என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முறைகேடுகளை தடுக்க பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி முறைகேடுகளை தடுக்க பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள், கோபி, பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் தேர்தல் நடக்கிறது.
இந்த வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. தகுதியற்ற 64 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து தேர்தலை கண்காணிக்கும் வகையில் வட்டார தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
உதவி இயக்குனர் நிலை அதிகாரிகளான இவர்களை ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி நியமித்து உள்ளார். தேர்தல் வட்டார கண்காணிப்பு அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொலைபேசி எண்கள் வருமாறு:-
ஈரோடு மாநகராட்சி மண்டலம் 1 ஆர்.மனோகரன் -9443894843, மண்டலம் 2 கே.மீனாட்சி-73388 01258, மண்டலம் 3 எம்.இலாகிஜான்-9445000237, மண்டலம் 4 ஜி.குமரன்-88705 20538.
அதேபோல் 4 நகராட்சிகளான பவானி- என்.முருகேசன்-9443547792, கோபி- எம்.அனிதா -94450 06562, சத்தியமங்கலம்- எஸ்.உமா சங்கர்-9443895338, புஞ்சைபுளியம்பட்டி- ஏ.தியாகராஜன்-94450 29723.
இதேப்போல் 42 பேரூராட்சிகளான அந்தியூர்- ஆர்.கார்த்திகேயன்- 9443546351, ஆப்பக்கூடல் சி.மல்லிகா-9543789894, பவானிசாகர்- என்.சரோஜா-98653 06747, சென்னிமலை- எஸ்.சங்கர்- 94438 65485, சித்தோடு- கே.ஜெயந்தி - 94436 56161, கருமாண்டி செல்லிபாளையம்- எம்.குருசரஸ்வதி - 97906 11101.
கொடுமுடி- பி.ஜெயந்தி- 9445074580, கூகலூர்- எஸ்.கவுசல்யாதேவி- 8903782773, லக்கம்பட்டி- வி.ஜீவதயாளன்- 9443852710, நம்பியூர்- டி.டி.முரளி -94424 54678, பெரியகொடிவேரி- எஸ்.காந்திமதி-99763 74249,பெருந்துறை- எல்.குழந்தைவேலு- 75024 02545.
சிவகிரி- எஸ்.சண்முகவடிவு-98428 88813, வாணிப் புத்தூர்-ஆர்.சரவணன்- 9489218360, வெங்கம்பூர்- சி.தியாகராஜன்- 9445512170, அரியப்பம்பாளையம்-வி.பிரியா- 90959 50500, அத்தாணி- பி.மரகதமணி- 63799 17277, அவல்பூந்துறை- பி.சிந்தியா-97870 45557.
சென்னசமுத்திரம்- பி.வளர்மதி- 9499055702, ஜம்பை-எஸ்.குமாரசாமி- 9499055702, காஞ்சிக்கோவில்- பி.பொன்னம் பலம் -9894072677, காசிப்பாளையம் (கோபி)- ஆர்.பி.கார்திக்குமார்- 98427 28398, கொளப்பலூர்- எஸ்.சசிகலா-93621 19780, கொல்லங்கோவில்- எம்.மகேஸ்வரி-88389 06355, மொடக்குறிச்சி- கே.வேலுச்சாமி-97505 20838.
நல்லாம்பட்டி- ஐ.பூங்கோதை-98433 16009, நசியனூர்-டி.ஜெகன் -9445512170, நெரிஞ்சிப்பேட்டை ஜெ.குணவதி- 97507 51385, பி.மேட்டுப்பாளையம்- டி.ரவிக்குமார்- 98943 18116,பள்ளபாளையம்- எஸ்.கொளிஞ்சிநாதன்- 8689904266, பாசூர்- எஸ்.தனசேகரன்-98426 12814,சலங்கபாளையம்- ஜி.திருமுருகன்- 94434 61320, வெள்ளோட்டாம்பரப்பு- எஸ்.சண்முகசுந்தரம்-94435 46094.
அம்மாபேட்டை- எம்.கனிமொழி-99429 26333, அறச்சலூர்- எம்.விஜய்ராஜகுமார் -94863 24289, எலத்தூர்- ஆர்.சாந்தி-94867 94383, கெம்பநாயக்கன் பாளையம்- சி.மாரியப்பன்- 94438 38614, கிளாம்பாடி- ஜெ.ராஜராஜன்- 9940945620, ஒலகடம்- டாக்டர்.சேகர்-94438 96444,பெத்தாம்பாளையம்- டாக்டர் கோவிந்தராஜ்- 98427 27298. ஊஞ்சலூர்- ஆர்.ஸ்ரீதர்- 93448 55781, வடுகப்பட்டி- கே.விஜய குமார்-94430 06648.
மேற்கண்ட உயர் அதிகாரிகள் வட்டார தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மண்டலங்கள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் தொடர்பான முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் அந்தந்த வட்டார தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும் 18004259 4890 என்ற எணணில் மாநகராட்சி தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.
Next Story






