என் மலர்tooltip icon

    ஈரோடு

    குண்டேரிப்பள்ளம் அணை சுற்றுலாதளத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    ஈரோடு:

    குண்டேரிப்பள்ளம் அணை சுற்றுலாதளத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் வட்டம், டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் ரூ.25.22 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளுக்கான ஓய்வு அறைகள், ரூ.26.64 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை, அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல், ரூ.78.31 லட்சம் மதிப்பீட்டில் வாகனம் நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு அரண் அமைத்தல் மற்றும் ரூ.56.23 லட்சம் மதிப்பீட்டில் அணுகு சாலை அமைத்தல் போன்ற பணிகள் முடிவுற்று பொது மக்கள்  பயன்பாட்டிற்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. 

    இப்பணிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் குண்டேரிப்பள்ளம் அணையில் பூங்கா அமைத்து பராமரித்திடவும்  அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் குண்டேரிப் பள்ளம் அணையினையும் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு அணையின் நீர் கொள்ள ளவு, நீர் இருப்பு மற்றும் நீர் வெளியேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    முன்னதாக கோபி செட்டிபாளையம் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் கையுந்துபந்து, கபாடி, டேபிள் டென்னிஸ், சதுரங்கம், கேரம் மற்றும் யோகா போன்ற விளை யாட்டுகள் விளையாடு வதற்காக செயல்படும் கையுந்து பந்து உள் விளையாட்டு அரங்கம் மற்றும் கபடி ஆடுகளத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

    தொடர்ந்து டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம் பாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல் மூட்டைகளை பாதுகாப்பான முறையில் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு அலு வலர்களுக்கு அறிவுறுத் தினார்.

    இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவிப் பொறியாளர் கல்பனா, கோபிசெட்டிபாளையம் தாசில்தார் தியாகராஜன் உள்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழி லாளர்கள் சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது, அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப் புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். சொந்தமாக வீட்டுமனை வைத்திருக்க வேண்டும். 

    குடும்ப உறுப்பினர் களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது.  வேறு எந்த ஒன்றிய, மாநில அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், வாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார், குடும்ப உறுப்பினர்கள் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், போட்டோ, வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஈரோட்டில் உள்ள ஒருங் கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட டாக்டர்.ஆனந்தன் அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டராக ஆனந்தன் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் ஈரோட்டை சேர்ந்த திருமணமான 30 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியர் ஒருவர் தற்காலிகமாக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி அந்த பெண் ஊழியர் பணியில் இருந்தபோது அங்கு வந்த டாக்டர்.ஆனந்தன் உங்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்த பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் ஊழியர் இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார்.

    பின்னர் அந்த பெண் ஊழியர் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் டாக்டர் ஆனந்தன் மீது பெண்களை மானபங்கபடுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கடந்த 30-ந் தேதி கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர்.ஆனந்தன் மீது போடப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை கிடைத்தது. அதைத் தொடர்ந்து 6 பேர் கொண்ட விசாகா குழுவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ஒப்படைத்து உள்ளோம்.

    விசாகா குழு அறிக்கை கிடைத்த பிறகு அந்த அறிக்கை கலெக்டரிடமும், துறை இயக்குனரிடமும் சமர்ப்பித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட டாக்டர்.ஆனந்தன் அந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

    ஈரோடு மாவட்ட மருத்துவபணிகள் இணை இயக்குனர் நடவடிக்கை எடுத்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கோபி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் டாக்டர்.கலாபிரியா தற்காலிகமாக தலைமை டாக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். மறு ஆணை வரும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    பெருந்துறை அருகே ஆசை வார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து பெற்றோர் மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து மாணவியின் தந்தை காஞ்சிக்கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

    இந்த நிலையில் போலீசார் பெத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அதில் மாயமான மாணவி மற்றும் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் பெயர் கார்த்திக், கோபால கிருஷ்ணன் என்பதும் கார்த்திக் அந்த மாணவியை கடத்தியதும் இதற்கு உடந்தையாக அவரது நண்பர் கோபால கிருஷ்ணன் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

    இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு புத்தககடைக்கு சென்று வரும் போது அந்த மாணவிக்கும் கார்த்திக்குக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் அடிக்கடி போனில் பேசி பழகி வந்தனர்.

    இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் கார்த்திக் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கொளப்பலூர் குதிரைகள் பாளையம் மாரியம்மன் கோவிலில் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இது குறித்து கார்த்திக் மற்றும் கோபாலகிருஷ்ணன் மீது மாணவியை கடத்தியது, கடத்தலுக்கு உதவி செய்தல், திருமணம் செய்தல், கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்தல், போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி சபீனா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி சாலையை கடந்து சென்று வருகிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை, புலி, மான், சிறுத்தை, காட்டெருமை, குரங்குகள், கரடி உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    இந்த வனப்பகுதி வழியாக கர்நாடக மாநிலத்துக்கும் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கும் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

    இந்த வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி சாலையை கடந்து சென்று வருகிறது. அப்போது அந்த வழியாக வரும் வாகனங்களை வன விலங்குகள் விரட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தாளவாடி வனப்பகுதியில் உள்ள விலங்குகள் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து தண்ணீர் குடிக்க செல்வது வாடிக்கையாகி விட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு ஒரு கர்நாடக அரசு பஸ் ஆசனூர் வழியாக நேற்று மாலை சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆசனூர் வனச் சாலையில் ஒற்றை யானை நின்று கொண்டு இருந்தது.

    அந்த ஒற்றை யானை திடீரென கர்நாடக பஸ்சை துரத்தியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ் டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ்சை வேகமாக ஓட்டினார். இதனால் பஸ்சில் வந்த பயணிகள் அச்சம் அடைந்து அலறினர். தொடர்ந்து பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டி யானையை கடந்து சென்றார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும் போது, யானைகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ரோட்டுக்கு வருகிறது. எனவே வனப் பகுதிக்குள் தண்ணீர் கிடைக்க வனத்துறையினர் ஏற்பாடு செய்ய வேண்டும். இதனால் யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதை தடுக்கலாம் என கூறினர்.

    உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்கள், பான் கார்டு விவரங்களை தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த பெண் அந்த ஆன்லைன் லிங்கில் சென்று வங்கி குறித்த விவரங்களை தெரிவித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளையில் கணக்கு வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் ஒரு லிங்க் அனுப்பப்பட்டிருந்தது.

    அதில் உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்கள், பான் கார்டு விவரங்களை தெரிவிக்கவும் என கூறப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய அந்த பெண் அந்த ஆன்லைன் லிங்கில் சென்று வங்கி குறித்த விவரங்களை தெரிவித்தார்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர் செல்போன் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி. நம்பர் வந்துள்ளது. அந்த எண்ணை அவர் அழுத்தினார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 920 எடுக்கப்பட்டுள்ளது என வந்திருந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் வங்கிக் கிளைக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது தான் அவரை மோசடி கும்பல் ஏமாற்றியது தெரியவந்தது.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நாளை தொடங்குகிறது.
    அந்தியூர்

    2 ஆண்டுகளுக்கு பிறகு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா நாளை தொடங்குகிறது.

    அந்தியூர் பஸ் நிலையம் அருகே அமைந்துள்ள புகழ் பெற்ற பழமையான பத்ர காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக குண்டம்- தேர்திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் இந்த ஆண்டு அந்தியூர் பத்ரகாளி யம்மன் கோவில் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
    இதையொட்டி கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மகிஷாசுர வர்தனம் எனும் எருமைக் கிடாய் வெட்டும் நிகழ்வு நடைபெற்றது.
    இதனையடுத்து கிராம சாந்தி நிகழ்ச்சி மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவை யொட்டி தினமும் இரவு அம்மன் பூத வாகனம் ,நரி வாகனம், சிம்ம வாகனம் அம்ச வாகனம், யானை வாகனம் சட்ட தேர், புஷ்ப பல்லாக்கு வாகனங்களில்  சாமி வீதி உலா நடந்து வரு கிறது.
    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்கும் விழா நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. 
    தற்போது கடும் வெயில் வாட்டி வருவதால் பக்தர்கள் வசதிக்காக தற்போது அதி காலை 5 மணிக்கு குண்டம் இறங்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
    இதையொட்டி இன்று இரவு குண்டம் வளர்க்கப் படுகிறது. பக்தர்கள் பலர் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் விறகுகளை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள்.
    முன்னதாக கோவில் அலுவலகத்தில் ஏ.ஜி.வெங் கடாசலம் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் துணை போலீஸ் சூப்பரண்டு கார்த்திகேயன், கோவில் செயல் அலுவலர் சரவணன் மற்றும் மிராசு தாரர்கள், முதன்மைதாரர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    இதில் பொதுமக்கள்ட பாதுகாப்பு வந்து செல்ல வேண்டும். போலீசார்  தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். திருட்டு சம்பவங்கள் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மிராசுதாரர்கள், முதன்மை தாரர்கள் அதி காலையிலேயே கோவிலுக்கு வரவேண்டும் என ஆலோசிக் கப்பட்டது. 
    வரும் 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கு கிறது. 11-ந் தேதி வரை அம்மன் தேர் முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப் பட்டு தேர்நிலைய அடை கிறது. 12-ந் தேதி பாரி வேட்டையும் , 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த இந்து முன்னணியினர்.
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85.70 அடியாக உயர்ந்துள்ளது.
    ஈரோடு:


    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 85.70 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

    கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத் துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.70 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1,417 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காலிங் கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

    இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி பாசனத்திற்கு 2380 கனஅடியும் என மொத்தம் 3080 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள்  கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஈரோடு கூரப் பாளையத்தில் கீழ்பவானி பாசன சபைகளின் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    கூட்டத்திற்கு கிளை பாசன சபை தலைவர் பெரிய வேலப்பன் தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் நல்லசாமி, செயலாளர் செங்கோட் டையன், பாசன சபை பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால் 124 மைல் தூரமுள்ள மண் கரையை முழுவதும் தூர்வாரி நன்கு பலப்படுத்த வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பிரதான கால்வாயில் கான் கிரீட் போடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வாய்க்கால் கரையில் பசுமையான சுமார் 5 லட்சம் மரங்களை வெட்டு வதை தடுக்க வேண்டும். 

    ஆயிரக்கணக்கான கிராமங்களில் குடிநீர் ஆதாரத்தையும், கசிவுநீர் குட்டைகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
    கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் துளசி மணி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவர் நிலைதடுமாறி தவறிவிழுந்து பலியானார்.
    பெருந்துறை:

    மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த டிரைவர் நிலைதடுமாறி தவறிவிழுந்து பலியானார்.

    பெருந்துறையில் அடுத்துள்ள கருங்கண்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 43). டிரைவர். சம்பவத்தன்று பெருந்துறையில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது மோட்டர்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

     கோவை மெயின் ரோடு மடத்துபாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த அடிபட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
    ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார்.
    ஈரோடு:

    ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பெண் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக பலியானார். 

    ஈரோடு அருகே உள்ள கஸ்பாபேட்டை பொன் நகரை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி சூரியகாந்தி (வயது 58). சூரியகாந்தி ஒரு தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். 

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக இவர் கஸ்பாபேட்டை&பூந்துறை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

     அப்போது ரோட்டை கடப்பதற்காக ரோட்டின் ஓரத்தில் சூரியகாந்தி நின்ற கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சூரியகாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சூரியகாந்தி பரிதாபமாக இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

     இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோட்டில் கறி சோறு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோட்டில் கறி சோறு சாப்பிட்ட பெண் திடீரென இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு அசோகபுரி கோடைபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 50). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். 

    சம்பவத்தன்று இரவு சாமிநாதனும், கோவிந்த அம்மாளும் வீட்டில் கறி சாப்பாடு சாப்பிட் டுள்ளனர். சிறிது நேரத்தில் கோவிந்தம்மாள் வாந்தி எடுத்து மயக்கமடைந்து விழுந்து உள்ளார். 

    உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கோவிந் தம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×