என் மலர்
ஈரோடு
ஈரோடு கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல் பாளையம் மாட்டுச்சந்தைக்கு வரத்து அதிகமாக இருந்தது. 90 சதவீதம் மாடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு கருங்கல் பாளையத்தில் ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம்.
இந்த சந்தைக்கு கேரளா ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக் கணக்கான வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
கொரோனா தாக்கம் காரணமாக இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக நடந்தது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்து செல்பவர்களை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்து வருகின்றனர்.
இதன் காரணமாக மாட்டு சந்தை வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று நினைத்து நிலையில் மாறாக கடந்த வாரம் கூடிய சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.
இதேபோல் இந்த வாரமும் வெளிமாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். கேரளா, கர்நாடகா, ஆந்திரா, போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்களுக்கு வசதியாக மாட்டுச்சந்தை வளாகத்திலேயே கூட்டுறவு வங்கி சார்பில் நடமாடும் ஏ.டி.எம். மையம் ஏற்படுத்தப் பட்டு இருந்தது.
அதில் வியாபாரிகள் தங்களுக்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டனர்.
இன்று கூடிய சந்தையில் 400 பசுமாடுகள், 200 எருமை மாடுகள், 100 கன்றுகள் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
இன்று 90 சதவீதம் மாடுகள் விற்பனை நடந்தது. சந்தை நிர்வாகத்தின் சார்பாக மாடு வாங்க வருபவர்கள், அதனை விற்பவர்களுக்கு ரசீது கொடுக்கப்படுகிறது. அதனை தேர்தல் பறக்கும் படை அலுவலர்களிடம் காண்பித்து செல்லலாம் என கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இன்று வாக்குசாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி ஈரோடு ஆர்.ஏ.என்.எம். கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தி, புளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள், 42 பேரூராட்சிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஈரோடு மாநகராட்சியில் 443 வாக்குசாவடி மையங்கள், 4 நகராட்சிகளில் 153 வாக்குசாவடி மையங்கள், 42பேரூராட்சிகளில் 655 வாக்குசாவடி மையங்கள் என மொத்தம் 1251 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வாக்கு சாவடியில் பணியாற்ற உள்ள ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி நடைபெற்றது.இந்நிலையில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி இன்று தொடங்கியது.
இதில் மாநகர் பகுதியில் 443 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி ஈரோடு ரங்கம்பாளையத்தில் ஆர்.என்.எம். கல்லூரி மற்றும் அதே பகுதியில் உள்ள கொங்கு மெட்ரிகுலேஷன் பள்ளி என 2 இடங்களில் நடந்தது.
இதேபோல் பவானி நகராட்சியில் தேர்தல் பணிக்கு ஈடுபடும் ஊழியர் களுக்கு விஜயலட்சுமி கல்யாண மண்டபத்திலும், கோபிசெட்டி £ளையத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு வைரவிழா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சத்தியமங்கலத்தில் நகராட்சித் தேர்தலில் ஈடுபடும் ஊழியர்களுக்கான பயிற்சி ஸ்ரீராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி யிலும், புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பஞ்சாயத்து பள்ளியிலும் பயிற்சி தொடங்கியது.
இதேப்போல் 42 பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அந்தந்த பள்ளிகள், கல்லூரிகளில் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ஈரோடு மாநகராட்சியில் ஒரு வார்டுக்கும், பேரூராட்சியில் 20 வார்டுக்கும் போட்டியின்றி கவுன்சிலர் தேர்வு செய்யப்பட்டனர். இதனால், இவர்களுக்கான, 30 ஓட்டுச்சாவடிகள் தேவையற்றதாகிவிட்டது.
தற்போது 1,221 ஓட்டுச் சாவடிகளில் மட்டுமே தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட பயிற்சியில் வாக்காளர் விரலில் மை வைத்தல் உள்ளிட்ட சில பணி செய்வோருக்கு பயிற்சி வழங்கியதால், குறிப்பிட்ட நபர்கள் இப்பயிற்சியில் பங்கேற்கவில்லை.
இதனால் இன்று 14 இடங்களில் நடந்த பயிற்சியில் 4 ஆயிரத்து395 பேருக்கு மட்டும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட பயிற்சி வரும் 18-ந் தேததி வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோலார் அருகே காய்கறி வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்
ஈரோடு:
சோலார் அருகே காய்கறி வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்
ஈரோடு சோலார் பழனிசாமி நகரை சேர்ந்தவர் சுகுமார். காய்கறி கடை நடத்தி வருகிறார். சுகுமார் சோலாரில் ஒரு கிளீனிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பின்னர் கிளீனிக் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டாக்டரை பார்க்க சென்றார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்நிலையில் வெண்டி பாளையம் செல்லும் பிரிவில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை தள்ளி கொண்டு செல்வதாக சுகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சுகுமார் தனது நண்பர்களுடன் அங்கு சென்றபோது வாலிபர் ஒருவர் திருட்டு போன தனது மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்று கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சோலார் அடுத்த புதூர் இந்திரா நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 34) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தாலுகா போலீசார் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோட்டில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் பஸ்களால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் காலை, மாலை நேரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் ஈரோடு பஸ் நிலையத்திற்குள் அதிவேகமாக வரும் பஸ்களால் பயணிகள் அச்சமடைந்து உள்ளனர்.
ஈரோடு பஸ் நிலையம் மாநகராட்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.இங்கு சேலம், நெல்லை, மதுரை, கோவை, சென்னை போன்ற மாவட்டகளுக்கு செல்ல தனித்தனி ரேக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு என 700-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் ஈரோடு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி ரூ.41 கோடி மதிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இதற்காக சக்தி ரோடு பகுதியில் இருந்த 35 கடைகள், பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம், வடக்கு போக்குவரத்து அலுவலகம், மாநகராட்சியின் பயணிகள் தங்கும் விடுதி கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது.
சேலம் ரேகைகள் பழுதடைந்து உள்ளதால் அவை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு தடுப்புகள் வைத்து படைக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, நெல்லை செல்லும் பஸ் ரேக்கு இடித்து அகற்றப்பட்டது.
இன்னும் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. இதனால் குறுகிய இடங்களில் மட்டும் அனைத்து பஸ்களும் வந்து நின்று செல்கின்றன.
ஈரோடு பஸ் நிலையத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் தாறுமாறாக சென்று வருவதால் பயணிகள், பொதுமக்கள் அச்சத்துடனேயே பஸ் நிலையத்திற்குள் சென்று வருகின்றன.
மேட்டூர் ரோடு வழியாக ஈரோடு பஸ் நிலைத்திருக்கும், அகில்மேடு வீதி வழியாக ஈரோடு பஸ் நிலையத்திற்கும் பஸ்கள் தாறுமாறாக உள்ளே வருகின்றன. எப்போது எங்கிருந்து பஸ் உள்ளே வருகிறது என்றே தெரியவில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும் பஸ் நிலையத்திற்குள் சில பஸ்கள் வேகமாக செல்கின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
எனவே ஈரோடு பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும், பஸ் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கு ஒரே வழியையும், பஸ் நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு ஒரே வழியை பயன்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பஸ்கள் அணிவகுத்து நின்றன.
சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் 29 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.
தமிழக-கர்நாடக இடையே சரக்கு போக்குவரத்துக்கு இந்த சாலை முக்கியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் இருமார்க்கத்திலும் வந்து செல்கிறது.
இந்த சாலையில் செல்லும் வாகனங்களால் ரோட்டை கடக்கும் வன விலங்குகள் அடிக்கடி விபத்தில் சிக்கி உயிரிழந்து வந்தது. இதையடுத்து சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஈரோடு கலெக்டர் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டரின் உத்தரவை இன்று முதல் அமல்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரவு நேர வாகன போக்குவரத்து நிறுத்தம் காரணமாக தாளவாடி தாலுகாவில் உள்ள 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் இந்த பகுதியில் உற்பத்தியாகும் விலை பொருட்களை மற்ற இடங்களுக்கு கொண்டு செல்வதில் கால தாமதம் ஏற்படும் என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனவே இந்த உத்தரவை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பண்ணாரி சோதனை சாவடியை இன்று குடும்பத்துடன் முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். மேலும் ஓட்டுனர்கள், கடை வியாபாரிகளும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே ஈரோட்டில் நேற்று மாவட்ட நிர்வாகம் மற்றும் விவசாயிகள் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவை கட்டாயம் அமல்படுத்தியே ஆக வேண்டும்.
அதே நேரம் மலைப்பகுதி மக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று பிரச்சணைக்கு தீர்வு காண விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். ஆனால் போராட்டக் குழுவினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து அவர்கள் திட்டமிட்டபடி பண்ணாரி சோதனை சாவடியில் இன்று மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தனர்.

மேலும் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை முற்றிலும் அகற்ற வேண்டும். மேலும் ஐகோர்ட்டு உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தாளவாடி, ஆசனூர், தலமலை ஆகிய பகுதிகளில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி மண்டிகள், மளிகை கடைகள், டீ கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி வெறிச்சோடியது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பஸ்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்று வந்தனர்.

அதன்படி இன்று காலை முதலே ஏராளமான மலை கிராம மக்கள், விவசாயிகள், வணிகர்கள், பண்ணாரி சோதனை சாவடி பகுதிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் காலை 10 மணி அளவில் அவர்கள் பண்ணாரி சோதனை சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடையை முற்றிலும் அகற்ற வேண்டும். மேலும் ஐகோர்ட்டு உத்தரவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுமக்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தாளவாடி, ஆசனூர், தலமலை ஆகிய பகுதிகளில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறி மண்டிகள், மளிகை கடைகள், டீ கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் அந்த பகுதி வெறிச்சோடியது. மேலும் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் பஸ்களிலும் குறைந்த அளவிலேயே பயணிகள் சென்று வந்தனர்.
இதையும் படியுங்கள்...சென்னையில் 1100 பதட்டமான வாக்குச்சாவடிகளில் நேரடி வீடியோ பதிவு
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 106 இடங்களில் முதல்-அமைச்சரின் பிரசாரத்தை தி.மு.க. வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்கள், பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங் கியுள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட்டாலும் தி.மு.க- அ.தி.மு.க இடையே தான் நேரடி போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி என்ற முழக்கத்தோடு காணொலி காட்சி மூலமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி கடந்த 6-ந் தேதி கோவையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். அதைத் தொடர்ந்து சேலம், கடலூர், நேற்று தூத்துக்குடி மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து இன்று 5-வது நாளாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க- கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட மதசார்பற்ற கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை 5 மணிக்கு பிரசாரம் செய்கிறார்.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்வதை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில் 60 இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பெரியார் நகரில் 80 அடி சாலையில் பிரம்மாண்ட டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல் 4 நகராட்சி, 42 பேரூராட்சி பகுதிகளிலும் பிரமாண்டமான டிஜிட்டல் திரை அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்...600 இடங்களில் இன்று ‘பூஸ்டர்’ தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் நாளை முதல் இரவு நேர போக்குவரத்து தடையை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
தாளவாடி:
தென்னிந்தியாவில் மிகவும் செழிப்புடன் காணப்படும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் 2013-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி தமிழ்நாட்டின் 4-வது புலிகள் காப்பமாக அறிவிக்கப்பட்டது.ஆயிரத்து 455 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட புலிகள் காப்பகத்தின் தலமலை வனப்பகுதி யானைகளின் முக்கிய வழித்தடமாக உள்ளது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மத்தியில் திம்பம், ஆசனூர்-காரப்பள்ளம் வழியாக மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.தமிழ்நாடு-கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வழித்தடமாக இந்த பாதை உள்ளது.
இந்த மலைப்பாதையில் யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, அரிய வகை புள்ளிமான்கள், கழுதைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி தென்படுகின்றன. தண்ணீர், உணவு தேடி வனவிலங்குகள் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன.
அண்மையில் தாளவாடி, திம்பம், ஆசனூரில் சிறுத்தை சாலையைக் கடக்கும் போது வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது. எனவே சத்தியமங்லகம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் வனத்தின் சூழல் தன்மையைத் தொடரவும் தமிழ்நாடு- கர்நாடகாவை இணைக்கும் திம்பம் மலைச்சாலையில் இரவுநேர போக்குவரத்தைத் தடை செய்யும் வகையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ந் தேதி ஈரோடு மாவட்ட கலெக்டர் அறிவித்த உத்தரவை அமல்படுத்துமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக மக்கள் கருத்துகளைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக் கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் 2019-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஈரோடு மாவட்ட கலெக்டர் உத்தரவை நாளை 10-ந் தேதி அமல்படுத்த வேண்டும் என சென்னை தலைமை உயர் நீதிபதி அடங்கிய மற்றொரு அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஒரே வழக்கில் இரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு-கர்நாடகா இடையே உள்ள திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்ததற்கு அரசியல் கட்சிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் மலைவாழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தாளவாடி கிராம மக்கள் கூறியதாவது, ‘‘வனவிலங்கு பாதுகாப்பு என்ற ஒரு அம்சத்தை மட்டும் வைத்து இதைப் பார்க்கக் கூடாது. இரு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இதைப்பார்க்க வேண்டும். பொதுவாக காய்கறிகள் மாலை 6 மணிக்கு மேல்தான் தாளவாடி பகுதியில் இருந்து மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இரவுநேர போக்குவரத்தைத் தடுத்தால், பகல் போக்குவரத்தும் தானாகவே முடங்கும். இதுதான் கடந்த காலத்திலும் நடந்தது.
எனவே வனவிலங்கு பாதுகாப்பை வேறு நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலம் உறுதி செய்யலாம். அதாவது வனச்சாலையில் வனவிலங்குகள் இறப்பதை தடுக்க சாலையின் இருபுறமும் 20 அடி அகலத்திற்கு முட்புதர்களை வெட்டினால் வனவிலங்குகள் சாலையை கடக்கும் பொழுது வாகனங்களுக்கு நன்றாக தெரியும்.
அப்போது வனவிலங்குகள் விபத்து தவிர்க்கப்படும். மேலும் வனவிலங்குகள் சில இடங்களில் மட்டும் சாலையை கடக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சீனாவில் உள்ளது போல் மேம்பாலங்கள் அமைத்து வாகன விபத்தை தவிர்க்க வேண்டும். மேலும் சாலையின் இருபுறமும் அகழிகள் அமைத்து வனத்துறை உரிய நடவடிக்கை எடுத்தால் வனவிலங்கு உயிரிழப்புகள் காப்பாற்றப்படும்.
நாடும் வளர வேண்டும் காடும் வளர வேண்டும் வனவிலங்குகளும் வளர வேண்டும் என்பதுதான் மலைமக்களின் கோரிக்கை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் சத்தியமங்கலம்- திம்பம் மலைப்பாதையில் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவுநேர போக்குவரத்து தடை அமலுக்கு வருகிறது. இதை கண்டித்து தாளவாடி மலை கிராம மக்கள் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மேலும் பண்ணாரி சோதனை சாவடி அருகே குடும்பத்துடன் திரண்டு வந்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் வாகன ஓட்டுனர்களும் நாளை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு ஜவுளி சந்தையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகொடி கலர் பொரித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
ஈரோடு:
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் வீடு, வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் வேட்பாளர்கள் பொதுமக்களை கவரும் வகையில் ஈரோடு ஜவுளி சந்தையில் அரசியல் கட்சியினர் வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இதேபோல் துண்டு, மப்ளர், தொப்பி விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.
ஈரோடு ஜவுளி சந்தையில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகொடி கலர் பொரித்த வேட்டி, சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஒரு வாரமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சேலையை பொறுத்தவரை ரூ.150-க்கும் வேட்டி ரூ.120 முதல் ரூ.150 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துண்டு ரூ.25 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மப்ளர் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் கடந்த 2 வாரமாக வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்து வருகிறது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி அரசியல் கட்சியினர், தொண்டர்களை கவரும் வகையில் வேட்டி, சேலைகள் விற்பனை கடந்த ஒரு வாரமாக மும்முரமாக நடந்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.10 லட்சத்திற்கு அரசியல் கட்சியினர் வேட்டி,சேலைகள், துண்டு, மப்ளர் போன்றவை விற்பனையாகி உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேளாண் பட்டதாரிகள் அரசு மானியம் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
வேளாண் பட்டதாரிகள் அரசு மானியம் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை&உழவர் நலத்துறை மூலம் நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் இருந்து ‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் இந்த திட்டத்தை செயல்படுத்த மாவட்டத்தில் 60 கிராம பஞ்சாயத்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளை சார்ந்த வேளாண் பட்டதாரிகளை தொழில்முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வீதம் 8 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணியக்கப் பட்டுள்ளது.
திட்டத்தில் பயன் பெற விரும்பும் பயனாளிகள் குறைந்தபட்சம் இளநிலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்து இருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் பணியாற்று பவராக இருக்கக் கூடாது. கணிணி மற்றும் இதர வேளாண் செயலிகளில் பணியாற்றத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஒரு பட்டதாரி மட்டுமே திட்டத்தில் பயன்பெற முடியும். முன்வைக்கும் திட்டத்தின் உரிமையானது ஒற்றை உரிமையாளருடையதாக இருக்க வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்களுக்கான செலவு முன் வைக்கும் திட்ட மதிப்பில் சேர்க்க இலாது. 21 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் கீழ் அக்ரி கிளினிக், இயற்கை உரம் தயாரித்தல், மரக்கன்று உற்பத்தி செய்தல், நாற்றங்கால் பண்ணை அமைத்தல், பசுமை குடில் அமைத்தல், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை நிலையம் அமைத்தல், வேளாண் மருந்தகம் தொடங்குதல், நுண்ணீர் பாசன சேவை மையம் தொடங்குதல், வேளாண், தோட்டக்கலை விளை பொருட்களை மதிப்புக் கூட்டுதல், சந்தைபடுத்துதல் போன்ற வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க நிதியுதவி அளிக்கப்பட உள்ளது.
தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், ஆதார் அட்டை, ரேசன் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து விரிவான திட்ட அறிக்கையினை வரும் 18-ந் தேதிக்குள் திண்டல் வித்யா நகரிலுள்ள ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.
எனவே, தொழில் முனைவோராக விருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் இத்திட் டத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு பட்டு நூல் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
ஈரோடு:
ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைதறிகள் உள்ளன. இந்த பகுதிகளில் அதிகளவு பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டு சேலைகள் தமிழகம், கர்நாடகா உள்பட பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஈரோடு, சென்னி மலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான பேர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள்.
மேலும் பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களை கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்து வருகிறார்கள். இதன் மூலம் பட்டு சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த 2021-ம் ஆண்டு பட்டு நூல் ரூ.3,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை விலை உயர்ந்து விற்பனையாகிறது.
இது குறித்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை தயார் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு முதல் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதே போல் பட்டு நூல் விலையும் பல மடங்கு உயர்ந்து காணப்படுகிறது.
ஆனால் பட்டு சேலைகள் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. இதனால் பட்டு சேலைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் நாளை (வியாழக்கிழமை) முதல் வரும் 20-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு பட்டு நூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவு வீசும் தொழிலாளர், நூல் சாயமிடும் தொழிலாளர்கள், ஜக்காடு அட்டை அடிக்கும் தொழிலாளர்கள் என பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

வனத்துறையினர் இருகாலூர், எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை மூன்று ஆடுகளை அடித்துக் கொன்றது. தொடர்ந்து மறுநாள் செட்டியம்பதி என்ற பகுதியில் 2 ஆடுகளை அடித்துக் கொன்றது.
இந்நிலையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக சிறுத்தையை தேடும் பணி நடந்தது.
வனத்துறையினர் இருகாலூர், எலத்தூர், செட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விடிய விடிய சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் தெர்மல் கேமரா மூலம் சிறுத்தையை தேடினர். தெர்மல் கேமராவில் 300 மீட்டர் தொலைவிற்கு அசையும் விலங்கு மற்றும் பொருட்களை காண முடியும்.
இந்நிலையில் இரவு முழுவதும் தேடும் பணி நடைபெற்றது. அப்போது காட்டு விலங்குகள் எதுவும் தென்படவில்லை. எனவே சிறுத்தை வேறு இடத்துக்கு சென்று இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து டி.என். பாளையம் வனசரகர் கணேஷ்பாண்டியன் கூறும்போது, சிறுத்தை வனப்பகுதியை நோக்கி சென்றிருக்கலாம் என தெரிகிறது. மேலும் சில நாட்களுக்கு சிறுத்தையை வனகுழுவினர் தேட உள்ளனர்.
பொதுமக்கள் வனத்துறையினருக்கு சரியான தகவல்களை தரவேண்டும். இரவு நேரங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் அருகில் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தவறான தகவல்களை கொடுத்து பீதியை ஏற்படுத்துகின்றனர் என்றார்.
நம்பியூர் பகுதியில் 6 நாட்களாக தேடியும் சிறுத்தை தென்படவில்லை. எனவே சிறுத்தை வனப்பகுதிக்கு சென்று இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கவுந்தப்பாடி:
கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
கவுந்தப்பாடி அருகே உள்ள சலங்கபாளையம் பேரூராட்சி 9-வது வார்டுக் குட்பட்ட கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.
அவர்களுக்கு 1988-ம் ஆண்டு பட்டா வழங்கப் பட்டது. அப்போது சுமார் 8 சென்ட் நிலம் அம்பேத்கர் வாசக சாலைக்காக ஒதுக் கப்பட்டதாக கூறப்படுகிறது. வாசக சாலைக்கு வழங்கப் பட்ட இடத்தை சிலர் ஆகிரமித்து பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கிருஷ்ணாபுரம் காலனி பொதுமக்கள் ஏற் கனவே பல முறை போராட் டங்கள் நடத்தி வந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப் படவில்லை என பொதுமக்கள் கூறினர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அம்பேத்கர் வாசக சாலைக்கு இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேரூராட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக கடந்த 1-ந் தேதி கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார், செயல் அலுவலரிடம் மக்கள் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கோரிக்கைகள் வலியுறுத்தி கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் கடந்த சில தினங் களுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. மேலும் தேர்தலை புறக்கணிப்போம் என இந்தப் பகுதியில் விளம்பர பதாகை வைக்கப் பட்டது.
தகவல் அறிந்டது சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறையினர் விளம்பர பதாகையை அகற்றினர்.
இந்த நிலையில் மீண்டும் இப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் என அந்த பகுதியில் விளம்பர பலகை எழுதி வைத்துள்ளார்கள்.
இது குறித்து மக்கள் கூறும் போது, இதுவரை எங்களிடம் அரசு அதிகாரிகள் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. எங்கள் கோரிக்கை எதையும் ஏற்க வில்லை.
எனவே வருகிற பேரூராட்சி தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் அனைவரும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்றனர்.