என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திமுக - அதிமுக
    X
    திமுக - அதிமுக

    இன்று கடைசி நாள்: தி.மு.க- அ.தி.மு.க.வினர் போட்டி போட்டு வேட்புமனு தாக்கல்

    இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 1 மாநகராட்சி, 4 நகராட்சி, 42 பேரூராட்சிகளில் கவுன்சிலர்களுக்கான தேர்தல் வரும் 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

    ஈரோடு மாநகர் பகுதியில் 4 மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், வீரப்பன்சத்திரம் அலுவலகம் என 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் 4 நகராட்சியில் அந்தந்த அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. 42 பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் 447 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நேற்று மாநகராட்சியில் 100 பேர், 4 நகராட்சியில் 164 பேர், 42 பேரூராட்சியில் 822 பேர் என மொத்தம் ஒரே நாளில் 1,086 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் இதுவரை 126, 4 நகராட்சிகளில் 246, பேரூராட்சிகளில் 1,161 பேர் என 1,533 பேர் இது வரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

    இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும். இதனால் இன்று தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக்கட்சியினர் போட்டி போட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேப்போல் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

    இதனால் இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இடங்களில் திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. வேட்பாளர்கள் உடன் 2 பேர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×