என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    காய்கறி வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

    சோலார் அருகே காய்கறி வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்
    ஈரோடு:

    சோலார் அருகே காய்கறி வியாபாரியிடம் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்

    ஈரோடு சோலார் பழனிசாமி நகரை சேர்ந்தவர் சுகுமார். காய்கறி கடை நடத்தி வருகிறார். சுகுமார் சோலாரில் ஒரு கிளீனிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். 

    பின்னர் கிளீனிக் முன்பு  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டாக்டரை பார்க்க சென்றார்.

    சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

    இந்நிலையில் வெண்டி பாளையம் செல்லும் பிரிவில் வாலிபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை தள்ளி கொண்டு செல்வதாக சுகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சுகுமார் தனது நண்பர்களுடன் அங்கு சென்றபோது வாலிபர் ஒருவர் திருட்டு போன தனது மோட்டார் சைக்கிளை  தள்ளிக் கொண்டு சென்று கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை பிடித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சோலார் அடுத்த புதூர் இந்திரா நகரை சேர்ந்த ஏழுமலை (வயது 34) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து தாலுகா போலீசார் ஏழுமலை மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×