என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதை படத்தில் காணலாம்.
    X
    வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பதை படத்தில் காணலாம்.

    வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது.

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் மீன்கள் செத்து மிதந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஈரோடு வைராபாளையம் காவிரி ஆற்றில் இன்று நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மீன்கள் இறந்து கிடந்ததை  பார்க்க திரண்டனர்.

    தற்போது காவிரி ஆற்றில் குறைவான அளவே தண்ணீர் செல்வதால் கரையோர பகுதியில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் ஏராளமான சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. அதேபோல் சாயத் தொழிற்சாலை கழிவுகளும் ஆங்காங்கே கலப்பதால் மாசு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர். 

    இந்நிலையில் இன்று மீன்கள்  செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    Next Story
    ×