வீட்டை விட்டு மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.
வீட்டை விட்டு மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு
Published on

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குள்ளப்ப நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32) இவர் தனது தாய் மட்டும் பாட்டி சுப்பம்மாள் (75) ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 1-ந் தேதி சுப்பம்மாள் பவானியில் உள்ள கூடுதுறை கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. சுப்பம்மாளை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர்.ஆனால் அவர் குறித்து எந்த விதமான தகவலும் தெரியவில்லை.

இந்நிலையில் ஈரோடு வெண்டிபாளையம் பேரேஜ் நீர்த்தேக்க பகுதியில் சம்பவத்தன்று மூதாட்டியின் உடல் மிதப்பதாக பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவர் சென்று பார்த்தபோது நீர்த்தேக்க பகுதியில் மிதந்த உடல் தனது பாட்டி உடல் என உறுதி செய்தார்.

பின்னர் சுப்பம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது. சுப்பம்மாள் தவறி நீர்த்தேக்க பகுதியில் விழுந்தாரா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com