என் மலர்
ஈரோடு
- சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- பவானி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஈரோடு:
சட்டவிரோத மதுவிற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி, புளியம்பட்டி போலீசார் காவிலிபாளையம் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தில்லை நகர் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த ராஜன் மனைவி சம்பூர்ணம் (39) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவர் அதிக விலைக்கு விற்பதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு புதர் மறைவில் 8 மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து,போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . மேலும் அவரிடமிருந்து ரூ. 800 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, கொடுமுடி பேருந்து நிலையம், டாஸ்மாக் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட வடிவேல் (37) என்பவரை கொடுமுடி போலீசார் கைது செய்தனர்.
மேலும், பவானி மேற்கு வீதி, ஜோதிபிள்ளையார் கோயில் வீதியில், வேலுசாமி (52) என்பவர் தனது பெட்டிக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, பவானி காவல் துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிட–மிருந்த 4 மதுபாட்டில்கள், ரூ. 300 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
- நுண்ணீர் பாசனத் திட்ட த்தின் கீழ் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வகை விவசாயிகளுக்கும் நிதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்டத்தில் வேளா ண்துறை மூலம் இதுவரை சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு:
பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்ட த்தின் கீழ் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து வகை விவசாயிகளுக்கும் நிதி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வேளா ண்துறை மூலம் இதுவரை சுமார் 58 ஆயிரம் ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டு உள்ளது.
கரும்பு, பருத்தி, மக்காசோளம் போன்ற பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனமும், பயறு வகை பயிர்கள் மற்றும் எண்ணை வித்துப்பயிர்களுக்கு தெளி ப்பான் மற்றும் மழை தூவுவான் போன்ற தெளிப்பு நீர் பாசன கருவி களும் மானியத்தில் வழங்க ப்படுகிறது.
நடப்பு ஆண்டில் 1600 எக்டர் மற்றும் ரூ.20.17 கோடி இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகளை ஆய்வு செய்யும் பொருட்டு சென்னை வேளாண்மை இயக்குநரகம், அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாச னம்) கோபெருந்தேவி ஈரோ ட்டுக்கு வந்து ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்ன சாமி தலைமையில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்த ப்பட்டது. இதில் சென்னை அலுவலக வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி கலந்து கொண்டார்.
இக்கூட்டத்தில் அனைத்து வட்டார வேளா ண்மை உதவி இயக்கு நர்கள், 23 நுண்ணீர் பாசன நிறுவனங்களின் பிரதிநி திகள் கலந்து கொண்டனர்.
இந்நேரடி ஆய்வின்போது சென்னை வேளாண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுவது, மானியம் விடு விப்பது தொடர்பாக வட்டார வாரியாகவும், நுண்ணீர் பாசன நிறுவ னங்கள் வாரியாகவும் ஆய்வு மேற்கொண்டு திட்ட செயலாக்கப்பணிகள் குறித்து உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் பவானி அடுத்த மயிலாம்பாடி பகுதியில் செந்தில்குமார் என்பவரின் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்க ப்பட்ட நுண்ணீர் பாசன ப்பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணி களை சென்னை வேளா ண்மை உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) கோபெருந்தேவி ஆய்வு மேற்கொண்டார்.
இத்திட்டத்தில் சிறு-குறு விவசாயிகள் அரசு விதி முறைகளின்படி நுண்ணீர் பாசனம் அமைக்கும் பட்சத்தில் 100 சதவீத மானியமாக அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு ரூ.48 ஆயிரத்து 253 மற்றும் இதர விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரையில் 75 சதவீத மானி யத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.37 ஆயிரத்து 842 வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை பயிர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 38,762 ஏக்கர் பரப்பில் ரூ.143.54 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன டைந்துள்ளனர்.
குறைந்த நீர் ஆதாரத்தினை கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறுவதோடு, அதிக அளவில் பயிர் சாகுபடி செய்வதற்கு நுண்ணீர் பாசன முறை மிகவும் ஏற்றதாகும்.
எனவே விவசாயிகள் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சி.சின்னசாமி தெரிவித்தார்.
- தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1, பிளஸ் - 2 மாணவ -மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இதேப்போல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 16 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தொடங்கியது.
இந்த மையங்களில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் அரையாண்டு தேர்வு நிறைவு என்பதால் மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளிக்கும் விதமாக நேற்று ஒரு நாள் மட்டும் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து இன்று முதல் வரும் 29-ந் தேதி வரை 4 நாட்களுக்கு தொடர்ச்சியாக நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் 16 மையங்களில் நடக்கிறது.
காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன .
இது குறித்து தகவல் ஏற்கனவே மாணவ -மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.
ஈரோடு:
பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 58,000 ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளது.
கரும்பு, பருத்தி, மக்காசோளம் பயிர்கள் சொட்டு நீர் பாசனம் மூலமும், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் தெளிப்பான், மழை துாவுவான் கருவிகள் மூலம் பயன் பெறுகின்றன. இவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை சென்னை வேளாண் இயக்குனரக உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) கோப்பெருந்தேவி நேரில் ஆய்வு செய்தார்.
பவானி அருகே மைலம் பாடியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்கப் பட்ட நுண்ணீர் பாசன பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 23 நுண்ணீர் பாசன நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வரும் காலங்களில் நுண்ணீர் பாசனம் நிறுவும் போது கடைபிடிக்கும் வழிமுறைகளை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
இணை இயக்குனர் சின்னசாமி பேசியதாவது:-
சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமாக அதிகப்பட்சம், ஏக்கருக்கு, 48,253 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியத்தில் அதிகப்பட்சம் ஏக்கருக்கு, 37,842 ரூபாய் வீதம் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு கடந்த, 5 ஆண்டில், 38,762 ஏக்கர் பரப்பில், 143.54 கோடி ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன் பெற்றனர்.
குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை.
- அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் பவானிசாகர் அணை நீர்மட்டம் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 104.95 அடியாக உயர்ந்தது.
இதனை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும்
அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.58 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 756 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 500 கனஅடி என மொத்தம் 2600 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- இன்று காலை சரஸ்வதி அந்த வழியாக நடந்து செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கிணற்றுக்கள் தவறி விழுந்துவிட்டார்.
- பின்னர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சரஸ்வதியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம், வாணி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம்.
இவரது மனைவி சரஸ்வதி (வயது 65). இவர் தனது மகனுடன் அதே பகுதியில் குடியிருந்து, கயிறு திரிக்கும் தொழில் செய்து வருகிறார். அவரது வீட்டிற்கு அருகில் பொது கிணறு உள்ளது.
70 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றில் தற்போது 2 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இன்று காலை சரஸ்வதி அந்த வழியாக நடந்து செல்லும் பொழுது நிலைத்தடுமாறி கிணற்றுக்கள் தவறி விழுந்துவிட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கயிறு கட்டி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.
பின்னர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சரஸ்வதியை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.71 அடியாக உள்ளது.
- அணையில் இருந்து மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்ததால் பவானி சாகர் அணை நீர்மட்டம் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 104.95 அடியாக உயர்ந்தது.
இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததாலும் அணைக்கு வரும் நீர் வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.71 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 799 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2 ஆயிரம் கன அடி, பவானி ஆற்றுக்கு 100 கன அடி, தடப்பள்ளி- அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 800 கனஅடி என மொத்தம் 2,900 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஈரோடு:
தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதி களில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுக்கநாய்க்கனூர், சின்னாநாயக்கனூர் காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பா ளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை,
எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்ன மேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூர், கரட்டு பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, அய்யம் பாளையம்,
மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், சின்னபுலியூர், பெரியார் நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, வைரமங்கலம், கவுண்டன்புதுார், குட்டிபாளையம்,
வெங்க மேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, பெரியமோள பாளையம், சின்னமோள பாளையம், திப்பிசெட்டி பாளையம், சின்னியம் பாளையம்,
பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலை பாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
- சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
- இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.
போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.
- சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
- கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அடுத்த கொண்டையம்பாளையம் ஊராட்சி இந்திராபுரம் புதுகாலனி பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
போலீசார் விசாரணையில் கொண்டையம்பாளையம் புதுக்காலனியை சேர்ந்த அண்ணன், தம்பியான முத்துக்குமார் (22), அன்பழகன் (19) என்பதும் இவர்கள் வைத்திருந்த பையில் இருந்த பாலிதீன் கவரில் விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அண்ணன், தம்பி இருவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- ஈரோடு மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது.
- கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
ஈரோடு:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியது. டிசம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது.
கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் கிறிஸ்துமசை வரவேற்கும் வகையில் வீட்டின் முன் கிறிஸ்துமஸ் ஸ்டார்களை தொங்கவிட்டும், வீட்டுக்குள் குடில்கள் அமைத்தும் இருந்தனர்.
இது தவிர தேவாலயங்களிலும், வணிக நிறுவனங்களிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்க ப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு 12 மணி அளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.
பெத்தலேகம் என்ற இடத்தில் மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசுவின் பிறப்பை நினைவு கூறும் வகையில் ஆலயத்தில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த குடிலில் குழந்தை இயேசுவின் சிலை (சொரூபம்) வைக்கப்பட்டது.
இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்தில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 5 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
தலைமை ஆயர் ஜேக்கப் லிவிங்ஸ்டன் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதனை தொடர்ந்து காலை 9 மணி அளவில் சிறப்பு பிரா ர்த்தனை நடைபெற்றது.
பிரார்த்தனை முடிந்ததும் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். உறவினர்கள் நண்பர்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ந்தனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்மஸ் பண்டிகை களை கட்டியது.
- காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.
- சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள வள்ளிபுரத்தான்பாளையம், கள்ளியங்காட்டு வலசு, வெற்றி நகரை சேர்ந்தவர் தவசிமணி (38). ஈரோடு மாநகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி தமிழ்செல்வி. சம்பவத்தன்று காலை தூங்கி எழுந்தவுடன் நெஞ்சில் எரிச்சல் இருப்பதாக தவசிமணி கூறியுள்ளார்.உடனடியாக தமிழ்செல்வி அவருக்கு மோர் கொடுத்துள்ளார்.
இருப்பினும் சிறிது நேரத்தில் தவசி மணியால் எழுந்து நிற்ககூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.உடனடியாக தமிழ்செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் தவசிமணியை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தவசிமணி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து வெள்ளோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






