என் மலர்tooltip icon

    ஈரோடு

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோட்டில் வீடு, வீடாக சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோட்டில் வீடு, வீடாக சென்று க்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள். வெளியூரில் இருப்பவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

     அந்தந்த வார்டுக்கான தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பா.ஜ.க மற்றும் சுயேட்சை வேட்ப £ளர்கள் பிட் நோட்டீஸ்கள் அச்சிட்டு, 3 முதல் 5 பேருடன் தெருத்தெருவாக சென்று, வாக்காளர் பட்டியல்படி வீடுகளில் வாக்கு சேகரிக்கின்றனர்.

    முதற்கட்டமாக ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால், ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாக்காளர்கள், அவர்கள் தற்போது இங்குள் ளார்களா? வெளியூரில் இருந்தால் தேர்தல் தேர்தல் அன்று வருவார்களா?, அவர்களது போன் எண், வேறு வார்டில் அவர்கள் வசிப்பவராக இருந்தால், அங்குள்ள விலாசம், போன் எண் போன்றவற்றை பெறுகின்றனர்.

    சென்று பார்க்கும் து£ரத்தில் இருந்தால், அவர்களை நேரில் சந்தித்து ஓட்டு சேகரிக்க ஆட்களை அனுப்புகின்றனர். போனில் அழைக்கும் தொலைவில் இருந்தால், உடனடியாக போனில் ‘கேன்வாஸ்’ செய்கின்றனர். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றதும், அங்குள்ள வாக்காள ர்களுக்கு பழக்கமானவர்கள் மூலம் அவர்கள் என்ன கட்சி ஆதரவாளர்கள், அல்லது பொதுவானவரா என்ற விபரத்தையும் குறிக்கின்றனர்.

    தாங்கள் சார்ந்த கட்சிக்காரராக இருந்தால், அவர்களை கட்சியினர் மூலம் அணுகவும், பொது வானவராக இருந்தால், அவர்களிடம் அடுத்த சுற்றில் பிரசாரத்துக்கு வரும்போது பேசி ஆதரவு கோரும்படி திட்டமிட்டு செல்கின்றனர்.

    ஈரோடு மாநகராட்சி பகுதியில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வில் புது முகங்கள், ஆண் நிர்வாகிக்கு பதில் அவரது மனைவி, தாயார் போன்றோர் நிறுத்தப்பட்டுள்ளதால், வாக்காளர்களிடம் அவர்களை அறிமுகம் செய்யும் நிலை உள்ளது.

    இருப்பினும் பேரூராட்சி வார்டுகளில் 680 முதல் 1,800 ஓட்டும், நகராட்சி வார்டுகளில் 1,200 முதல் 2,600 ஓட்டும், மாநகராட்சியில் 6,500 முதல் 9,600 ஓட்டும் உள்ளதால் தங்களது கட்சி ஆதரவாளர்கள், பொதுவானவர்கள், எதிர் கட்சியை ஆதரிப்பவர்கள் என 3-ஆக பட்டியலிட்டு, அடுத்த கட்ட பிரசாரத்துக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

    தேர்தல் கட்டுப்பாடு அமலில் உள்ளதால் ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
    ஈரோடு:

    தேர்தல் கட்டுப்பாடு அமலில் உள்ளதால் ஈரோடு கனிமார்க்கெட் ஜவுளி சந்தைக்கு வெளி மாநில வியாபாரிகள் வராததால் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் அருகே புகழ்பெற்ற ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) இயங்கி வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வார சந்தை கடைகளும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெரும்.

    இந்த வார சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும், கோவை, சேலம், கரூர், திண்டுக்கல், நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். 

    சந்தை நாட்களில் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக கடந்த  ஜவுளி சந்தை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. 

    தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

    இதனையடுத்து பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் பணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். 

    இதன் காரணமாக இன்று நடந்த ஜவுளி சந்தையில் வெளிமாநிலங்களில் இருந்து வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் அடியோடு பாதிக்கப் பட்டது. 

    இதேபோல் உள் மாவட்டங்களில் இருந்தும்  வியாபாரிகளும் வரவில்லை. இருந்தாலும் முகூர்த்தம் காரணமாக சேலம், நாமக்கல்லில் இருந்து வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொதுவாக ஜவுளி சந்தைக்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ரூ.10 லட்சம் முதல் குறைந்தது ரூ.1 லட்சம் வரை கொண்டு வருவார்கள். தற்போது தேர்தல் நடத்தை காரணமாக வியாபாரிகள் பணம் கொண்டுவர தயங்கி இன்று நடந்த சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வர வில்லை. 

    இன்னும் ஒரு மாதத்திற்கு இதே நிலைமை தான் நீடிக்கும் என ஜவுளி வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 13 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 13 பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் டி.ஐ.ஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

    நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

    ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில்  443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வளையகார வீதி,  திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர், ராஜாஜிபுரம், கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில் வீதி, இந்திராபுரம், ஆர்.என் புதூர், ஜவுளி நகர் மற்றும் ராயபாளையம் உள்பட  13  வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமான வாக்குச்சாவடி மையங்களாக  கண்டறியப் பட்டுள்ளன.

    இந்த பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில்  கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அங்கு செய்யப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

    இங்கு கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    ஆய்வின் போது ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கடந்த 4 நாட்களாக சிறுத்தை பீதி நிலவி வருவதால் இருகாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு சிறுத்தை நுழைந்து கால்நடைகளை வேட்டையாடியது.

    இதையடுத்து டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலைமையில வனத்துறையினர் முகாமிட்டு சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பிடிக்கும் பணி இன்று 4-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதற்காக இருகாலூர், நம்பியூர், மணியக்காரன் பாளையம், சிறுத்தை பதுங்கி உள்ளதாக கூறப்படும் பொன்காத்தம்மன் கோவில் குளம் உள்பட 26 இடங்களில் தானியங்களி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    மேலும் இரவு நேரங்களில் வனத்துறையினரும் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆனாலும் இதுவரை சிறுத்தை தென்படவில்லை. இதையடுத்து இன்று இரவு முதல் தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையை தேடும் பணி நடத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    இந்த கேமராவில் சிறுத்தையை தவிர வேறு எந்த விலங்குகளும் பதிவாகாது. எனவே இதன் மூலம் கண்காணித்தால் சிறுத்தை நடமாட்டம் குறித்து உறுதியான தகவல் கிடைக்கும் என்பதால் இந்த கேமராவை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    மேலும் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 26 கண்காணிப்பு கேமராக்களையும் இன்று ஆய்வு செய்கின்றனர். அதில் சிறுத்தை உருவம் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர்.

    மேலும் இருகாலூர், பட்டிமணியக்காரன் பாளையம் ஆகிய 2 இடங்களில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு அமைக்கப்படுகிறது.

    கடந்த 4 நாட்களாக சிறுத்தை பீதி நிலவி வருவதால் இருகாலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். பகல் நேரத்திலேயே அனைத்து வீடுகளும் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள தெருக்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    சிறுத்தையை பிடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 951 துப்பாக்கிகளை இதுவரை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ந் தேதியும், வாக்கு எண்ணிக்கை 22-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 1,447 துப்பாக்கிகள் உரிமம் பெற்று அதன் உரிமையாளர்கள் தற்காப்பிற்காக வைத்துள்ளனர். தேர்தலை யொட்டி உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் அலுவலர் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

    இதன்பேரில், ஈரோடு மாவட்டத்தில் பிஸ்டல், ரைபிள், ஒற்றை மற்றும் இரட்டை குழல் என 951 துப்பாக்கிகளை இதுவரை அதன் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து உள்ளனர். அதனை போலீசார் கைப்பற்றி, அதற்குரிய பாதுகாப்பு மையத்திலும் ஒப்படைத்தனர்.

    மேலும், வங்கி பாதுகாப்பிற்காக 45 துப்பாக்கிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வங்கி நிர்வாகங்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெருந்துறை அருகே இன்று காலை ரோட்டோர மரத்தில் கார் மோதி பெண் பலியானர். 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை அருகே இன்று காலை  ரோட்டோர மரத்தில் கார் மோதி பெண் பலியானர். 4 பேர் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பூர் பத்மினி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (48). இவரது மனைவி விஜயலட்சுமி (44). இவர்கள் குடும்பத்தினர் மேலும் 4 பேருடன் பண்ருட்டி அருகே உறவினர் வீட்டு விசேஷத்துக்கு காரில் சென்றனர். 

    பின்னர் அவர்கள் மீண்டும் திருப்பூருக்கு புறப்பட்டனர். கார் இன்று காலை 6 மணி அளவில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள பகலாய் ஊர் என்ற பகுதியில் வந்து கொண்டு இருந்தனர. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தாருமாறாக ஓடி ரோட்டோரம் இருந்த மரத்தில் பலமாக மோதி நின்றது.

    இதில் காரில் இருந்த விஜயலட்சுமி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த விபத்தில் சண்முகசுந்தரம், சுஜாதா(36), சுரேஷ் (45), ஹஸ்வந்தன் (4) ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

    விபத்து பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சு மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் பலியான விஜயலட்சுமியின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
    சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் கொரேனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
    ஈரோடு:

    சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் கொரேனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. 
     
    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

    இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நட வடிக்கைகளை எடுத் தது. இதன் காரண மாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 ஆக உயர்ந் துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1103 பேர் குணமடைந்துள்ளனர். 

    இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 90 வயது மூதாட்டி மற்றும் 65 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தனர். 

    இதையடுத்து மாவட் டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 6,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இதில் பெரும் பாலோனோருக்கு லேசான அறிகுறி என்பதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    தற்போது  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால்  உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்பதால் முதியவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களை தேவையில்லா மல் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    மேலும் 60 வயதை கடந்த முதியவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
    நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலின் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியீடு செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு போட்டியிடுவதற்காக மொத்தம் 3,301 பேர் விண்ணப்பித்து இருந்தனர். 

    வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையில் பல்வேறு காரணங்களால் 64 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 

    தற்போது மாவட்டம் முழுவதும் 3,237 வேட்பாளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுக்கள் திரும்ப பெற அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது. 

    தி.மு.க.வை பொறுத்தவரை ஈரோடு மாநகராட்சியில் 46 வார்டுகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 14 வார்டுகள் கூட்டணிக்கட்சிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. 

    அ.தி.மு.க.  57 வார்டுகளில் போட்டியிடுகின்றனர். த.மா.கா 3 வார்டுகளில் போட்டியிடுகிறது. 

    இது தவிர தே.மு.தி.க., பாரதிய ஜனதா, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆகிய கட்சிகள் தனித்தும் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    இதில்  தி.மு.க. வில் தேர்தலில் சீட்டு கிடைக்காத நிர்வாகிகள் சிலர் சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 

    இவ்வாறு சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் பட்டியல் ஏற்கனவே கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையை மீறி போட்டியிட வேண்டாம் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    எனவே அவர்கள் இன்று தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியலுடன், சின்னமும் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தேர்தல் காலம் இன்னும் சூடு பிடிக்க தொடங்கி விடும். 
    ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், அதிக மகசூல் பெற ஊட்டச்சத்து மேலாண்மையை கடைபிடிக்க அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய உழவியல் தொழில் நுட்ப வல்லுனர் சரவணகுமார் கூறியதாவது:-

    மாவட்டத்தில், மரவள்ளி கிழங்கு, 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டுள்ளனர். இப்பயிர் மலைப்பகுதி, மானாவாரி நிலத்தில் தொடர்ந்து பயிரிடுவதால், சத்து குறைபாடு ஏற்பட்டு, மகசூல் இழப்பு ஏற்படுகிறது. மண் வளம் பாதிக்கிறது. இதனை தவிர்க்க ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவிலும், சம விகிதத்திலும் அளிக்க வேண்டும். 

    ஹெக்டேர் பரப்பில் ஒரு முறை மரவள்ளி சாகுபடி செய்தால் சராசரியாக, 90 கிலோ சாம்பல் சத்து மண்ணில் உறிஞ்சப்படும். 

    இச்சத்து, பயிர்களில் புரதம், கார்போ ஹைட்ரேட், கொழுப்பு சத்துக்களின் ஒரு அங்கமாக மட்டுமின்றி, பயிரின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது.

    இலைகளில் உற்பத்தி செய்யப்பட்டகார்போ ஹைட்ரேட், பயிரின் மற்ற பாகங்களுக்கு எடுத்து செல்ல உதவும். மணற்பாங்கான நிலங்கள், ஒரே நிலத்தில் தொடர்ந்து மரவள்ளி சாகுபடி செய்வதன் மூலம் சாம்பல் சத்து பற்றாக்குறை ஏற்படும். 

    இப்பற்றாக்குறையால் பயிர், தண்டின் வளர்ச்சி குறைந்து, இலைகள் சிறுத்து போகும். அதிகளவு பற்றாக்குறை இருப்பின், அடி இலைகளின் நுனிப்பகுதியில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றி, இலைகள் கீழ்நோக்கி வளைந்து காணப்படும். தண்டின் மேல் மட்ட பகுதியில் சிறு வெடிப்பு தோன்றி, பயிர்கள் முதிர்ச்சி அடைந்தது போல காணப்படும்.

    தண்டின் கணு இடைப்பகுதிகள் சிறுக்கும். இக்குறைபாட்டை சரி செய்ய பொட்டாஷ் கரைசலை, 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்க வேண்டும். நுண்ணு£ட்ட சத்தாக இரும்பு, துத்தநாக சத்து குறைபாடும் மரவள்ளியில் அதிகம் தென்படுகிறது. நுண் சத்து குறைபாடானது கார அமிலத்தன்மை, 8:0க்கு அதிகமாக உள்ள நிலங்களில், தென்படுகிறது.

    இரும்பு சத்து குறைபாட்டால் இளம் இலைகள் பச்சையம் இழந்து காணப்பட்டு, இலைகள் வௌறியும், இலை நரம்புகள் அடர் பச்சை நிறத்துடனும் காணப்படும். குறைபாடு தீவிரமடையும்போது, இலைகள் முழுவதும் மஞ்சள் நிறமாகி, வெண் நிறத்தில் காட்சியளிக்கும்.

    இதை தவிர்க்க, ஒரு சதவீதம் இரும்பு சல்பேட்டை கரைசலை ஒட்டும் திரவம் கலந்து, 15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். துத்தநாக சல்பேட்டை கரைசல், 0.5 சதவீதம் அல்லது, 50 கிராம் துத்தநாக சல்பேட்டை, 10 லிட்டர் தண்ணீருடன் ஒட்டும் திரவம் கலந்து,15 நாள் இடைவெளியில் இரு முறை தெளிக்கலாம். இந்த ஊட்டச்சத்து மேலாண்மை மூலம், மரவள்ளி கிழங்கு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புகை பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் சென்னிமலை வனப்பகுதியில் 5 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சேதமானது.
    சென்னிமலை:

    புகை பிடித்து விட்டு அணைக்காமல் வீசியதால் சென்னிமலை வனப்பகுதியில் 5 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சேதமானது.

    சென்னிமலை மலை வனப்பகுதி 1,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த அடர்ந்த வனப்பகுதியில்  மரம், செடி, கொடிகள் வளர்ந்து காட்சி அளித்து வருகிறது. மேலும் இங்கு ஒரு சில இடங்களில் செடி, கொடிகள் காய்ந்து கிடக் கிறது.

    இந்த நிலையில் சென்னிமலை- காங்கேயம் மெயின் ரோடு, பசுவபட்டி பிரிவு திருவள்ளுவர் நகர் பகுதியினை ஓட்டி உள்ள வனப்பகுதியில் காய்ந்து கிடந்த செடி, கொடிகளில் திடீரென தீ பிடித்தது. 

    தொடர்ந்து தீ மளமள வென எரிய தொடங்கியது. இதில் 5 ஏக்கருக்கு மேல் தீபற்றி எரிந்தது.

    இது குறித்து சென்னி மலை தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது. ஆனால் தீயணைப்பு வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று அங்கு இருந்த மரக்கிளைஇ தழை களை கொண்டு அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர். 

    மேலும் வனப்பகுதியினை யொட்டி திருவள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்கு தீ பரவாமல் இருக்க வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். அதன் பின்பு தான் திருவள் ளுவர் நகர் பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். 

    தீ விபத்து எப்படி நடந்தது என வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் ரோட்டில் சென்ற  ஒருவர் சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வீசி இருக் காலம் என தெரிய வந்தது.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர்கள் பிரசாரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். வேட்பாளர்கள் பிரசாரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச் சாவடி மையங்கள், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

    மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. நகர்ப் புற தேர்தல் அட்டவணை வெளியான உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

    வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டு வாடா செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் 66 பேர் கொண்ட பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். 

    தற்போது வேட்பாளர்கள் வீடு, வீடாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் பறக்கும் படையினர் தங்களது சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    மாநகராட்சியின் முக்கியமான பகுதிகள், மாவட்டம் முழுவதும் முக்கியமான பகுதிகளில் பறக்கும் படையினர் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். தாங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை வீடியோவாகவும் பதிவு செய்து வருகின்றனர். 

    மேலும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்லப் படுகிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணித்தனர். வேட்பா ளர்களின் பிரசாரத்தையும் தீவிரமாக பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முறைகேடுகளை தடுக்க பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முறைகேடுகளை தடுக்க பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள், கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி  ஆகிய நகராட்சிகள்  மற்றும் 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தேர்தல் நடக்கிறது.
     
    இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்  நிறைவடைந்தது. தகுதியற்ற 64  மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.  

    அதைத் தொடர்ந்து தேர்தலை கண்காணிக்கும் வகையில்  வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    உதவி இயக்குனர் நிலை அதிகாரிகளான இவர்களை ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி நியமித்து உள்ளார். தேர்தல் வட்டார கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் வருமாறு:-

    ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1 ஆர்.மனோகரன் -9443894843, மண்டலம் 2 கே.மீனாட்சி-73388 01258, மண்டலம் 3  எம்.இலாகிஜான்-9445000237, மண்டலம் 4 ஜி.குமரன்-88705 20538. 

    அதேபோல் 4 நகராட்சிகளான பவானி- என்.முருகேசன்-9443547792, கோபி- எம்.அனிதா -94450 06562, சத்தியமங்கலம்- எஸ்.உமா சங்கர்-9443895338, புஞ்சைபுளியம்பட்டி- ஏ.தியாகராஜன்-94450 29723.

    இதேப்போல் 42 பேரூராட்சிகளான அந்தியூர்- ஆர்.கார்த்திகேயன்- 9443546351, ஆப்பக்கூடல்  சி.மல்லிகா-9543789894, பவானிசாகர்- என்.சரோஜா-98653 06747, சென்னிமலை- எஸ்.சங்கர்- 94438 65485, சித்தோடு- கே.ஜெயந்தி - 94436 56161, கருமாண்டி செல்லிபாளையம்- எம்.குருசரஸ்வதி - 97906 11101.

    கொடுமுடி- பி.ஜெயந்தி- 9445074580, கூகலூர்- எஸ்.கவுசல்யாதேவி- 8903782773, லக்கம்பட்டி- வி.ஜீவதயாளன்- 9443852710, நம்பியூர்- டி.டி.முரளி -94424 54678, பெரியகொடிவேரி- எஸ்.காந்திமதி-99763 74249,பெருந்துறை- எல்.குழந்தைவேலு- 75024 02545. 

    சிவகிரி- எஸ்.சண்முகவடிவு-98428 88813, வாணிப் புத்தூர்-ஆர்.சரவணன்- 9489218360, வெங்கம்பூர்- சி.தியாகராஜன்- 9445512170, அரியப்பம்பாளையம்-வி.பிரியா- 90959 50500, அத்தாணி- பி.மரகதமணி- 63799 17277, அவல்பூந்துறை- பி.சிந்தியா-97870 45557.

    சென்னசமுத்திரம்- பி.வளர்மதி- 9499055702, ஜம்பை-எஸ்.குமாரசாமி- 9499055702, காஞ்சிக்கோவில்- பி.பொன்னம் பலம் -9894072677, காசிப்பாளையம் (கோபி)- ஆர்.பி.கார்திக்குமார்- 98427 28398, கொளப்பலூர்- எஸ்.சசிகலா-93621 19780, கொல்லங்கோவில்- எம்.மகேஸ்வரி-88389 06355, மொடக்குறிச்சி- கே.வேலுச்சாமி-97505 20838.

    நல்லாம்பட்டி- ஐ.பூங்கோதை-98433 16009, நசியனூர்-டி.ஜெகன் -9445512170, நெரிஞ்சிப்பேட்டை ஜெ.குணவதி- 97507 51385, பி.மேட்டுப்பாளையம்- டி.ரவிக்குமார்- 98943 18116,பள்ளபாளையம்- எஸ்.கொளிஞ்சிநாதன்- 8689904266, பாசூர்- எஸ்.தனசேகரன்-98426 12814,சலங்கபாளையம்- ஜி.திருமுருகன்- 94434 61320, வெள்ளோட்டாம்பரப்பு- எஸ்.சண்முகசுந்தரம்-94435 46094.

    அம்மாபேட்டை- எம்.கனிமொழி-99429 26333, அறச்சலூர்- எம்.விஜய்ராஜகுமார் -94863 24289, எலத்தூர்- ஆர்.சாந்தி-94867 94383, கெம்பநாயக்கன் பாளையம்- சி.மாரியப்பன்- 94438 38614, கிளாம்பாடி- ஜெ.ராஜராஜன்- 9940945620, ஒலகடம்- டாக்டர்.சேகர்-94438 96444,பெத்தாம்பாளையம்- டாக்டர் கோவிந்தராஜ்- 98427 27298. ஊஞ்சலூர்- ஆர்.ஸ்ரீதர்- 93448 55781, வடுகப்பட்டி- கே.விஜய குமார்-94430 06648.

    மேற்கண்ட உயர் அதிகாரிகள் வட்டார தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

     ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மண்டலங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் தொடர்பான முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த வட்டார தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் 18004259 4890 என்ற எணணில் மாநகராட்சி தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
    ×