என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

    முதல்கட்டமாக முன்களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், இரண்டு கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 10-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
    ஈரோடு மாவட்டத்தில் முன்களப்பணியாளர்கள், 2 தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதம் நிறைவடைந்த 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் என மொத்தம் 24 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சிறப்பு முகாம்கள் நடத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஸ்டர் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 கட்டமாக பூஸ்டர் தடுப்பூசிமுகாம் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இது தவிர அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 46 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி ஊழியர்களுக்கு நாளை 2-ம் கட்ட பயிற்சி நடக்கிறது.

    தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குசாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி கடந்த  ஜனவரி மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபிசெட்டி பாளையம், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
    இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
     
    வாக்குபதிவு நாளில் வாக்குசாவடி மையங்களில் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

     மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நாளை ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரி குலேஷன் பள்ளி என 2 இடங்களில் நடை பெறுகிறது.

    இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர் களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டி பாளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி யிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் பயிற்சி நடைபெற உள்ளது.

    இதேப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதில் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், வாக்காளர்களை ஒழுங்கு படுத்துதல், மின்னணு வாக்குபதிவுவை எப்படி கையாள்வது? மின்னணு வாக்குப்பதிவு பழுது ஏற்பட்டால் அதை எவ்வாறு சரி செய்வது போன்றவை குறித்து ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    இந்த பயிற்சி பங்கேற்கும் ஊழியர்களில் கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி போட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 3-ம் கட்ட பயிற்சி வரும் 18&ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    குறிப்பாக அ.தி.மு.க. அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி இன்று மாலை ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில் நடைபெறும் பிரச்சாரத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓரிடத்தில் நிற்க வைத்து அவர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    ஈரோடு, பிப்:

    மழைப்பொழிவு குறைந்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின்  மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. நீலகிரி மலைப்பகுதி பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.  இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.16 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 342 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் குறைந்துள்ளது.

    அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்காக 1000 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடியும் என மொத்தம் 3 ஆயிரத்து 400 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,
    பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆய்வு

    ஈரோடு:

    நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பவானி நகராட்சியில் சொக்கராயன் காடு, குருநாதன் வீதி, காமராஜ் நகர், பழனிபுரம், பசுவேஸ்வரர் வீதி, பழனி ஆண்டவர் கோவில் வீதி, பழைய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 7 வாக்குச்சாவடிகளும், பெருந்துறை பேரூராட்சி வாக்குச்சாவடிகளும் பதட்டம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
     
    இதையடுத்து இந்த வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பவானி நகராட்சி, பெருந்துறை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாய்வுகூட்டம் நடந்தது. கூட்டத்தில் இப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் பணியாற்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். 

    இந்த ஆய்வின் போது, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
    நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க வாகனங்களில் நெல் ஏற்றி வரும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.
    நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம்

    ஈரோடு:

    நெல் கொள்முதல் முறைகேட்டினை தடுக்க வாகனங்களில் நெல் ஏற்றி வரும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆலை அதிபர்களுக்கு போலீசார் விளக்கம் அளித்தனர்.

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை அலுவலகத்தில் அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுடனான கலந்தாலோசனை கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வுதுறை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். 
    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த கூட்டத்தில் நெல்கொள்முதல் செய்வதில் சில வியாபாரிகள் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இதனை தடுக்க சென்னை ஐகோர்டு வழிகாட்டுதல் பேரில், அரசு கூடுதல் முதன்மை செயலர் நசிமுதீன் புதிய விதிமுறைகளை விதித்துள்ளார்.
    அதன்படி நெல்கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைப்பது சம்மந்தமாகவும் மற்றும் உரிமம் பெற்ற வணிகர்களுக்கு வியாபாரம் செய்வது சம்மந்தமாகவும் ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட இடங்களுக்கு வாகனங்களில் கொண்டு வரும்போது, நெல் விற்பனை செய்தவர் பெயர், முகவரி, டின் நம்பர், அதற்கான பில் ரசீது, தொலைபேசி எண், இ-மெயில் முகவரியும், 

    அதேபோல், நெல்லினை வாங்குபவரின் பெயர், முகவரி, ஆலை முகவரி, டின் நம்பர், ஆணை படிவம், தொலைபேசி எண், இ-மெயில் முகவரி, நெல் ரகம், எத்தனை டன், எவ்வளவு மூட்டை, எங்கு கொள்முதல் செய்தது, அதற்கான தேதி மற்றும் வாகன பதிவு எண், வாகன என்ஜின், சேஸ் எண், வாகன உரிமையாளர் பெயர், டிரைவர் பெயர், வாகனம் புறப்பட்ட இடம், தேதி, நேரம், சேரும் இடம், நாள், மொத்த தூரம் (கி.மீ), வழித்தடங்கள் போன்ற விவரங்கள் வாகனங்களில் இருக்க வேண்டும்.

    இந்த விவரங்களை, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தணிக்கை செய்யும் போது கட்டாயம் சமர்பிக்க வேண்டும். 

    இந்த ஆவணங்கள் இல்லா விட்டால் வாகனங்களின் மீதும் அதனை பெறும் வியாபாரிகள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் .
    இவ்வாறு அவர் கூறினார்.

    சத்தியமங்கலம் அருகே அரசுநடுநிலைபள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று காலை போராட்டம் நடந்தது.
    கூடுதல் ஆசிரியர்களை நியமிக்ககோரி  மாணவர்கள்-பெற்றோர் போராட்டம்

    சத்தியமங்கலம்:

     சத்தியமங்கலம் அருகே அரசுநடுநிலைபள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று காலை போராட்டம் நடந்தது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையத்தில் 6-ம் வகுப்பு முதல் 8&ம் வரை செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் 126 மாணவ,மாணவிகள்படித்து வருகின்றனர். இவர்களுக்கு  பாடம் நடத்த 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தநிலையில் ஒரு ஆசிரியர் இன்னும் சில நாட்களில் பணி ஓய்வு பெறபோகிறார்.

    இந்தநிலையில் இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி இன்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஒன்று திரண்டு பள்ளி முன்பு போராட்டம் நடத்தினர்.

    மேலும் மாணவர்கள் பள்ளி முன்பு  அமர்ந்து  பாடம் படித்துக் கொண்டும் எழுதி கொண்டும் இருந்தனர். மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் போராட்டம் பற்றி தெரியவந்ததும் கல்வி அதிகாரிகள் மற்றும் தாசில்தார் ரவிசங்கர், இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போராட்டம் காரணமாக பள்ளி முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    கம்பனூர் காலனியில் வனத்துறையினர் நேரில் சென்று அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் டி.என்.பாளையம் வனசரகத்துக்குட்பட்ட பகுதிகளில் யானை, புலி, மான் மற்றும் சிறுத்தைகள் என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    வனப்பகுதியையொட்டி கிராம பகுதிகளில் பொது மக்கள் பலர் வசித்து வருகிறார்கள். மேலும் பலர் அந்த பகுதிகளில் விவசாயம் செய்தும், கால்நடைகளை வளர்த்தும் வருகிறார்கள். வனப்பகுதியையொட்டி கிராமங்களில் சிறுத்தை மற்றும் மர்ம விலங்குகள் அடிக்கடி புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது என பொதுமக்கள் புகார் கூறினர்.

    இந்த நிலையில் டி.என்.பாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் ஊராட்சி கம்பனூர் காலனி பகுதியில் மாரிச்சாமி என்பவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். அவர் வளர்த்து வந்த நாயை இரவு வனப்பகுதியில் இருந்து வந்த ஒரு சிறுத்தை கடித்து தூக்கி சென்றது.

    இது குறித்து மக்கள்கூறும் போது, இந்த பகுதியில் வன விலங்கு உள்ளே வராமல் இருக்க அகழி வெட்டப்பட்டு உள்ளது. இந்த அகழியை தாண்டி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் வந்து கால்நடை மற்றும் நாய்களை வேட்டையாடி வருகிறது. எனவே வன விலங்குகளை ஊருக்குள் புகாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கம்பனூர் காலனியில் வனத்துறையினர் நேரில் சென்று அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது நாயை தூக்கி சென்றது சிறுத்தை தான் என உறுதி செய்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கம்பனூர் காலனியில் வசிப்பவர்கள் விளாங்கோம்பை வன செக்போஸ்ட் அருகே வசித்து வருகின்றனர். இப்பகுதி வனத்தை ஒட்டியே அமைந்துள்ளதால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்கு நடமாட்டம் இருந்து வருகிறது.

    இந்த பகுதியில் வெட்டப்பட்டுள்ள அகழியை தாண்டியும் சிறுத்தை கிராமங்களுக்குள் வருகிறது. எனவே வன பகுதியில் மக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மேய்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.

    வனத்தை யொட்டிய பகுதியில் வசிப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினர்.

    மேலும் இது குறித்து டி.என்.பாளையம் வனத்துறை ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் கூறும்போது, இந்த பகுதியில் ஏற்கனவே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை கைஅடக்க தெர்மல் கேமரா மூலமும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 200 மீட்டர் தொலைவில் இருக்கும் விலங்குகளையும் கண்காணிக்க முடியும். அதன் பிறகு மேல் நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.



    ஈரோட்டில் மேலும் 288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,673 ஆக குறைந்தது.
    ஈரோடு:

    ஈரோட்டில் மேலும் 288 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,673 ஆக குறைந்தது.

    ஈரோடு மாவட்டத்தில் கட்டுக்குள் இருந்தால் கொரோனா தாக்கம் 3&ம் அலை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. தினமும் புதிய உச்சத்தைத் தொட்டு வந்தது.

    இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. 

    இதேபோல் தொடர்ந்து மாவட்டத்தில் குணமடைந் தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்ட பட்டியல்படி மாவட்டத்தில் மேலும் 288 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது. 

    ஒரே நாளில் பாதிப்பிலிருந்து 1052 பேர் குணமடைந்துள்ளனர். 

    இதுவரை குணமடைந் தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 526 ஆக உயர்ந்துள்ளது.  

    மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 729 பேர் உயிரிழந்து உள்ளனர். 

    தற்போது மாவட்டம் முழுவதும் 5, 673 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் கண்காணிப்பு பார்வையாளர்  நிஷாந்த் கிருஷ்ணா ஆய்வு செய்தார்.

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில்  மொத்தம் 490 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 22 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று 115 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். 

    51&வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் போட்டி யின்றி தேர்வு செய்யப் பட்டார். இதையடுத்து 59 வார்டுகளில் நடைபெறும் கவுன்சிலர் தேர்தலில் 352 பேர் போட்டியிடுகின்றனர். 

      ஈரோடு மாவட்டத்தின் தேர்தல் கண்காணிப்பு பார்வையாளராக நிய மிக்கப்பட்டுள்ள  நிஷாந்த் கிருஷ்ணா இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத் திற்கு  வந்தார். ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமாரை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட் டார்.

    பின்னர் அங்கு உள்ள கேபிள் கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார். எத்தனை பேர் பணியில் ஈடுபடுகின்றனர். இதுவரை எத்தனை போன் கால் வந்துள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியலை அவர் பார்வையிட்டார்.

    அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக சின்னத்தை  கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.  அந்த கடிதங்களை ஆய்வு செய்து பார்த்தார். 

    இதே போல் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடுவதற்குரிய 3 சின் னங்களை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர். அதையும் ஆய்வு செய்தார். 

    ஒரே சின்னத்தை 2 வேட்பாளர்கள் கேட்டு இருந்தால் அவர்களுக்கு  குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கீடு பணி நடந்தது. 

    இது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கள், பணியாளர்களும் உட னிருந்தனர்.
    பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக குறைந்தது
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையில் தொடர்ந்து நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால்  அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக குறைந்தது 

    ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. நீலகிரி மலைப்பகுதி பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக உள்ளது. 

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை  காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. 

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 97.42 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,183 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  

    அணையில் இருந்து தடப் பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக ஆயிரம் கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடியும்  என மொத்தம் 3 ஆயிரத்து 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    பெருந்துறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானர். 2 பேர் படுகாயமடைந்தனர்
    பெருந்துறை:

    பெருந்துறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானர். 2 பேர் படுகாயமடைந்தனர்

    ஈரோடு நாராயண வலசு பகுதியை சேர்ந்தவர் லிங் கேஸ்வரன் (48). இவர்  தனது  ஆம்னி வேனில் அவரது நண்பர்கள் சோமசுந்தரம் (30) மற்றும் ஈரோடு நாராயணசாமி வீதியை சேர்ந்த சக்திவேல் (40) ஆகி யோருடன்  ஈரோட்டில் இருந்து பெருந்துறைக்கு சென்றனர்.

    லிங்கேஸ்வரனை பெருந்துறை புதிய பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு சோமசுந்தரம், சக்திவேல் ஆகியோர் பணிக்கம் பாளையத்துக்கு சென்று விட்டனர். மீண்டும் பெருந்துறை வந்து அவர்கள் லிங்கேஸ்வரனுடன் ஆம்னி வேனில் ஈரோடு சென்றார்.

    அவர்கள்  மேட்டுக்கடை அருகே உள்ள ரிங் ரோட்டில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேனை திருப்பிய போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. 

    இதில் சக்திவேல் மற்றும் சோமசுந்தரம், லிங்கேஸ்வரன் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக் கத்தினர் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து   லிங்கேஸ்வரன் மற்றும் சக்திவேல் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் இன்று பரிதாபமாக  இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகிறார்.

    ×