்காத்த அய்யன் கோவில குளத்து பகுதியில் பதுங்கி உள்ள சிறுத்தை திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள குட்டகம் ஊராட்சிக்குட்பட்ட ஏழூர் கிராமம் பகுதியில் சுற்றியதாகவும் கூறப்படுகிறது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிறுத்தையின் உருமல் சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரோடு-திருப்பூர் எல்லையான பாப்பாங்குளம் பகுதியில் புகுந்த சிறுத்தை திருப்பூர் நகருக்குள் புகுந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தை பிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிறுத்தை ஊருக்குள் நுழைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 4 நகராட்சியில் அந்தந்த அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 42 பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 447 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று மாநகராட்சியில் 100 பேர், 4 நகராட்சியில் 164 பேர், 42 பேரூராட்சியில் 822 பேர் என மொத்தம் ஒரே நாளில் 1,086 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 126, 4 நகராட்சிகளில் 246, பேரூராட்சிகளில் 1,161 பேர் என 1,533 பேர் இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் இன்று தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேப்போல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி மைய அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் கடந்த 29-ந் தேதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது தங்களுடைய சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்கள் 100 சதவீதம் செலுத்தி வரி நிலுவை இல்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதனை வேட்புமனு தாக்கலின்போது கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இதனை அடுத்து மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய நிலுவை வரியை கடந்த சில நாட்களாக செலுத்தி வருகின்றனர். இதன்படி கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 2-ந் தேதி வரை 5 நாட்களில் மட்டும் ரூ.58 லட்சத்து 96 ஆயிரம் நிலுவை வரி செலுத்த பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கவர்னரின் உருவப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தீர்மானத்தை கவர்னர் திருப்பி அனுப்பி விட்டார்.

    எனவே தீர்மானத்தை திருப்பி அனுப்பிய தமிழக கவர்னரை கண்டித்தும். அவரை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் கவர்னர் உருவபொம்மையை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பன்னீர் செல்வம் பார்க்கில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் சாக்குபை, தண்ணீர் குடம் ஆகியவற்றுடன் தயாராக இருந்தனர்.

    இதை அறிந்த தமிழ்புலிகள் கட்சியினர் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் தலைமையில் ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு உள்ள சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த கவர்னரின் உருவப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கவர்னருக்கு எதிராக கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதை தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் இருந்த போலீசார் விரைந்து சென்று தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் உள்பட 19 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு தாலுகா அலுவலகம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறித்த மர்ம நபரை செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
    பெருந்துறை:

    போலீஸ் போல் நடித்து தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் பறித்த மர்ம நபரை செல்போன் எண்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமிரா பதிவுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

    திருப்பூர் செரீப் காலனி பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 42). இவர் அந்த பகுதியில் ஜவுளி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது தொழிலுக்கு அவரது நண்பர் ஆனந்த் என்பவர் பண உதவி செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஆனந்த், பூபதிக்கு போன் செய்து பண பரிவர்த்தனை செய்தால் 20 சதவீதம் அதிக கமிஷன் தருவதாக எனக்கு தெரிந்த கருப்பசாமி என்பவர் கூறு கிறார். எனவே உங்களிடம் பணம் இருந்தால் இந்த பரிவர்த்தனை திட்டத்தில் முதலீடு செய்யுமாறு கூறினார்.

    அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறினார். பின்னர் ஆனந்த் தனக்கு தெரிந்த நண்பர் பால கிருஷ்ணன் மூலம் பணம் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதையடுத்து பூபதிக்காக ஆனந்த் ரூ.10 லட்சம் ஏற்பாடு செய்தார். பண பரிவர்த்தனை மூலம் 20 சதவீத கமிஷன் தருவதாக கூறிய கருப்பசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

    இதை யடுத்து அந்த நபர் பூபதி, ஆனந்த் ஆகியோரிடம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடி பகுதிக்கு பணத்துடன் வருமாறு கூறினார். இதை நம்பி பூபதி, ஆனந்த், பால  கிருஷ்ணன் ஆகியோர் திருப்பூரில் இருந்து கார் மூலம் வந்து பணத்துடன் விஜயமங்கலம் பகுதியில் காத்திருந்தனர்.

    அப்போது அங்கு அவர் களுக்காக காத்திருந்த  கருப்ப சாமி தனக்கு தெரிந்த பண பரிவர்த்தனை செய் வதாக கூறும் நிதின் என் பவருடன் போனில் பேசி னார். இதைதொடர்ந்து கருப் பசாமி கூறியபடி அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் இந்த இடம் சரியில்லை. விஜயமங்கலம்- திங்களூர் ரோட்டுக்கு பணத்துடன் வந்து விடுங்கள். அங்கு நிதின் வந்து விடுவார் என்று கூறினர்.
     
    இதனால் பூபதி, ஆனந்த், பாலகிருஷ்ணன் திங்களூர் பிரிவு அருகே சென்றனர். அப்போது வேறு காரில் இருந்த நிதின் என்று கூறி கொண்ட நபர் அவர்கள் 3 பேரிடமும் தன்னை அறிமுகம் செய்து கொண் டார்.பின்னர் பூபதி, ஆனந்த், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்டு வந்த ரூ.10 லட்சத்தை நிதின் பெற்று கொண்டார். பதிலுக்கு நிதின் அவர்களிடம் தன் னிடம் இருந்த வேறொரு பணப்பையை கொடுத்து இதில் ரூ.12 லட்சம் உள்ளது சரி பார்த்து கொள்ளுங்கள் என்று கூறி அதை கொடுக்க முயன்றார். 

    அப்போது அங்கு திடீரென மற்றொரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து 5 பேர் இறங்கினர். அவர்கள் தாங்கள் போலீஸ் என கூறி பூபதி வைத்திருந்த ரூ.10 லட்சத்தை வாங்கி கொண்டனர். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த காரில் ஏறி நிதின் என்பவரை அழைத்து கொண்டு தப்பி சென்றனர். இதை கண்டு பூபதி அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து பூபதி பெரு ந்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்ª பக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைதொடர்ந்து போலீ சார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தும் அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்தும் வருகிறார்கள். மேலும் அவர் களின் செல்போன் எண்கள் மற்றும் காரின் பதிவு எண் ஆகியவை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட  ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் விவசாயிகள் விளைவித்த விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலமாக விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    ஈரோடு மாவட்டத்தில்  2022-ம் மத்திய அரசின் ஆதாரவிலைத் திட்டத்தின் கீழ் ஈரோடு விற்பனை குழுவில் செயல்படும் சத்தியமங்கலம், அவல் பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை கொள்முதல்¢ ஜூன் மாதம் 2022 வரை செய்யப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள கொப்பரையானது அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள தரத்தில் இருக்க வேண்டும். மேலும் ஒரு கிலோ பந்துக்கொப்பரை ரூ.110 மற்றும் அரவைக் கொப்பரை ரூ.105.90 வீதம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. 

    கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

    எனவே இத்திட்டத்தில் பங்கு பெறவிரும்பும் விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் ஆகியவற்றின் நகல்களுடன் சத்தியமங்கலம், அவல் பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

    இக்கொள்முதல் திட்டத் தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தென்னை சாகுபடி செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்கள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளை 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1.50 லட்சம் பேருக்கு செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    மக்களிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் நாளை (சனிக்கிழமை)  21-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

    நாளை மட்டும் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1,988 பணி யாளர்கள், 66 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. 18 வயது நிரம்பிய இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதேபோல் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கும் நாளை தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் 60 வயது உடைய இணை நோயுடைய முதியவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
    சத்தியமங்கலம் அருகே இன்று காலை பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இந்த விபத்தில் கிளீனர் பலியானார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே இன்று காலை பஞ்சராகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இந்த விபத்தில் கிளீனர் பலியானார்.

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து கல் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கோவை நோக்கி புறப்பட்டது. 

    இன்று காலை அந்த லாரி சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென பஞ்சரானது.  இதையடுத்து லாரியை டிரைவர் ரோட்டோரமாக நிறுத்தினார்.

    இதேபோல் கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு என்ற பகுதியில் இருந்து குளிர்பானம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி கேரள மாநிலம் பாலக்காடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. 

    இந்த லாரி சத்தியமங்கலம்-பண்ணாரி சாலையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென ரோட்டோரம் பஞ்சராகி நின்று இருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

    இதில் குளிர்பான லாரியின் இடது பக்கம் பஞ்சராகி நின்ற லாரிக்குள் சொருகி கொண்டது. 

    இந்த விபத்தில் குளிர்பானம் ஏற்றி வந்த லாரியின் இடதுபுறம் அமர்ந்து இருந்த சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கிளீனர் சிவக்குமார் (50) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

    இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த சிவக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தின் காரணமாக சத்திய மங்கலம்-பண்ணாரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பால் சொசைட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
    சித்தோடு:

    நிலுவைத்தொகை வழங்காததை கண்டித்து பால் சொசைட்டி உறுப்பினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஈரோடு ஊராட்சி ஒன்றியம் எலவமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மூலப் பாளையம் கிராமத்தில் மூலப்பாளையம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சங்கத்தில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300 பேர் உறுப்பின ராக இருந்து கொண்டு காலை மற்றும் மாலை 2 வேளையும் பால் ஊற்றி வருகின்றனர். 

    அதேபோல் இந்த கூட்டுறவு சங்கத்தில் ஊற்றப்படும் பாலுக்கு உண்டான பணம் வாரம் ஒருமுறை கூட்டுறவு சங்கத்தால் கொடுக்கப்பட்டு வந்தது.
     
    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31&ந் தேதி பால் நிலவை தொகை கொடுக்கப் பட்ட நிலையில் கடந்த ஒரு மாதமாக ரூ.5 லட்சத்து 18 ஆயிரத்து 948 பால் ஊற்றிய உறுப்பினர்களுக்கு நிலுவைத் தொகை கொடுக்கப்படாமல் கால தாமதம் செய்துள்ளதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து இன்று காலை மூலப்பா ளையம் பால் சொசைட்டி முன்பு பால் ஊற்றும்  உறுப்பினர்கள், விவசாயிகள் என பலர் முற்றுகையிட்டு நிலுவைப்பணம் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத்தொடர்ந்து தகவலறிந்து சித்தோடு இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பால் நிலுவைப் பணம் கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து உறுப்பி னர்கள் கூறுகையில், தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய 2 பேருக்கும் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக காசோலையில் கையெழுத்து போடாமலும், வங்கியிலிருந்து பணம் எடுக்காமலும் காலதாமதம் செய்து வருகின்றனர். 

    ஆகையால் நாங்கள் முற்றுகை போராட்டம் நடத்தினோம் என தெரிவித்தனர்.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கூட்டமாக யானைகள் ரோட்டை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கூட்டமாக யானைகள் ரோட்டை கடந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்  மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான் உள்பட ஏராளமான  வன விலங்குகள் வசித்து வருகின்றன. 

    இந்த வனச்சாலை வழியாக தண்ணீர் மற்றும் உணவு தேடி வன விலங்குகள் அடிக்கடி ரோட்டை கடந்து சென்று வருகிறது. 

    இந்த நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட  வனப்பகுதி தாளவாடியில் இருந்து  தலமலை  செல்லும் ரோட்டில்  சிக்கள்ளி அருகே  யானைகள் கூட்டமாக வனச் சாலையை கடந்து சென்றது. 

    இதனால் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை சிறிது தூரத்துக்கு முன்பாக நிறுத்தி கொண்டனர்.

     யானைகள்  வனப் பகுதிக்கு சென்ற பின் வாகனஓட்டிகள் சென்றனர். வன விலங்குகள் உணவு தண்ணீருக்காக சாலையை கடந்து செல்கிறது. 

    எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக் கையுடன் செல்லுமாறு  வன விலங்குகளை தொந்தரவு செய்யாமல் செல்ல வேண் டும் என வனத்துறை அறி வுறுத்தி வருகின்றனர்.
    ×