என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை
பெருந்துறை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறை அருகே கட்டிட ஒப்பந்ததாரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த தோப்புபாளையம் ஆர்.எஸ். ரோடு பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 49). இவரது மனைவி ஜூலி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சசிகுமார் கட்டிட ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்தார்.
தொழிலில் ரீதியாக பண வரவு செலவு உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்ததால் கடந்த சில நாட்களாக சசிகுமார் மனவேதனையுடன் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று சசிகுமார் வீட்டின் பின்னால் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சசிகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






