குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வாலிபர் சாவு

செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார்.திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.
குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்து வாலிபர் சாவு
Published on

ஈரோடு:

ஈரோடு செங்கோடம் பள்ளம் அரச மர விநாயகர் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாகாளி. இவரது மகன் ரமேஷ் (30). இவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. ரமேசுக்கு மது பழக்கம் இருந்து வந்துள்ளது. ரமேஷ் வீட்டுக்கு சரியாக செல்லாமல் மது போதை யில் ரோட்டோர ங்களில் படுத்து தூங்குவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் செங்கோடம்பள்ளம் பாலத்தின் மேற்புற பகுதியில் மது போதையில் ரமேஷ் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென ரமேஷ் குடிபோதையில் கழிவு நீர் கால்வாய்க்குள் தவறி விழுந்தார்.

இதில் அவர் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் இன்று காலை அந்த பகுதியில் வந்தவர்கள் ரமேஷ் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கயிறு கட்டி இறங்கி ரமேஷ் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோத னைக்காக அவரது உடல் ஈரோடு அரச ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com