என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் அந்த வழியாக காரில் வந்த 4 பேர் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே வட மாநில வாலிபரிடம் அந்த வழியாக காரில் வந்த 4 பேர் பணம் மற்றும் செல்போன் பறித்து கொண்டு காரில் தப்பி சென்றனர்.

    மேற்குவங்க மாநிலம் 24 பர்கானா மாவட்டம் ரூப்மேரி பகுதியை சேர்ந்தவர் பர்சன் பர்மன் (வயது 21). இவர் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் தங்கி அந்த பகுதியில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு தனது அம்மாவிற்கு பணம் அனுப்புவதற்காக பெருந்துறை பணிக்கம்பாளையம் ரோட்டிலுள்ள ஒரு ஏ.டி.எம். டெபாசிட் மிஷினில் பணம் போடுவ தற்காக ரூ.5 ஆயிரம் எடுத்து கொண்டு அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆம்னி காரில் இருந்த 4 பேர் கீழே இறங்கி பர்சன் பர்மனை பிடித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு செல்போனை பிடுங்கி கொண்டு அங்கிருந்து காரில் வேகமாக தப்பி சென்று விட்டனர்.

    உடனடியாக பர்சன் பர்மன் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து பணத்தை பறித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்.
    அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அந்தியூர்:

    அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தவிட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). இவர் கடந்த 2&ந் தேதி அந்தியூர் போலீஸ் நிலையம் முன்பு  துப்பாக்கியுடன் நின்று எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்போது தேர்தல் சமயம் என்பதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருக்கும் நபர்கள் தங்களது துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பார்கள்.
     
    அவ்வாறு துப்பாக்கி உரிமம் பெற்ற அந்தியூரை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் தனது டபுள் பேரல் துப்பாக்கியை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வந்துள்ளார். 

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த கோவிந்தராஜ் அந்த துப்பாக்கியை வாங்கி புகைப்படம் எடுத்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 28.52 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்திட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள், 2--ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்று 496 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் 9,500 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 

    இதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 89.6 சதவீதம் பேர், அதாவது 16 லட்சத்து 22 ஆயிரத்து 225 பேரும், 2-வது தவணையினை 68 சதவீதம் 12 லட்சத்து 29 ஆயிரத்து 897 பேரும் என மொத்தம் 28 லட்சத்து 52 ஆயிரத்து 122 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இதில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் 81 ஆயிரத்து 620 பேருக்கும், பூஸ்டர் தடுப்பூசி 10 ஆயிரத்து 297 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    ஈரோட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 1.22 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோட்டில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து 1.22 லட்சம் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் 3-ம் அலை காரணமாக கடந்த மாத தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.  

    இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தது.
     
    இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது.  இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    நேற்று மேற்கொண்ட கொரோனா தினசரி பரிசோதனைகளில் 13.6 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளது.

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 883 பேர் குணமடைந் துள்ளனர். இதுவரை குணமடை ந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 22 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது. 

    கொரோனா பாதிப்புடன் கோவை மருத்துவ கல்லூரி மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

    இதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 727 ஆக உயர்ந்துள்ளது

    தற்போது மாவட்டம் முழுவதும் 7,156 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதில் பெரும்பாலோனோருக்கு லேசான அறிகுறி உள்ளதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு கனி ராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் சுவிதா (வயது 24). என்ஜினீயரிங் பட்டதாரி. சுவிதா அதே பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரை கடந்த 1½ வருடத்திற்கு முன்பு காதலித்து பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.

    லோகநாதன் சித்தோட்டில் உள்ள டாஸ்மாக் குடோனில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார். கணவன் மனைவி இருவரும் ஓங்காளியம்மன் கோவில் காந்திநகர், கனிராவு த்தர்குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். மகிழ்ச்சியாக சென்ற இவர்களின் வாழ்க்கை கணவரின் குடிப்பழக்கத்தால் திசை திரும்பியது.

    லோகநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை சுவிதா கண்டித்துள்ளார். கணவரிடம் இனிமேல் குடிக்கக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுவிதா கணவர் குடிக்க கூடாது என்பதற்காக கோவிலில் சென்று சாமி கும்பிட்டு கயிறு வாங்கி வந்துள்ளார்.

    அந்த கயிறு தனது கணவரின் கையில் கட்டி இனிமேல் குடிக்க கூடாது என்று கூறியுள்ளார். லோகநாதனும் சில நாட்கள் குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வேலையை முடிந்து வீட்டுக்கு வந்த லோகநாதன் குடித்து விட்டு வந்துள்ளார். இதனால் சுவிதா மனமுடைந்து காணப்பட்டார். இரவில் லோகநாதன் சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டார்.

    இதனையடுத்து சுவிதா பக்கத்து அறைக்கு சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை லோகநாதன் எழுந்து பார்த்தபோது மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

    இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுவிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டதாரி பெண் தற்கொலை குறித்து ஆர்.டி.ஓ. பிரேமலதா விசாரணை நடத்தி வருகிறார்.
    நம்பியூர் அருகே டிரோன் மூலம் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் 3-வது நாளாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம், இருகாலூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை கால்நடைகளை வேட்டியாடி வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இருகாலூர் என்ற கிராமத்தில் பொன்காத்தஅய்யன் கோவில் குளம் என்ற பகுதியில் சிறுத்தை உலாவி கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வனத்துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சிறுத்தை பதுங்கி இருந்த பொன்காத்த அய்யன்கோவில் குளத்து பகுதிக்கு சென்று கண்காணித்தனர்.

    மேலும் வனத்துறையினர் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருகாலூர் பகுதியில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் வனத்துறை சார்பில் தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    சிறுத்தை நடமாட்டம் காரணமாக இருகாலூர் அருகே உள்ள கருக்குப் பாளையம் புதூர் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

    பின்னர் வனத்துறை சார்பில் இருகாலூர் கிராமத்தில் தெருக்கள், மெயின் ரோடு பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டது.

    இதனையடுத்தது பொன்காத்த அய்யன் கோவில் குளத்து பகுதியில் நேற்று 2-வது நாளாக சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். மேலும் டிரோன் கேமரா மற்றும் தானியங்கி கேமரா மூலம் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து கண்காணித்தனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தில் சிறுத்தை படுத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் வனத்துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது மரத்தில் சிறுத்தையின் முடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் சிறுத்தையின் முடி மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக ஊட்டி மூலக்கூறு உயிர்பண்மை ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டிரோன் மூலம் தொடர்ந்து சிறுத்தையை வனத்துறையினர் 3-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிறுத்தை கண்ணில் பட்டால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    பொதுமக்கள் வீட்டை வீட்டு வெளியே வரவேண் டாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே 3-வது நாளாக முடங்கினர். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க இருகாலூர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்ட்டில் கூட போட்டியிடவில்லை. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வந்தது. நேற்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது. இதில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 142 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்ட்டில் கூட போட்டியிடவில்லை. இதனால் தொண்டர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 157 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் இந்த நகராட்சியிலும் ஒரு வார்டில் கூட தே.மு.தி.க. போட்டியிடவில்லை. கடந்த முறை தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட 2 பேர் வெற்றி பெற்று கவுன்சிலரான நிலையில் இந்த தேர்தலில் தே.மு.தி.க. போட்டியிடாதது கட்சியினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் பவானி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் தே.மு.தி.க. ஒரு வார்டில் கூட போட்டியிடவில்லை.

    சென்னிமலை அருகே திருமணத்துக்கு பணம் சம்பாதிக்க முடியாததால் வட மாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சென்னிமலை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் வினாயக் நாயக் இவரது மனைவி தமயந்தி நாயக் இவர்களது மகன் மனோஜ் நாயக் (வயது 27). மனோஜ் நாயக்கிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அவர்களது உறவு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயம் நடைபெற்றது.

    திருமணத்திற்கு தேவையான பணம் சம்பாதிப்பதற்காக அவர்கள் குடும்பத்துடன் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூருக்கு வந்து அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருமணத்திற்கு தேவையான பணத்தை மனோஜ் நாயக்கால் சம்பாதிக்க முடியவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    அவர் தனக்கு திருமணம் நடைபெறாது என்று வேதனையுடன் பெற்றோரிடம் கூறினார். அவரது பெற்றோர் திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யலாம் கவலைப்படாதே என்று ஆறுதல் கூறி வந்தனர்

    இந்த நிலையில் மனோஜ் நாயக்கின் பெற்றோர் இரவு வேலைக்கு சென்று விட்டனர். மன வேதனையில் இருந்த மனோஜ் நாயக் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு கொண்டார்.

    வேலை முடிந்து அவரது பெற்றோர் காலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது மகன் தூக்கில் தொங்கி கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் 21-வது கட்டமாக இன்று 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 21-வது கட்டமாக இன்று 496 மையங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 
     
    ஈரோடு மாவட்டத்திலும் மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் பல லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டு ள்ளனர். இந்நிலையில் இன்று 21-வது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், பள்ளிகள் என 496 மையங்களில் காலை இந்த மாபெரும் தடுப்பூசி முகாம் தொடங்கியது. 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

    இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 1988 பணியாளர்கள், 66 வாக னங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேப்போல் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். குறிப்பாக 2-ம் தவணை தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசியை செலுத்தி வருகின்றனர். இதேபோல 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இன்று முகாம்களில் போடப்பட்டு வருகிறது.
    ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆலோசனை மேற்கொண்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆலோசனை மேற்கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை கண் காணிக்க தமிழ்நாடு மாநில தேர்தல்ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்ட நிஷாந்த்கிருஷ்ணா கடந்த 3-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளராக பொறுப் பேற்று கொண்டார்.
     
    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் கிருஷ்ணனுண்ணியுடன் தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா   மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை விபரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். 

    ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிப்பவர்கள் தேர்தல் பார்வையாளரின் கைபேசி எண் 8807600787-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    மேலும், தேர்தல் தொடர்பாக புகார் அளிக்க ஏற்கனவே செயல்பட்டு வரும் இலவச தொலைபேசிஎண்கள், மாநகராட்சி- 180042594890, நகராட்சிகள் மற்றும் பேரூரா ட்சிகள்- 18004250424 -க்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ண னுண்ணி தெரிவித்துள் ளார்.
    ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறுவர்களுக்கு  தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

    முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டது. 

    பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக  கொரோனா தாக்கம் ஏற்பட் டாலும் லேசான அறிகுறியிலேயே அவர்கள் குணம் அடைந்து விடுகிறார்கள்.  

    இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர் களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில்  முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப் பட்டது.

    அதன்படி கடந்த மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வந்தது. 

    இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி அடுத்து 1-ம் வகுப்பு  முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  

    இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது.  இதையடுத்து சுகாதாரத் துறையினர் மாணவர்கள்  ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்தது.  

    இந்நிலையில் மீண்டும்  கொரோனா  தாக்கம் குறையத் தொடங்கி யதால் இந்த வாரம் முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.  

    இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79,982 சிறுவர்களுக்கு   தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    சென்னிமலை அருகே கே.சி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கே.சி.வலசு பகுதியில் செயல்படும் நெல் கொள்முதல் நிலையத்தை மாற்றக்கூடாது என விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பினர். 

    இது குறித்து விவசாயிகள் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி கே.சி.வலசில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 

    இந்த மையம் அரச்சலூர், சென்னிமலை ஆகிய நெல் விளையும் விவசாயிகளுக்கு மையப்பகுதியாக உள்ளது. இதனால் சுற்றுப்பகுதி விவசாயிகள் பயன் அடைந்தனர்.

    ஆனால், தற்போது புதிய தாக இந்த நெல் கொள்முதல் நிலையத்தை அட்டவணை அனுமன்பள்ளி கிராமம், பழையபாளையம் அருகே அரசு புதிதாக கட்டியுள்ள கட்டிடத்திற்கு மாற்றம் செய்து அங்கு நெல் கொள் முதல் செயல்பட உள்ளதாக அறிகிறோம். அந்த பகுதி நெல் விளைச்சல் இல்லாத பகுதியாகும்.

    அந்த கட்டிடத்தினை சுற்றி பாறை குழிகளாக உள்ளது. அதில் தண்ணீர் நிரம்பி உள்ளது. புதிய கட்டிட நெல் கொள்முதல் நிலையத்திற்கு நெல் கொண்டு செல்லும் வாகனம் செல்வதிலும் சிரமம் ஏற்படும்.

    மேலும் நெல் மூட்டைகளை அடுக்குவது என விவசாயிகள் பெரிதும் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை பழைய இடமான கே.சி.வலசு பகுதி லேயே செயல்பட உரிய ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
    ×