search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The construction of the bridge should be"

    • ஒத்தையடி பாதை அமைக்கப்பட்டு சிறிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
    • பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெறுவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சுற்றி சென்று வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டிபாளையம் ரெயில்வே நுழைவு பாலத்தின் அருகே காவிரி ஆறு செல்லும் வழியில் அருகே மணலி கந்தசாமி வீதி உள்ளது. இந்த வீதி ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லும் பிரதான சாலையாக விளங்கி வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மணலி கந்தசாமி வீதியின் அருகே பிரதான சாலையில் சிறிய வாய்க்கால் பாலம் பழுது அடைந்து புதைக் குழியாக மாறியது.

    இதனையடுத்து கனரக வாகனங்கள் அவ்வழியாகச் செல்ல தடை விதிக்கப்பட்டதுடன், இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று வர ஒத்தையடி பாதை அமைக்கப்பட்டு, சிறிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது. ஆனால் பாலம் கட்டும் பணி மெத்தனமாக நடைபெறுவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வாகன ஓட்டிகள் மாற்று பாதையில் சுற்றி சென்று வருகின்றனர்.

    இதனால் வாகன ஓட்டிகளுக்கு நேரம் மட்டுமன்றி செலவும் அதிகரித்து வருகிறது. மேலும் நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்திற்கு செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வோரும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.

    ஈரோடு வெண்டிபாளையம் மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லைப் பகுதியில் தகவல் பலகை எதுவும் இல்லாததால் கார்கள் சிறிய ரக சரக்கு வாகனங்கள் லாரிகள் ஆகியவை பாலம் கட்டும் பகுதி வரை சென்று விட்டு மீண்டும் திரும்பி செல்கின்றன. இதனால் பொதுமக்கள் மட்டும் இன்றி அனைத்து ரக வாகன ஓட்டிகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ஈரோடு மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலம் கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு விரைந்து வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×