என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,103 பேர் குணமடைந்தனர்
சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் கொரேனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஈரோடு:
சுகாதாரத்துறையினரின் தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால் கொரேனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.
இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நட வடிக்கைகளை எடுத் தது. இதன் காரண மாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கி உள்ளது. இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 397 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 651 ஆக உயர்ந் துள்ளது. ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1103 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 23 ஆயிரத்து 474 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 90 வயது மூதாட்டி மற்றும் 65 வயது முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தனர்.
இதையடுத்து மாவட் டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 729 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மாவட்டம் முழுவதும் 6,448 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பெரும் பாலோனோருக்கு லேசான அறிகுறி என்பதால் அவர்கள் வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர் 60 வயதை கடந்தவர்கள் என்பதால் முதியவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர்களை தேவையில்லா மல் வெளியே அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் 60 வயதை கடந்த முதியவர்கள் தடுப்பூசி போடாமல் இருந்தால் அவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதார துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.
Next Story






