என் மலர்
ஈரோடு
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.
- அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 2,849 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102.48 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் பெரும்பள்ளம், வரட்டு பள்ளம், குண்டேரி பள்ளம் ஆகிய அணைகள் தொடர்ந்து தனது முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது.
- சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார்.
- போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் முத்துக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் நல்லசாமி. விவசாயி. இவர் உடல் நல பிரச்சனை காரணமாக வீட்டில் இருந்து வெளியேறி கொடுமுடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.
இந்நிலையில் சம்பவத்தன்று நல்லசாமி தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்காமல் இருந்ததால் விடுதி ஊழியர் சென்று பார்த்தார். அப்போது கதவு உள்புறமாக தாழ்போட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் நேரில் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது நல்லசாமி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் விடுதியில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கொடுமுடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
- தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கொடுமுடி:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 1-ந்தேதி குடகு மலை யில் காவிரி அம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து காவிரி ஆற்றின் அருகில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஐப்பசி மாதம் 30-ந் தேதிக்குள் காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் செல்வார்கள்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காங்கயம் பாளையம் காவிரி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வ–ரர் கோவிலுக்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தினர் வந்தனர். பின்னர் அகத்திய மகரிஷி லோபமித்ரா காவிரி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செந்தில் குருக்கள், குகநாதன் குருக்கள் மற்றும் சிவாலய நல அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் செயலாளர் காந்தி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஒத்தையடி பாதை அமைக்கப்பட்டு சிறிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
- பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெறுவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சுற்றி சென்று வருகின்றனர்.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தின் அருகே காவிரி ஆறு செல்லும் வழியில் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் பிரதான சாலையாக விளங்கி வருகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணலி கந்தசாமி வீதியின் அருகே பிரதான சாலையில் சிறிய வாய்க்கால் பாலம் பழுது அடைந்து புதைக் குழியாக மாறியது.
இதனையடுத்து கனரக வாகனங்கள் அவ்வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர ஒத்தையடி பாதை அமைக்கப்பட்டு, சிறிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது. ஆனால் பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெறுவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சுற்றி சென்று வருகின்றனர்.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு நேரம் மட்டுமன்றி செலவும் அதிகரித்து வருகிறது. மேலும் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் தகவல் பலகை எதுவும் இல்லாததால் கார்கள் சிறிய ரக சரக்கு வாகனங்கள் லாரிகள் ஆகியவை பாலம் கட்டும் பகுதி வரை சென்று விட்டு மீண்டும் திரும்பி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மட்டும் இன்றி அனைத்து ரக வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு விரைந்து வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இன்று 3-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பணி புறக்கணிப்பில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதால் கிட்டத்தட்ட 210 டன் வரை குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் 1800-க்கும் மேற்பட்டோர் கடந்த 15 வருடமாக ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவுட் சோர்சிங் முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து கடந்த மாதம் 31-ந் தேதி முதல் ஒப்பந்த முறையில் பணியாற்றும் 1800-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காலை 8 மணிக்கு போராட்டத்தை தொடங்கும் பணியாளர்கள் மாலை 5 மணி வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 3-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று 200-க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று பணிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
ஆனால் ஒப்பந்த ஊழியர்கள் இதனை ஏற்காமல் இன்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தொடர்ந்து பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகர் பகுதியில் எந்த ஒரு பணிகளும் நடைபெறவில்லை.
குறிப்பாக மாநகர் பகுதியில் குப்பை அள்ளும் தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலை போல் தேங்கியுள்ளது.
மாநகர பகுதியில் நாளொன்றுக்கு 70 டன் முதல் 75 டன் வரை குப்பைகள் சேரும். தொடர்ந்து 3-வது நாளாக பணி புறக்கணிப்பில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருவதால் கிட்டத்தட்ட 210 டன் வரை குப்பைகள் மலை போல் குவிந்துள்ளன. தெருவோரம் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.
குப்பைகளை தெரு நாய்கள் கிளறி விடுவதால் தெரு முழுவதும் படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சாலையோரம் நடக்கும் பொது மக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.
நேற்று இரவு மாநகர் பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் ஒருவர் திடீரென மாநகராட்சி மேல்மாடிக்கு சென்று தற்கொலை மிரட்டல் விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சக ஊழியர்கள் வேண்டுகோளை ஏற்று அவர் கீழே இறங்கி வந்தார். கீழே இறங்கி வந்த அவரை போலீசார் எச்சரித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து இன்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே ஒப்பந்த பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் நேரடியாக போராட்ட களத்திற்கு வந்து ஆதரவு தெரிவித்து செல்கின்றனர். இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் மொடக்குறிச்சி சரஸ்வதி எம்.எல்.ஏ. மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் வேதானந்தம் உடனிருந்தார்.
- விபத்தில் தனியார் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனி பணியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
- இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பவானி:
பவானி அருகில் உள்ள சித்தோடு சக்தி மெயின் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் இன்று காலை 9.30 மணியளவில் தனியார் கல்லூரி பஸ் மாணவிகளை ஏற்று கொண்டு சென்று கொண்டு இருந்தது.
அப்போது அந்த பஸ் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் அவ்வழியாக பின்னால் வந்த தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்று கொண்டு வந்த பஸ் கல்லூரி பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் தனியார் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனி பணியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மனமுடைந்த கிருஷ்ணா வீட்டில் சமையல் அறையில் தனது துப்பட்டாவால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
- அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம், காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார். இவர் சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், நாடோடி காரளி ஆகும். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணா (27) என்ற மனைவியும், தனுஷா (6) ஹரிஷா (4) அபி (2) என 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சதீஷ்குமார் கோட்டு புள்ளாம்பாளையம் பகுதியில் தங்கி கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமாரின் மனைவி கிருஷ்ணாவிற்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. அதனால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று கிருஷ்ணா சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் மனமுடைந்த கிருஷ்ணா கணவர் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற நேரத்தில் வீட்டில் சமையல் அறையில் உள்பக்கம் தாழிட்டு தனது துப்பட்டாவால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மதிய உணவிற்கு வந்த சதீஷ்குமார் சமையலறை உள்பக்கம் தாழிட்டதை கண்டு உடனடியாக அவரது வேலை செய்யும் மேஸ்திரி நாகராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் 2 பேரும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிருஷ்ணா தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருஷ்ணாவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.
அதனை தொடர்ந்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் அரசு மரத்து வீதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (52) கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு தனது வீட்டிலிருந்து குருவரெட்டியூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அருகில் இருந்த ஜல்லி குவியல் மீது விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அருணாச்சலத்திற்கு ஞானசுந்தரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
- காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.
- அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.
கொடுமுடி:
ஈேராடு மாவட்டம் கொடுமுடியில் புகழ்பெற்ற மகுடேஸ்வரர் கோவில் உள்ளது. காவிரி கரையோரம் அமைந்துள்ள இந்த கோவில் சிறந்த பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது.
இதனால் இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடிய பின்னர் ஆற்றோரம் உள்ள பரிகார கடைகளில் பரிகாரம் செய்து விட்டு பின்னர் சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் காவிரி ஆற்றங்கரையோரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பரிகார கடைகள் அமைத்து இருந்தனர்.
இதையடுத்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பொதுப்பணித்துறை சார்பில் பல முறை நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. ஆனாலும் யாரும் கடையை அகற்ற வில்லை.
இந்த நிலையில் இன்று காலை கோர்ட்டு உத்தரவுப்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை மற்றும் போலீசாருடன் கொடுமுடி காவிரி ஆற்றங்கரைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 14 கடைகளை 4 ஜேசிபி எந்திரங்கள் மூலம் இடித்துஅகற்றும் பணியை தொடங்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அதிகாரிகளிடம் எங்கள் பொருட்களை எடுத்து செல்ல அனுமதி கொடுங்கள் என்றனர். ஆனால் தேவையான அனுமதி கொடுத்து விட்டோம் என்று கூறிவிட்டனர்.
கடைகள் இடித்து அகற்றப்படுவதை பார்த்து ஒரு சில வியாபாரிகள் கதறி அழுதனர். ஆனாலும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து அங்கு பதட்டமான நிலை உருவாகி உள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
- பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.
- அணையில் இருந்து தடப்பள்ளி-அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று வினாடிக்கு 1,600 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 2,800 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 102.24 அடியாக உயர்ந்துள்ளது.
அணையில் இருந்து தடப்பள்ளி -அரக்கன் கோட்டைக்கு 600 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
- மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னிமலைல்:
சென்னிமலை அருகே வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய்கள் ஏலம் நடைபெற்றது.
ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 4 ஆயிரத்து 701 தேங்கா ய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 23 ரூபாய் 10 காசுக்கும், அதிகபட்ச விலையாக 24 ரூபாய் 39 காசுக்கும், சராசரி விலையாக 23 ரூபாய் 79 காசுக்கும் ஏலம் போனது.
மொத்தம் 2 ஆயிரத்து 257 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 52 ஆயிரத்து 623 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
- சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
- இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






