என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டத்தை கைவிட வேண்டும் விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம்
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு:
கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு கூரப் பாளையத்தில் கீழ்பவானி பாசன சபைகளின் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிளை பாசன சபை தலைவர் பெரிய வேலப்பன் தலைமை தாங்கினார். கீழ்பவானி பாசன சபை தலைவர் நல்லசாமி, செயலாளர் செங்கோட் டையன், பாசன சபை பாதுகாப்பு இயக்க அமைப்பாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கீழ்பவானி வாய்க்கால் 124 மைல் தூரமுள்ள மண் கரையை முழுவதும் தூர்வாரி நன்கு பலப்படுத்த வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பிரதான கால்வாயில் கான் கிரீட் போடும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். வாய்க்கால் கரையில் பசுமையான சுமார் 5 லட்சம் மரங்களை வெட்டு வதை தடுக்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான கிராமங்களில் குடிநீர் ஆதாரத்தையும், கசிவுநீர் குட்டைகளையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத்தலைவர் துளசி மணி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






