என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் 80 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட் டாலும் லேசான அறிகுறியிலேயே அவர்கள் குணம் அடைந்து விடுகிறார்கள்.
இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர் களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில் முதற்கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப் பட்டது.
அதன்படி கடந்த மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி அடுத்து 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதன் காரணமாக தடுப்பூசி போடும் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுகாதாரத் துறையினர் மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட நடவடிக்கை எடுத்தது.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கி யதால் இந்த வாரம் முதல் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 79,982 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story






