என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    சாக்கடையில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலி

    சாக்கடையில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலியானார்.
    ஈரோடு:

    சாக்கடையில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலியானார்.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த மகாத்மாபுரம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 60).  புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மகன் உள்ளார்.
     
    இந்நிலையில் அசோகன் புரோட்டா மாஸ்டர் வேலையை விட்டுவிட்டு பாட்டில்களை பொறுக்கி எடுக்கும் வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டிற்கு வாரத்துக்கு ஒரு முறை தான் வந்து செல்வார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கவுந்தப்பாடி &பவானி ரோடு, காளியம்மன் கோவில் அருகே உள்ள சாக்கடையில் 60 வயது முதியவர் இறந்து கிடப்பதாக அசோகன் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

    அவரது குடும்பத்தார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இறந்து கிடந்தது அசோகன் தான் என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த  கவுந்தபாடி போலீசார் அசோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பாட்டில்களை எடுத்துக் கொண்டு வந்த அசோகன் அங்குள்ள சாக்கடையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து இறந்தது தெரிந்தது.

    இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×