என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்த போது எடுத்தப்படம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இந்த மனுக்களை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கா ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
ஈரோடு:
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடந்தது. இந்த மனுக்களை ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளர் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கா ஆகியோர் பரிசீலனை செய்தனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு அதற் கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலக மைய கட்டிடம், வீரப்பன்சத்திரம் பழைய அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேபோல் 4 நகராட்சி அலுவலகம், 42 பேரூராட்சி அலுவலகங்களில் வேட் பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். முதல் 3 நாட்கள் வேட்பு மனு தாக்கல் களை கட்டவில்லை. ஆனால் கடைசி 2 நாட்களில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
நேற்று முன்தினம் வரை மாநகராட்சியில் 126 பேர், நகராட்சியில், 246 பேர், பேரூராட்சிகளில் 1,161 பேர் மனுக்கள் தாக்கல் செய்து இருந்தனர். வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று மாநகராட்சியில் 364 மனுக்கள், நகராட்சியில் 271 மனுக்கள், பேரூராட்சியில், 1,133 மனுக்கள் என ஒரே நாளில் 1,768 வேட்பு மனு தாக்கலானது.
இதன்படி மாநகராட்சி யில் 490 பேர், 4 நகராட்சிகளில் 517 பேர், 42 பேரூராட்சியில் 2,294 பேர் என 3,301 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து இன்று காலை 10 மணி முதல் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட அலுவலகங்களில் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னி லையில் பரிசீலனை செய் யப்பட்டது.
இதில் வேட்பு மனுக்கள் முறையாக தாக்கல் செய்யப் பட்டுள்ளதா? விண்ணப் பங்களை வேட்பாளர்கள் முறையாக பூர்த்தி செய்து உள்ளார்களா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வரும் 7-ந் தேதி (திங்கட் கிழமை) வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். அன்று மாலை 5 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளிடப் படுகிறது. வரும் 19-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 22-ந் தேதி பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
Next Story






