என் மலர்
ஈரோடு
- கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
- இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சென்னிமலை:-
சென்னிமலை பேரூ ராட்சியில் 15 வார்டுகள் உள்ளது. இதில் பஸ் நிலையம், சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் இருந்து மழைக் காலங்களில் வெளியேறும் மழைநீர் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரில் உள்ள வடிகால் கால்வாய் வழியாக அறச்சலூர் ரோட்டை சென்றடையும்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை நீர் முழுமை யாக வெளி யேறாமல் ஆங்காங்கே தேங்கி நிற்ப தாக அய்யப்பா நகர் பொது மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் அய்யப்பா நகருக்கு செல்லும் மழை நீரை பாதி யாக தடுக்கும் வகையில் சென்னிமலை பேரூ ராட்சியில் ரூ.1 கோடி மதிப்பில் 11-வது வார்டுக்கு உட்பட்ட சோழன் வீதி வழியாக மழை நீரை கொண்டு செல்லும் வகையில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்க ப்பட்டு இதற்காக பஸ் நிலையம் அருகே தார் ரோட்டின் குறுக்கே பால மும் கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால் இந்த வழியே மழை நீர் வடிகாலை அமைத்தால் தண்ணீர் தேங்கும் என சோழன் வீதி பொதுமக்கள் கால்வாய் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் 6-வது வார்டுக்கு உட்பட்ட அய்யப்பா நகரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு வரும் மழை நீரை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
இதனால் கால்வாய் அமைக்கும் பணி பாதி யிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் 2 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களிடம் சுமூக தீர்வு காண்பதற்கு சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பெருந்துறை தாசில்தார் சிவசங்கர் தலைமை தாங்கி னார். சென்னிமலை பேரூ ராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், செயல் அலுவலர் ஆயிஷா ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் 6-வது மற்றும் 11-வது வார்டுகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர்.
அந்த பகுதிகளை சேர்ந்த இரு தரப்பு மக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் இரு தரப்பு மக்களின் கோரிக்கைகள் குறித்து ஈரோடு கலெக்டரி டன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் கொள்ளளவு 105 அடி ஆகும். அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப் பகுதி உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்த–தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100.95 அடியாக உள்ளது.அணைக்கு வினாடிக்கு 594 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பாசனத்திற்காக கீழ் பவானி வாய்க்காலில் 2,300 கன அடி, காலிங்கராயன் பாசனத்திற்கு 300 கன அடி என மொத்தம் 2,600 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
- சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது.
- இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாழ்குளி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தகுமார். இவரது மனைவி சத்தியசுந்தரி (வயது 34). விவசாயி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சத்தியசுந்தரி உடல் நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என கூறப்படுகிறது. இ தனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவ த்தன்று மன வருத்தத்தில் இருந்து வந்த சத்தியசுந்தரி வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து விட்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளை யத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக் காக கோபிசெட்டிபாளை யம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்தியசுந்தரி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (33).
இவர் கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைகாரன் கோவிலில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் துணை மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகனும், 5 மாத ஆண் குழந்தையும் உள்ளது.
கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 4 மாதமாக கிருஷ்ணமூர்த்தி சரிவர வேலைக்கு செல்லாமல் மது அருந்தி விட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். மேலும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை கிருஷ்ணமூர்த்தி அவரது வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தி அதில் ரூ.5 லட்சம் வரை பணத்தை இழந்து விட்டதாகவும், இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனினும் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
+2
- வங்கி கிளையில் 14 பெயர்களில் வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ 700 கிராம் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.
- அதிர்ச்சி அடைந்த தணிக்கை அதிகாரிகள் வங்கி மேலாளர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.ஜி.புதூரில் தமிழ்நாடு கிராம வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் டி.ஜி.புதூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஏளூர், அத்தயப்பகவுண்டன் புதூர், வீரசின்னனூர், கொடிவேரி, சின்ன கொடிவேரி உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த வங்கியில் அந்தியூர் அருகே உள்ள தவுட்டுப்பாளையம், வேங்கையர் வீதியை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் வங்கி மேலாளர் குறித்து தலைமை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து கோவை மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் டி.ஜி.புதூரில் உள்ள வங்கி கிளையில் தணிக்கை செய்தனர்.
அப்போது வங்கி கிளையில் 14 பெயர்களில் வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ 700 கிராம் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தணிக்கை அதிகாரிகள் வங்கி மேலாளர் மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நகைகளை திரும்ப ஒப்படைக்க மண்கண்டனுக்கு 2 மாத கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மணிகண்டன் நகைகளை திரும்ப ஒப்படைக்கவில்லை. மேலும் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதையடுத்து வங்கியின் கோவை மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகனிடம் புகார் செய்தார். அவர் இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது வங்கி மேலாளர் மணிகண்டன் தனது உறவினர்கள், நண்பர்கள் 14 பேர் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி அதன் மூலம் சுமார் 2 கிலோ 700 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்ததாக போலியாக கணக்கு காட்டி அதன் மூலம் ரூ.83 லட்சத்தை மோடி செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் 2 வாடிக்கையாளர்களின் 10 பவுன் நகையை கையாடல் செய்து அதை வேறு இடத்தில் மறு அடகு வைத்ததும் தெரிய வந்தது.
மோசடி பணத்தில் வங்கி மேலாளர் மணிகண்டன் ஆன்லைன் சூதாட்டம் விளையாடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து மோசடி செய்த வங்கி மேலாளர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். இந்த தகவல் பற்றி தெரிய வந்ததும் வங்கி முன்பு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். வங்கியின் மண்டல மேலாளர் டேவிட் விஜயகுமார் பொதுமக்களின் நகைகள் பத்திரமாக உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
கைதான வங்கி மேலாளர் மணிகண்டனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர். மேலும் அவரை சஸ்பெண்டு செய்தும் வங்கி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
- மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
- மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
ஈரோடு:
ஈரோடு மாநகரில் கடந்த 4-ந் தேதி ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாட ப்பட்டது. முன்னதாக மாநகரில் உள்ள வணிக நிறுவனங்கள், தொழிற்சா லைகள், அலுவலகங்கள், கடைகள், வீடுகள், வாகன ங்கள் என அனைத்தையும் சுத்தம் செய்து, தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தினர்.
மேலும் குப்பை கழிவுகளை நேரடியாக பெற மாநகராட்சி சார்பில் வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் கடைகள், வணிக நிறுவனங்கள், வீடுகளில் சுத்தம் செய்யப்பட்ட கழிவு பொருட்கள் குவியல், குவியலாக கொட்டப்பட்டுள்ளது.
மேலும் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆயுத பூஜைக்காக சாலையோரம் தற்காலிக கடை அமைத்த வியாபாரிகள் சிலர் விற்பனையாகாத வாழைக்கன்று, பூசணிக்காய், மா இழை போன்றவற்றை அப்படியே சாலையோ ரங்களில் வீசி சென்றுள்ளனர்.
இதையொட்டி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று ஆயுதபூஜை கழிவுகள், குவித்து வைக்கப்பட்டிருந்த வாழைக்கன்று கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இது தொடர்ந்து இன்றும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நான்கு மண்டங்களிலும் குவிக்க ப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி வருகின்றனர். டன் கணக்கில் குவிந்துள்ள கழிவுகளை அகற்றி வருகின்றனர்.
- செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார்.
- திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
ஈரோடு:
ஈரோடு செங்கோடம் பள்ளம் அரச மர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாகாளி. இவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ரமேசுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. ரமேஷ் வீட்டுக்கு சரியாக செல்லாமல் மது போதை யில் ரோட்டோர ங்களில் படுத்து தூங்குவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி ரமேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடல் ஈரோடு அரச ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
- இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவகிரி:
சிவகிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சந்தைமேடு வாரச்ச ந்தையில் அபிவிருத்தி பணிகள் ரூ.4 கோடியே 78 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது சிவகிரி பேரூராட்சி தலைவர் பிரதீபா கோபிநாத், துணைத் தலைவர் கோபால், செயல் அலுவலர் சாத்தூர் கண்ணன்,
தி.மு.க . மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தம், மாவட்ட துணை செயலாளர் செந்தில், கொடுமுடி மேற்கு ஒன்றிய செயலாளர் நடராஜன்,
ஒன்றிய பிரதிநிதி கோபிநாத், செயற்பொ றியாளர் செந்தில்குமார் மற்றும் கவுன்சிலர்கள் தனபால், ரேவதி நடராஜ், நதியா கவுரிசங்கர், சந்தராதேவி பாபுராஜா, பெருமாள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் நிர்வாகிகள் விவசாயிகளுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
- இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் சேர்க்காமல் காலம் தாழ்த்து வதை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.மனோகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் விவசாயி களுடன் சங்கத்தை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து வந்த கூட்டுவு சங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏற்கனவே விண்ணப்பம் கொடுத்தவர்களை உடனடியாக உறுப்பினராக சேர்த்துக்கொண்டதாலும், புதிதாக கொடுப்பவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொ ள்ளப்பட்டு பரிசீலி க்கப்பட்டு உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று உறுதி அளித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதில் மாவட்ட செய லாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில துணைத்தலைவர் எஸ்.எல்.பரமசிவம், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சேக் மொய்தீன், மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் எம்.முனுசாமி, மாவட்ட துணைச் செயலா ளர்கள் ஆண்டவர், ஆர்.பி.நடராஜ்,
மாவட்ட துணைத் தலைவர் அந்தியூர் கார்த்தி, முன்னாள் ஒன்றிய தலைவர் கண்ணன், முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் சுதந்திர ராஜ், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மாதூர், ஐச்சிமார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி (32). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மணி பெருந்து றையில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் மணி அந்தியூரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கால்நடை கடனாக ரூ.1 லட்சம் வாங்கியுள்ளார்.அதற்கு மாதம் ரூ.4,565 தவணை செலுத்தி வந்துள்ளார். தவணை காலம் கடந்து கடன் தொகையை செலுத்து வதாகவும், இதற்காக மணி அபராத வட்டி செலுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மணி வேலைக்கு சென்று இருந்தபோது வங்கியின் மேலாளர் மற்றும் பணியாளர் மணி வீட்டுக்கு வந்து அவரது மனைவியிடம் கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் இல்லா விட்டால் கையெழுத்து போட்டு கொடுத்து கடனை முடித்து கொள்ள நிர்பந்தம் செய்துள்ளனர்.
இது குறித்து அவரது மனைவி தனது கணவரிடம் போனில் பேசியுள்ளார். அதற்கு மணி நீ கடன் வாங்கியதால் தான் இவ்வளவு பிரச்சனை என்று மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ள்ளது.
பின்னர் இரவு மணி வேலையை முடித்து வீட்டுக்கு வந்தபோது மனைவி மற்றும் மகள் வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் குறித்து தகவல் கிடைக்கவில்லை.
இதையடுத்து மணி வெள்ளி திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து மாயமான தனது மனைவி மற்றும் மகளை மீட்டுத் தருமாறு புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
- மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது.
ஈரோடு:
ஈரோடு மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
மின் கசிவு தடுப்பான் மூலம் மின் விபத்தை தடுக்கலாம். ஸ்டே கம்பிகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் எர்த் பைப் அமைக்க வேண்டும்.
மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது. குளியல் அறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்ஜ் அமைக்கக்கூடாது.
மின் கம்பங்களில் அருகே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. அறுந்து போகும் மின் கம்பிகள் தெரிந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.
மின் கம்பங்கள் மீது வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் மூலமும் அகற்றலாம். இடி,மின்னலின் போது வெட்டவெளியில் நிற்க கூடாது.
மின்சாரம் தொடர்பாக மின்னகம் எண்: 9498794987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணுக்கு புகாராகவும், புகைப்படமாகவும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
- சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
ஈரோடு:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குள்ளப்ப நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32) இவர் தனது தாய் மட்டும் பாட்டி சுப்பம்மாள் (75) ஆகியோருடன் வசித்து வந்தார்.
கடந்த 1-ந் தேதி சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
இந்நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் பேரேஜ் நீர்த்தேக்க பகுதியில் சம்பவத்தன்று மூதாட்டியின் உடல் மிதப்பதாக பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்த்தபோது நீர்த்தேக்க பகுதியில் மிதந்த உடல் தனது பாட்டி உடல் என உறுதி செய்தார்.
பின்னர் சுப்பம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சுப்பம்மாள் தவறி நீர்த்தேக்க பகுதியில் விழுந்தாரா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






