என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்.
    X
    ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்.

    108 ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவம்

    சத்தியமங்கலத்தில் ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தால் நடுவழியில் நிறுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலத்தில் ஆம்புலன்சில் வடமாநில பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்தால்  நடுவழியில் நிறுத்தப்பட்டு பிரசவம் பார்க்கப்பட்டது. 

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை சிக்கரசம்பாளையம் என்ற பகுதியில் தனியார் நூல் மில் உள்ளது. 

    இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த கமூருதின் என்பவர் தனது மனைவி நசிமாபேகம் மற்றும் ஒரு குழந்தையுடன் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நசிமாபேகம் 2-வதாக கர்ப்பம் அடைந்தார். நள்ளிரவு 1 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் உள்ள 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

    உடனடியாக அங்கு ஆம்புலன்சு விரைந்து சென்று நசிமா பேகத்தை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டனர். 

    அப்போது பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்சு நடுவழியில் நிறுத்தப்பட்டு மருத்துவ உதவியாளர் பரத் என்பவர் பிரசவம் பார்த்தார். 

    அப்போது நசிமா பேகத்துக்கு ஆண்குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், குழந்தையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×