கடன் பிரச்சினையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பிரச்சினையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Published on

அம்மாபேட்டை:

அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.

உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com