என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம்
    X
    ஓ.பன்னீர்செல்வம்

    ஈரோட்டில் இன்று மாலை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம்

    ஈரோடு மாவட்டம் முழுவதும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
    ஈரோடு:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.

    குறிப்பாக அ.தி.மு.க. அதிக இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    அதன்படி இன்று மாலை ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள லட்சுமி துரைசாமி மஹாலில் நடைபெறும் பிரச்சாரத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதும் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஓரிடத்தில் நிற்க வைத்து அவர்களை அறிமுகப்படுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×