என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்

    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற சொந்தமாக வீடு இல்லாத கட்டுமான தொழி லாளர்கள் சொந்தமாக வீட்டு மனை வைத்திருந்தால் அவர்களாகவே வீடு கட்டிக்கொள்ள நிதி உதவி வழங்குவது, அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள குடியிருப் புகளில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

    நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டும் திட்டத்தில் ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற நலவாரியத்தில் பதிவு பெற்று 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து புதுப்பித்து இருக்க வேண்டும். சொந்தமாக வீட்டுமனை வைத்திருக்க வேண்டும். 

    குடும்ப உறுப்பினர் களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க கூடாது.  வேறு எந்த ஒன்றிய, மாநில அரசின் இலவச வீட்டு வசதி திட்டத்தில் பயன்பெற்றிருக்க கூடாது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.

    இத்திட்டத்தில் பயன்பெற விருப்பம் உள்ள தகுதி வாய்ந்த பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள், வாரிய உறுப்பினர் பதிவு அட்டை, ஆதார், குடும்ப உறுப்பினர்கள் ஆதார், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், போட்டோ, வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் tnuwwb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

    மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு ஈரோட்டில் உள்ள ஒருங் கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிடத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×