என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    600 இடங்களில் இன்று ‘பூஸ்டர்’ தடுப்பூசி- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 90 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    தமிழகத்தில் கொரோனா எந்த அளவுக்கு வேகமாக ஏறியதோ அதே அளவுக்கு வேகமாக இறங்கி வருகிறது. நேற்றைய பாதிப்பு 3,500 என்ற அளவுக்கு இறங்கி இருப்பது ஆறுதலான விஷயம்.

    மக்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவுக்கு அதிகரித்து உள்ளது என்பது பற்றி ஒரு சர்வே நடத்தப்பட்டது. அதில் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு 90 சதவீதம் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது.

    தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு 69 சதவீதம் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது. இதில் இருந்தே தடுப்பூசியின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.

    கோப்புப்படம்


    முதல் தவணை தடுப்பூசியை போட்டவர்கள் எண்ணிக்கை 90 சதவீதத்தை தாண்டி விட்டது. 2-வது டோஸ் போட்டவர்கள் எண்ணிக்கை 70 சதவீதத்தை தாண்டி உள்ளது.

    பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இன்றும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. ஏற்கனவே 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆர்வத்துடன் வந்து முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×