என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் அதிகாரிகளுடன் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆலோசனை நடத்தினார்
பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆய்வு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,
பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ஆய்வு
ஈரோடு:
நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பதட்டமான வாக்குசாவடி மையங்களில் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் ஆய்வு செய்து போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்,
ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பவானி நகராட்சியில் சொக்கராயன் காடு, குருநாதன் வீதி, காமராஜ் நகர், பழனிபுரம், பசுவேஸ்வரர் வீதி, பழனி ஆண்டவர் கோவில் வீதி, பழைய பஸ்நிலையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள 7 வாக்குச்சாவடிகளும், பெருந்துறை பேரூராட்சி வாக்குச்சாவடிகளும் பதட்டம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வாக்குச்சாவடிகளில் மாவட்ட காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், பவானி நகராட்சி, பெருந்துறை பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட போலீஸ் அதிகாரிகளுடன் கலந்தாய்வுகூட்டம் நடந்தது. கூட்டத்தில் இப்பகுதிகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் பணியாற்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன், தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. அண்ணாதுரை உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story






