என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A private company bus collided with"

    • விபத்தில் தனியார் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனி பணியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.
    • இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகில் உள்ள சித்தோடு சக்தி மெயின் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் இன்று காலை 9.30 மணியளவில் தனியார் கல்லூரி பஸ் மாணவிகளை ஏற்று கொண்டு சென்று கொண்டு இருந்தது.

    அப்போது அந்த பஸ் திடீரென பிரேக் போட்டு நிறுத்தியதால் அவ்வழியாக பின்னால் வந்த தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்று கொண்டு வந்த பஸ் கல்லூரி பஸ் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் தனியார் கல்லூரி பஸ்சில் பயணம் செய்த 3 கல்லூரி மாணவிகள் மற்றும் தனியார் கம்பெனி பணியாளர்கள் 3 பேர் என 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காயம் அடைந்தவர்கள் சித்தோடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஈரோடு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×